தமிழ்நாட்டின் புதிய டிரென்ட், படம் எவ்வளவு மோசமா இருந்தாலும் அதை மக்கள் பார்த்து வசூலில் வெற்றிப் படமாக்கிவிடுவது (முதல் மூன்று நாள் வசூலை சொன்னேன்) சமீபத்திய வரவுகள் "நான்தாண்டா டான்" என்ற வாசகம் எழுதிய டீஷர்ட் அணிந்த ஜிகர்தண்டாவும் அஞ்சானும். இந்தப் படங்கள் வெளிநாட்டுப் படங்களின் இன்ஸ்பிரேஷன் என்பதெல்லாம் தாண்டி எதனால் நெகட்டிவ் ரிவ்யுஸ் பெற்றன என்பதை கொஞ்சம் அலசுவோம்..!
Spoiler Alert
"டான்" எனும் புத்திசாலி:
இருபத்தியேழு வருடங்களுக்கு முன் வந்த "நாயகன்", இருபது வருடம் முன் வந்த "பாட்ஷா". இவை இன்னும் ட்ரெண்ட் செட்டர் படங்களாக இருப்பதற்கு காரணம் அதில் இருந்த உண்மை கலந்த மிகைப்படுத்தல், வேலு நாயக்கர் மற்றும் மாணிக் பாட்ஷாவுக்கு மக்கள் சப்போர்ட் இருப்பதாக காண்பித்ததற்கு பின்புலத்தில் மக்களுக்கு நல்லது செய்யும் காட்சிகள் வைத்திருப்பார்கள். துப்பாக்கியால் சுடுவது மட்டும் ஒரு "டானின்" கடமை என்றில்லாமல் அந்த கதாப்பாத்திரத்தின் புத்திசாலித்தனத்தை பின்னணியில் சொல்லியிருப்பார்கள். (உதாரணம்: உப்பு மூட்டை கட்டி கடத்தல் பொருளை கடலில் மறைக்கும் காட்சி) அங்கே போலீசை ஏமாற்ற/ திசை திருப்ப ஒரு கிளாமர் பாடல் தேவைப்பட்டதால் வைத்திருப்பார்கள். அதேபோல் தன்னை கொல்ல வருபவனை கண்டுபிடிக்க ஆடிப்பாடி களிப்பது போல் நடித்து தன் வலையில் சிக்க வைப்பார் பாஷா பாய்.
அஞ்சானில் இன்டெர்நேஷனல் லெவலில் வெற்றிகரமாக இயங்கி வரும் ஒரு தாதாவை புதிதாக முளைத்த இருவர், அதிலும் ஒருவரே சிங்கிள் மேனாக போய் டாய்லெட் கிளீனர் வண்டியில் வைத்து கடத்துவது ரசிகனை முட்டாளாக நினைத்து எடுக்கப்படும் காட்சி. லேப்டாப்பை பிடுங்கி செல்லும் சிறுவனை அடித்து ஊர் மக்கள் திரும்ப கொடுக்கும் காட்சிக்கு வலு சேர்க்க படத்தில் ஒரு காட்சியும் இல்லை. மக்களுக்கு ஒரு மண்ணாங்கட்டியும் செய்யாத ராஜு பாய்க்கும், அவர் தம்பிக்கும் அவர்கள் எதற்காக உதவ வேண்டும்.
போலிஸ் பவர்:
வேலு நாயக்கர் செய்யும் தவறுகளுக்காக அவரை துரத்தும் போலிஸ் அதிகாரி நாசர் கடைசி வரை தொடர்ந்து அவரை கைதும் செய்து விடுவார்.. அஞ்சானில் போலிஸ் சமந்தாவை ராஜு பாய்க்கு தாரை வார்ப்பதோடு வாலின்டரி ரிட்டையர்மென்ட்டில் போய்விடுகின்றனர். பாட்ஷாவில் தம்பி கேரக்டர் நேர்மையாக இருந்து அவர் செய்யும் தவறுக்கு அரெஸ்ட் செய்ய முயல்வார். ஜிகர்தண்டாவில் போலிஸ் கண்ணில் ஒரு முறை மண்ணைத் தூவியதும் அப்புறம் போலிஸ் தென்படுவதேயில்லை.
திருடன் போலிஸ் என்பது தான் பர்பெக்ட் காம்பினேஷன். போலிஸ் என்பது பிரேமுக்குள் வராமலே போய்விட்டால் டான் படத்திற்கு மதிப்பு குறைந்து போவதில் ஆச்சர்யமில்லை.. இதே விஷயம் தான் பில்லா படம் வென்றதற்கும் பில்லா 2 தோற்றதற்கும் காரணம்.
'டெர்ரர்' டானின் காதல்:
டான் படங்களுக்கு காதல் என்பது அறவே இல்லாமல் இருந்தால் சிறப்பாக இருக்கும். காதல் இல்லாத தமிழ் சினிமா மஞ்சள் கரு இல்லாத ஆப்பாயில் போன்றது. ஆனாலும் அந்த காதல் எபிசொட் முதல் பாதியில் சொற்ப காட்சிகளிலும் இரண்டாவது பாதியில் ஓரிரு காட்சிகளில் மட்டும் வந்து போனால் நலம். காதல் காட்சிகள் முதல் பாதி முழுவதையும் ஆக்கிரமித்து விடுவது மக்களை சலிப்படைய செய்யும், அஞ்சானில் நிகழ்ந்த கொடூரமும் அதுதான். அதிரடியை பார்க்க ஆசையாய் வந்தவர்களுக்கு காதல் காட்சியை காட்டுவது பசியுடன் மட்டன் பிரியாணி எதிர்பார்த்தவனுக்கு சர்க்கரைப் பொங்கலை பரிமாறியது போலாகும்.
தவிர ஊரே பயப்படும் தாதா ஒருவன் யாரோ ஒரு பெண் சொல்வதற்காக நடிகனாக முயற்சிக்கிறான். அவனை வைத்து ஒரு காமெடி படம் எடுத்து பழிதீர்க்கிறான் நாயகன். தாதாவின் கம்பீரம் அங்கேயே விழுந்து விடுகிறது. அட்லீஸ்ட் அந்த தாதா அந்த பெண்ணை ஒன்-சைடாய் காதலித்திருந்தாலாவது அதை ஏற்றுக் கொண்டிருக்கலாம்.
மிரட்டும் இசை :
இதுபோன்ற படங்களுக்கு தேவை மிரட்டும் இசை. இசைஞானி இளையராஜாவின் காந்த இசைதான் வேலு நாயக்கரின் நடிப்புக்கு பக்க பலமாக இருந்தது. ஜிகர் தண்டாவை பொறுத்தவரை இரண்டாம் பாதி காமெடி என்பதால் அதற்கு எப்படி இசையமைப்பது என்ற குழப்பத்திலேயே சந்தோஷ் நாராயணன் கோட்டை விட்டார். கடந்த இரண்டு வருடங்களாக சுமார் இசை மட்டுமே கொடுத்த யுவன் வெற்றியை ருசிக்க வேண்டி எதையோ முயற்சித்து குறட்டை விட்டிருக்கிறார்.
கதை கரு:
படத்தில் ட்விஸ்ட் இருப்பது படத்தை சுவாரஸ்யமாக கொண்டு போக உதவும் தான். ஆனால் படம் நினைத்த பாதையிலெல்லாம் போவதை ட்விஸ்ட் என்று ஏற்றுக் கொள்ள முடியாது. பாட்ஷா படத்தை பொறுத்தவரை எல்லோருக்குமே தெரியும் மாணிக்கம் என்னும் சாதாரண மனிதன் தான் பாட்ஷாவாக இருந்திருப்பான் என்று. இருந்தாலும் அதை மக்கள் ரசித்தார்கள்.. ராஜு பாய் தான் கிருஷ்ணாவாக வந்தது என்று ட்விஸ்ட்ஐ அவிழ்க்கும் போது மக்கள் கொட்டாவி தான் விடுகிறார்கள்.
சூர்யா-தேவா நட்போடு வந்த தளபதியில் மம்முட்டியின் இறப்பு அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும். இதில் வித்யுத்தின் மரணம் நமக்கு சலிப்பையே கொடுக்கிறது. அது வித்யுத் புதுமுகம் என்பதால் அல்ல. திரைக்கதை செய்த குளறுபடியினால் மட்டுமே..!
ஜிகர்தண்டா, அஞ்சான் போன்ற படங்களுக்கு கிடைக்கும் வசூல் தமிழ் மக்கள் ஒரு நல்ல கேங்ஸ்டர் மூவியை எதிர்பார்த்து ஏமாந்து போயிருப்பதையே காட்டுகிறது. இதே மாதிரி இன்னும் ரெண்டு படம் வந்தால் மக்கள் நிச்சயம் "டான்" மூவியின் மேல் உள்ள ஆசையை இழந்துவிடுவார்கள். அதை மட்டும் மனதில் வைத்து இனி விளம்பரம் செய்யும் போது "இது வெறும் மசாலா படம் மட்டுமே" என்று விளம்பரம் செய்தால் சாலச் சிறந்தது.
பி.கு: (மற்றொரு மும்பை 'டான்' விஷ்வா பாயை நான் இதில் குறிப்பிடாததற்கு மன்னிக்கவும். அதற்காக யாரும் தயவு செய்து கண்டனக் கடிதங்கள் எழுத வேண்டாம்)

அடுத்த செங்கோவி ரெடியாட்டாருங்கோ....
ReplyDeleteஎப்படி இன்னொரு சூப்பர் ஸ்டார் உருவாகிட்டார்னு சொல்றது அபத்தமா இருக்கோ அதுபோலதான் "அடுத்த செங்கோவி" டைட்டிலும்.. அதை கைப்பற்ற ஆசையிருந்தாலும் "ஏக் பாஷா, ஏக் செங்கோவி" என்ற உண்மையை அடியேன் அறிந்திருப்பதால் அதை வருத்தத்துடன் மறுக்கிறேன்..! ;)
Deleteயோவ், இங்கேயுமா? அய்யய்யே!
Deleteஇது தான் மொதல்ல.. அப்புறம் தான் அங்கே.. ஹிஹிஹி
Deleteகலக்கல் அலசல் ஆவி..ராஜூ பாய்க்கும் மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பெர்சனலா ராஜூ பாயோட நாம் சின்க் ஆகவும் ஒன்னும் இல்லை. சமந்தாவே லவ் பண்ணுது, அது போதாதான்னு நினைச்சுட்டாங்க போல.
ReplyDeleteசமந்தா டிரெஸ்ஸ பார்த்து ராஜு பாய் லவ் பண்ணியிருந்தா ஒரு லாஜிக் இருக்கு.. ராஜு பாய் டூத் பிக்கை பார்த்து சமந்தா எப்படி? என்னவோ போடா நாராயணா!
Deleteஅந்த கமிசனர் காணாமல் போனது தான் கொடுமை..அதிலும் கமிசனர் ஆபீஸ்ல இருந்து வந்த போனுக்கு கெக்கேபிக்கேன்னு சிரிச்சுக்கிட்டு ரெண்டுபேரும் பதில் சொல்வாங்க பாருங்க.உஸ்ஸ்..அப்பப்பா!
ReplyDeleteஅதெல்லாம் மாஸ் சீன்.. க்ளாப்ஸ் அள்ளும் என்று நினைத்து லிங்கூ வைத்த ஷாட்ஸ்..
Deleteமிகச் சிறந்த அலசல் விமர்சனம்...
ReplyDeleteஅஞ்சான் படத்துக்கு போக எல்லாரையும் அஞ்ச வச்சிட்டானுங்க...
இதுக்கு எம்புட்டு பில்டப்பு... டீசருக்கெல்லாம் விழா எடுத்தானுங்க,...
அப்படி வச்சதுனால தானே முதல் நாளில் 11 கோடி எடுக்க முடிஞ்சது.. இரண்டாவது நாள் ரசிகன் உஷாராயிருவான்ல..
Deleteபடம் பார்க்கலாம் என நினைத்துக் கொண்டிருந்தேன்...
ReplyDeleteபாருங்க.. தீபாவளிக்கு சன் ல போடுவான்னு நினைக்கிறேன்..! ஹஹஹா
Delete‘டான்’ படங்களின் பொதுவான அம்சங்களை அலசிய சிறப்பானதொரு படைப்பு. இணையப் போராளிகள் இவ்வளவு கிழிச்சதுக்கப்பறம் தியேட்டர்ல கூட்டம் குறைஞ்சு காத்து வாங்கும்னு நெனச்சேன். ஆனா நேத்துக்கூட உதயம் தியேட்டர்ல அஞ்சான் பாக்க ஒரு பெருங்கொண்ட கூட்டமே நிக்குது. இந்த மாதிரி ஆடுங்கள நம்பித்தான்லே அவிய்ங்க படம் எடுக்குறாய்ங்க... எத்தனை ஆவிகள் கத்தினாலும் அவங்களுக்கு கவலையில்ல....
ReplyDeleteஉண்மைதான் சார்..
Deleteஅலசலில் உங்கள் சினிமாப் புலமை தெரிகிறது .ஜிகர்தண்டா பாணி படங்கள் வருவது குறையப் போவதில்லை ..மாங்கா மடையர்களை நம்பி எடுக்கப் படும் இப்படிப்பட்ட படங்களால் கோடிகளை அள்ள முடிகின்றதே !
ReplyDeleteத ம 4
/அலசலில் உங்கள் சினிமாப் புலமை தெரிகிறது// நான் அவ்வளவு பெரிய அப்பாட்டக்கர் எல்லாம் இல்லை பாஸ். எதோ எனக்கு தெரிஞ்சத எழுதினேன்.. :)
Deleteஇங்கேயும் கழுவி ஊத்தியாச்சா அவ்வவ்...
ReplyDeleteநம்ம கடமையா சரியா செய்யணும் இல்லையா அண்ணே.. ;)
Deleteஆவி! நல்ல அலசல்! ஆனா, நம்ம மக்கள் இந்த மாதிரி படங்களை சக்ஸஸ் ஆக்கிடறாங்களே....பாத்தீங்கனா, சுப்ரமணியபுரம் வந்து சக்ஸஸ் ஆன் உடனே அதே ட்ரெண்டுல எக்கச்சக்க கதை வந்திருச்சு....இப்ப கூட.....அது என்னமோ தெரில ஒரு படம் சக்ஸஸ் நா உடனே அதே மாதிரி படங்கள் வரிசையா.....
ReplyDeleteகணேஷ் சாரும், பகவான் ஜியும் சொல்லுவது சரியே!
ஆமா சார். அந்த நிலை மாறணும்.. நல்ல படங்களுக்கு மட்டும் மக்கள் ஆதரவு கொடுக்கணும்..!
Deleteபடம் பார்க்காம எல்லா கட்டுரையும் படிச்சதிலே தலை சுத்துது
ReplyDeleteபடம் பார்க்கும் முன்னாடியேவா? ஹஹஹா
Deleteதமிழ்நாட்டுல டான் மூவிஸ் , பேன்டசி டைப் மூவிஸ்லாம் ஒழுங்கா எடுத்து பல வருஷம் ஆகற மாதிரதான் தோனுது. ஆனா, இதுல எங்க ஊர்க்காரங்க எவ்ளோ பரவால்ல . சனிக்கிழமை ஈவ்னிங் ஷோக்கு எங்க ஊர்ல இருக்க மல்டிபிளக்ஸ்ல , அஞ்சான்க்கு மட்டும்தான் டிக்கெட் இருந்துச்சி. ஹெர்குலஸ் உட்பட அத்தன படமும் ஹவுஸ்புல். படம் பாத்தவங்க எல்லாம் கதறிக்கிட்டு வெளிய வர்ரத பாக்கறப்போ , கோடான கோடி நன்றி ஏசப்பானு தான் சொல்லத்தோனுது .
ReplyDeleteஜிகிர்தண்டா படத்துல சிம்மாவ வச்சி எடுக்கற ஸ்பூப் படத்தையே , கார்த்திக் எடுத்திருந்தார்னா, ஒருவேளை நல்லா இருந்துருக்கலாம் .
நீங்க எழுதுன மேட்டர்லாம் லிங்குபாய் படிச்சார்னா, கண்டிப்பா ஒரு நல்ல டான் படம் டுத்த டைம் எடுக்கலாம் .
//நீங்க எழுதுன மேட்டர்லாம் லிங்குபாய் படிச்சார்னா, கண்டிப்பா ஒரு நல்ல டான் படம் டுத்த டைம் எடுக்கலாம் .
Delete///
இதெல்லாம் படிக்க வேணாம்.. அவர் எழுதின ஸ்க்ரிப்டை ஒரு தடவைக்கு ரெண்டு தடவை படிச்சாலே நல்ல படம் கொடுக்கலாம்.. ஆனந்தம் அவர் எடுத்தது தானே?
ஆவி பாஸ்,
ReplyDeleteநம்ம ஊருல படமெல்லாம் எந்த ஜெனர்க்குள்ளும் வராது, சொல்லுறது தான் சும்மா காதல், ஆக்ஷன், மாஃபியா படம்னு , எல்லாத்திலும் "காமெடி,காதல், செண்டிமென்ட், ஆக்சன், ஹாரர்னு கலந்துடுவாங்க, பிச்சக்காரன் சட்டில , மோர் குழம்பு, புளிக்கொழம்பு, கருவாட்டு கொழம்புனு கலந்த சாப்பாடு இருக்காப்பல :-))
நம்ம மக்களுக்கும் "தனியா ஒரு ஃப்ளேவர்ல" சாப்பிட புடிக்காது, பிச்சாக்காரன் சட்டில இருக்க சாப்பாட தான் கேட்கிறாங்க அவ்வ்!
உண்மையான கேங்ஸ்டர் படமெல்லாம் பாக்கணும்னா லத்தின் அமெரிக்கா, கொரியா, ஹாங்காங் படங்களில் தான் கிடைக்கும். அமெரிக்க கேங்ஸ்டர்ஸ் படங்களில் கூட பலவும் மசாலா வகை தான்.
# //தவிர ஊரே பயப்படும் தாதா ஒருவன் யாரோ ஒரு பெண் சொல்வதற்காக நடிகனாக முயற்சிக்கிறான். அவனை வைத்து ஒரு காமெடி படம் எடுத்து பழிதீர்க்கிறான் நாயகன். தாதாவின் கம்பீரம் அங்கேயே விழுந்து விடுகிறது.//
ஜிகர் தண்டாவை யாரோ தப்பா "கேங்க்ஸ்டர்" படம்னு கிளப்பி விட்டு இருக்காங்க, அது "கேங்க்ஸ்டர் ஸ்பூப்" காமெடி படம் அவ்வ்.
ஆங்கிலப்படங்களில் அப்படி இருக்கு, அதைப்போல எடுக்க முயற்சித்திருக்காரு போல , ஆனால் கேங்க்ஸ்டர் படம்னு தப்பா நினைச்சிட்டாரோ இல்லை தப்பா புரிஞ்சிக்கிட்டாரோ என்னமோ அவ்வ்!
//பிச்சக்காரன் சட்டில , மோர் குழம்பு, புளிக்கொழம்பு, கருவாட்டு கொழம்புனு கலந்த சாப்பாடு இருக்காப்பல :-))/// ROFL
Delete//தப்பா நினைச்சிட்டாரோ இல்லை தப்பா புரிஞ்சிக்கிட்டாரோ // அப்படித்தான் நடந்திருக்கணும் பாஸ்!
Deleteஸ்கூல் பையர் சொல்வதை வழி மொழிகிறேன்! இன்னொரு செங்கோவியா தயாராகுறீங்க! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅவருடைய சினிமா அறிவுக்கு பக்கத்தில் கூட நான் வர முடியாது பாஸ்.. எனக்கு இருப்பது வெறும் சினிமா ஆர்வம்.. அவருக்கு நாடி, நரம்பு, ஏன் ரத்தத்தில் கூட சினிமா கலந்திருக்கு.. அவர்கூட ஒப்பிட்டு பேசறதே சந்தோஷமா இருக்கு.. நன்றி நண்பா!
Delete