Saturday, August 2, 2014

ஆவி டாக்கீஸ் - ஜிகர்தண்டா


இன்ட்ரோ  
                           கார்த்திக் சுப்பாராஜ் ஒரு மேடையில் இந்தக் கதையை சொதப்பலாக சொன்னார், ஸ்க்ரிப்ட் படித்து தான் புரிந்து கொண்டேன் என்று சித்தார்த் கூறினார்.. அது கார்த்திக்கின் குற்றமல்ல, இது போன்ற கதையை சொல்வதற்கு கொஞ்சம் தலைகீழாய் நின்று தண்ணி குடித்து தான் ஆக வேண்டும்.. முடிந்தவரை நடிகர்களுக்கு அந்தந்த காட்சிகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் சொல்லிக் கொடுத்து வேலை வாங்கியிருக்கக் கூடும். வேலையில்லா பட்டதாரிக்கு பயந்து ஒரு வாரம் தயாரிப்பாளர் பின் வாங்கியதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது.                          

கதை
                           படத்தின் விளம்பரத்தை பார்த்துவிட்டு ஒரு காட்பாதரையோ, பாட்ஷா வையோ எதிர்பார்த்து சென்றால் ஏமாற்றமே மிஞ்சும். மேலும் இந்தப் படத்திற்கு நியாயப்படி U கொடுத்திருக்க வேண்டியது.. U/A சர்டிபிக்கேட் நிச்சயம் ஒரு மாஸ் எபெக்டிட்காக டைரக்டர் போராடி வாங்கியிருக்க வேண்டும். சரி கதைக்கு வருவோம்..

                            ஒரு தாதாவின் கதையை படமாய்  எடுக்க வேண்டி தாதாவின் நடவடிக்கைகள், அவன் வாழ்க்கை முறை, அவன் தாதாவான கதை ஆகியவற்றை தெரிந்து கொள்ள வருகிறான் ஒரு அறிமுக இயக்குனர். தன் தலைக்கு தொழில் முறையிலும், போலிஸ் வகையிலும் ஆபத்து இருப்பதாலும் தன்னை கொலை செய்ய ஒரு உளவாளி வந்திருப்பதை  தெரிந்து கொண்டும்  எல்லோரையும் ஒரு சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறான் அந்த தாதா. ஒரு கட்டத்தில் அந்த உளவாளி யார் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் தாதாவிடம் சிக்கிக் கொள்கிறான் அந்த இயக்குனர்(ன்). தாதாவிடமிருந்து  அவன் தப்பித்தானா? இல்லையா என்பதுதான் கதை. இது முதல் பாதி மட்டுமே, இரண்டாம் பாதியில் எப்படி தப்பித்தான் என்பதை நகைச்சுவையோடு (?!!) சொல்லியிருப்பதுதான் படத்தின் ஆகச்சிறந்த ட்விஸ்ட்டாம் (அப்படித்தாம்பா டைரக்டர் சொன்னாரு)
        
                                                                                                                                            ஆக்க்ஷன் 
                           சிம்ஹா (சூது கவ்வும் படத்தில் பகலவனாய், நேரத்தில் வட்டி ராஜாவாய் வந்து கலக்கியிருப்பாரே, அவரேதான்) படத்தின் முதுகெலும்பு. அசத்தல் நடிப்பு. குறிப்பாக டாய்லெட்டில் தன்னை கொல்ல வருபனை முறைத்துவிட்டு உள்ளே செல்லும் காட்சி ஒன்றே இவர் நடிப்புக்கு சாட்சி.. தமிழ் சினிமாவில் ஒரு தனியிடத்தை பிடிக்க நிச்சயம் வாய்ப்புண்டு.. ஆனால் அதற்கு அவர் இனிமேல் ஜிகர்தண்டா போன்ற படங்களை தவிர்த்தால் நிச்சயம் சாத்தியம். சித்தார்த் அண்டர்ப்ளே பண்ணுகிறேன் பேர்வழி என கிட்டத்தட்ட பாரின் மாப்பிள்ளை கேரக்டர் தான். லக்ஷ்மி மேனனின் கதாப்பாத்திரம் கேக்கின் மேல் வைக்கப்பட்ட செர்ரி போன்றது.. (அது இல்லாவிட்டாலும் கேக்கை நம்மால் ருசித்திருக்க முடியும்)

                             படத்தில் தொய்வு ஏற்படும் போதெல்லாம் நம்மை உற்சாகப் படுத்துவது கருணாகரனின் உடல் மொழியும் டயலாக் டெலிவரியும் தான்.. செம்ம டைமிங் பாஸ். ஆனா நீங்களும் இந்த ஷார்ட்பிலிம் டைரக்டர்கள் கண்ணில் படாமல் ஒரு கேரக்டர் செய்தால் பிழைச்சுக்கலாம். இது ஒரு கேங்ஸ்டர் மூவி என்ற நினைப்பில் அதிரடி ஆக்க்ஷன் காட்சிகள் எதிர்பார்த்து செல்வதை தவிர்ப்பது நல்லது..

இசை- இயக்கம்-தயாரிப்பு
                             இசை- ஒரு சில இடங்களில் நடிகர்களின் நடிப்பை மிஞ்சும் அளவிற்கு சிறப்பான இசையும் இருக்கிறது. சில இடங்களில் ஒரு கத்துக்குட்டியின் இசைக்கு மிக அருகாமையில் இருக்கிறது. மொத்தத்தில் சுமார் தான்..  இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் சந்தோஷ். உங்களை இளையராஜா, ரகுமான் வரிசையில் ஒப்பிடும் ரசிகர்களுக்கு இந்தப் படத்தில் பிரமாதமாக ஒன்றும் தரவில்லை.

                              கார்த்திக் - ஒரு வித்தியாசமான கதையை கையாண்டது தவறில்லை.. ஆனால் பீட்சா எனும் படத்திற்கு அடுத்து பண்ணும் படம் இன்னும் கொஞ்சம் ஸ்க்ரிப்டில் கவனம் செலுத்தியிருக்கலாம். நாட் பேட்- நாட் சோ குட். பணம் போட்ட தயாரிப்பாளரையே கிண்டலடித்து எடுத்தால் அவரோடு பிரச்சனை வராமல் என்ன செய்யும் பாஸு?

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                டிங்-டாங், கண்ணம்மா, பாண்டி நாட்டு பாடல்கள் படத்துடன் பார்க்க இனிமையாக இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் இவ்வளவு டீடைலிங் அவசியம் இல்லை.. சுருக்கமாக சொன்னால் ஆடியன்ஸ் புரிந்து கொள்ள மாட்டார்களோ என்பதால் ஒரு பத்து நிமிடம் நம்மை இழுத்துக் கொண்டு போயிருக்க வேண்டாம்.

                             
Aavee's Comments -  Something missing in the Recipe!

23 comments:

 1. Boss vimarsanam Super..... appo intha vaaram enna panrathu :-)

  Unga website letters ellame romba chinnathaa irukku, ennannu konjam paarungalen, kan ellam valikuthu.

  ReplyDelete
  Replies
  1. சுரேஷ் முதல் வருகைக்கு நன்றி.. ரெண்டு மூணு பேர் சொல்லிட்டாங்க.. நான் கொஞ்சம் பெருசாக்கறேன்.. :)

   Delete
  2. சரபம் எப்படி இருக்குன்னு தெரியல.. வேற வழியே இல்ல.. எக்ஸ்பெண்டபில்ஸ் பார்த்துடுங்க டவுன்லோட் பண்ணி.. செம்மையா இருக்கு!

   Delete
 2. //Suresh KumarAugust 2, 2014 at 1:22 AM
  Boss vimarsanam Super..... appo intha vaaram enna panrathu :-)

  Unga website letters ellame romba chinnathaa irukku, ennannu konjam paarungalen, kan ellam valikuthu.//


  எலே மாங்கொட்டை மண்டையா இன்னுமா பிரவுசரில் "எழுத்துருவை பெருசா" ஆக்கி பாக்க தெரியாம இருக்க?

  ctrl+ "+" or ctrl+ "-" என அழுத்தினால் " எழுத்து பெருசாவோ இல்லை சிறுசாவோ தெரியும்யா , திரிசா தெரியுமானு கேட்டால் கொமட்டுலவே குத்துவேன் :-))
  -------------

  //கார்த்திக் சுப்பாராஜ் ஒரு மேடையில் இந்தக் கதையை சொதப்பலாக சொன்னார், ஸ்க்ரிப்ட் படித்து தான் புரிந்து கொண்டேன் என்று சித்தார்த் கூறினார்.. அது கார்த்திக்கின் குற்றமல்ல, இது போன்ற கதையை சொல்வதற்கு கொஞ்சம் தலைகீழாய் நின்று தண்ணி குடித்து தான் ஆக வேண்டும்.. //

  நாலு ஒலக படத்தில வந்த கதைய ஒரே படத்தில சொன்னா குழப்பாம என்ன செயும் அவ்வ்!

  கார்த்திக் சுப்புராஜ சொந்தமா கடை செய்ய ஆராச்சும் சொன்னா தேவலை :-))

  இந்த கதைலாம் பல வருசம் முன்னமே வந்த ஒலக கதை , முன்னர் "அஜித் நடிச்ச ரெட்" படம் இப்படி உருவுன கதை தான் , அதையே கொஞ்சம் உருவி எடுத்து ஜிகிர் தண்டா ஆகிட்டாரு :-))

  ReplyDelete
  Replies
  1. அதுவும் சரியா கலங்கல..! :P

   Delete
 3. அந்த செர்ரி ......சூப்பர்ய்யா ....ஸ்பை என்னாடான்னா படம் பார்த்துகிட்டே திக் திக்னு பேஸ்புக்ல கமெண்ட் போட்டுட்டு போறாரு ....

  படம் தேறுமா ?தேறாதா?

  ReplyDelete
  Replies
  1. இடைவேளை வரை திக் திக்.... இடைவேளைக்குப் பின் கலகல... படத்தின் நீளம் தான் சற்று அதிகம். இரண்டு மணி ஐம்பது நிமிடங்கள்.... குறைத்திருக்கலாம்....

   Delete
 4. வணக்கம்
  ஆவியப்பா.

  தாங்கள் எழுதும் விர்சம் எப்போதும் ஒரு வித்தியாசமாக இருக்கும் படிக்கும் போது படத்தை பார்கவேண்டும் என்ற எண்ணfக்கரு தோன்றும் த.ம 2வது வாக்கு
  என்பக்கம் வாருங்கள்
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014   போட்டி...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 5. விமர்சனம் நல்லாருக்கு படம் பார்த்துட்டு சொல்றேன்

  ReplyDelete
 6. பட ம் அவ்வளவா நல்லாயில்லைன்னு சொல்றீங்க....

  ReplyDelete
 7. கேக்கின்மேல் செர்ரி!

  என்ன உவமை! ஆஹா...

  அப்போ படம் ஊத்திடுச்சுங்கறீங்களா!

  ReplyDelete
 8. செர்ரி மட்டுமே எடுத்து டேஸ்ட் பண்ற ஆட்களும் இருக்காங்களே???

  ReplyDelete
 9. கேக்கின் மேல் செர்ரி உவமை ரசித்தேன்! அதற்கு தமிழ்வாசி சார் கமெண்ட் கலக்கல்! படம் எப்படி இருந்தா நமக்கென்ன நாமதான் பார்க்கப்போறது இல்லையே!

  ReplyDelete
 10. எங்க ஊர் ஸ்பெசல் 'ஜிகர்தண்டா 'ன்னு தலைப்பை வைத்து விட்டு இப்படி சொதப்பலாமா ?
  அடுத்து ,முள்ளு முருங்கை வடை 'ஆவது நல்லா வரட்டும் !
  த ம 7

  ReplyDelete
 11. நல்ல விமர்சனம் ஆவி! மதுரை ஜில் ஜில் ஜிகர்தண்டா......அது சூப்பரா இருக்கும்....இது சொதப்பல்? கடைசில சொன்ன வரி ரசனை....கேக்கின் மேல் வைத்த செர்ரி போல் லஷ்மி மேனன்......அதாவது செர்ரி இல்லைனாலும் கேக்கை ருசிக்கலாம்...இல்ல கேக்கின் மேல் ஜ்ஸ்ட் அழகுக்காகச் செர்ரி போல சும்மா படத்துக்கு அழகு சேர்க்க லக்ஷ்மி மேனன்?!!!

  ReplyDelete
 12. வணக்கம்,ஆ.வி.சார்!நலமா?///நன்றாக விமர்சன செய்துள்ளீர்கள்,ஆ.வி.எங்கள் திரைக்கு வரட்டும்,பார்ப்போம்!

  ReplyDelete
 13. திட்டினாலும், பாராட்டினாலும் இந்தப் படத்தைப் பார்க்கும் ஆவல் குறைய மாட்டேங்குது!

  ReplyDelete
  Replies
  1. boss indha padam paarththuttu ithoda script eppadi irundhadhunu sollunga

   Delete
 14. (நம்ம தியேட்டர்?!ல)பாத்துட்டேன்,அருமை!

  ReplyDelete
 15. Poiya neyum un vimarchanamum..,.Padam super...This is last time i'm reading ur review. Bcoz Now i knew ur taste...

  ReplyDelete
  Replies
  1. Thanks for your honest and valuable comments Arul. For Karthik's potential this movie is a mere waste.. I still believe he could give a better film with much better standards. Same applies for Santhosh.. This movie can be commercially success but can't never lift the standard of Tamil cinema to World Cinema levels. We have so many directors to give masala entertainers.. Karthik shud do better films.. Again, Jigarthanda is not upto his mark!!

   Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...