Wednesday, August 13, 2014

பயணிகள் நிழற்குடை 2014AUG14ப்ரிய சனா..!
கடந்த ஆகஸ்ட் பன்னிரென்டோடு என் தங்கை பெற்றெடுத்த தேவதை இப்பூவுலகில் அவதரித்து நூறு நாட்கள் ஆகின்றன. என் வலைப்பூ நண்பர்களின் ஆசிகள் வேண்டி இதோ என் ப்ரிய 'சனா' வுக்காக!*****OOO*****

ஒரு காபி குடிக்கலாமா?
என் வாசிப்பு ஆர்வத்துக்கு ஆரம்ப காலத்தில் வித்திட்டவர்களில் ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா மற்றும் தமிழ்வாணன் ஆகியோர் முக்கியமானவர்கள். அதிலும் முதலிரண்டு பேர்களின் நாவல்கள் வெளியாகும் தினம் எல்லாம் எனக்கு தீபாவளி தான். இருவர் எழுத்திலும் இருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை எனக்கு பிடிக்கும். விவேக்-ரூபலாவை பிடித்த அளவுக்கு பரத்-சுசீலாவையும் பிடிக்கும்.கூடவே.. தொடர்ந்து படிக்க.

*****OOO*****

பரோட்டா கார்த்திக்- குறும்படம்
     சென்ற ஆகஸ்ட் ஏழு அன்று திரு. வேடியப்பன் அவர்களின் டிஸ்கவரி புக் பேலஸில் பதிவர்கள், எழுத்தாளர்கள் முன்னிலையில் "பரோட்டா கார்த்திக்" திரையிடப்பட்டது. படம் குறித்து பலதரப்பட்ட விமர்சனங்கள் வந்தன. எல்லா விமர்சனங்களும் ஒரு படைப்பாளியின் திறனை மேம்படுத்தவே என்பதால் அவற்றை காதாற கேட்டு, மனதில் இருத்திக் கொண்டோம். வருகை தந்த அத்துணை நண்பர்களுக்கும் இயக்குனர் திரு. துளசிதரன் அவர்கள் சார்பிலும், உதவி இயக்குனர் கீதா ரங்கன் அவர்கள் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

*****OOO*****


இந்த மாத கிராபிக்ஸ்..
    ஆவியை சிக்ஸ் பேக்கில் பார்க்க வேண்டும் என்ற குரு அண்ணாவின் (விபரீத) ஆசைக்கு வேண்டி கிராபிக்ஸ் செய்து முகநூலில் பகிர்ந்த படம், இதோ என் வலைப்பூ நண்பர்களுக்காக.. (ஒன்றிரண்டு பேர் இதை பார்க்க முடியாமல் போச்சேன்னு பீல் பண்ணினதால தான் நான் இங்கே ஷேர் பண்ணியிருக்கேன்.. ;) )*****OOO*****

பார்த்திபன் கனவு - ஒலிப்புத்தகம்
பொன்னியின் செல்வன் அண்ட் ப்ரெண்ட்ஸ் எனும் குழு ஒன்றிணைந்து தயாரித்திருக்கும் ஒலிப்புத்தகம் "பார்த்திபன் கனவு". எழுத்தாளர் இந்திரா சௌந்திரராஜன் தலைமையில் கடந்த ஆகஸ்ட் ஏழாம் தேதி வெளியிடப்பட்ட இந்த ஒலிப்புத்தகம் அமரர் கல்கியின் அற்புதமான காவியத்தை தேர்ந்த கலைஞர்களின் குரல் கொண்டு நேர்த்தியான முறையில் பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார்கள். இந்த Mp3 ஒலிப்புத்தகம் ஒலிக்கும் மொத்த நேரம் 12  மணி 10 நிமிடங்கள். விலை ரூ.250. (அறிமுக சலுகையாக ரூ.200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.)
வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய நபர் திரு.'பாம்பே' கண்ணன் அவர்கள் தொலைபேசி எண் 09841153973. ஈமெயில்: bombaykannan@hotmail.com


*****OOO*****

இப்போதைக்கு அம்புட்டு தான்.. வர்ட்டா..!


28 comments:

 1. கருத்து...! :-) ( ஹா ஹா ஹா )

  ReplyDelete
 2. பரோட்டா கார்த்திக் குறும்படத் திரையிடல் நிகழ்வுக்கு வந்த ஒருவரைக் குறிப்பிட்டு குறிப்பிடாதது மன வருத்தம் தருகிறது.. நீங்கள் குறிப்பிட மறந்ததால் நானே கூறிவிடுகிறேன்...

  அந்த நிகழ்வுக்கு சீனு என்னும் ஒரு பாலகன் வந்திருந்தான் :-)

  ReplyDelete
  Replies
  1. ஆ.........................!!!!!!!!!!!!!!!!!!

   Delete
  2. அதைக் கேட்டு வாசகர்கள் மயங்கி விழுந்திடக் கூடாதேன்னு தான் போடலை.. இப்ப பாருங்க இவர் மயங்கிட்டாரு!
   ஹஹஹா

   Delete
  3. 'பதிவுலக பிதாமகன்' 'பதிவுத்தளபதி' 'எழுத்துலக எழில்வேந்தன் ' 'இலக்கிய சூப்பர்ஸ்டார்' அண்ணன் சீனுவை குறிக்காத ஆவி அண்ணனைக் கண்டித்து , குமரிக்கண்டத்தில் பஃறுளி ஆற்றுக்கரையில் மாபெரும் உண்ணாவிரதப்போராட்டம்

   -இவன்

   'சிந்தனைச்சிகரம்' சீனு தலைமை ரசிகர் மன்றம்,
   இரண்டாம் உலகம்.

   Delete
  4. ஹாஹாஹா! சீனு...நீங்க எங்கள் எல்லோரிலும் ஒன்றாகிப் போனதால்.....பிரித்துப் பார்க்க முடியாத அளவு .தனியாகச் சொல்லணுமானு ஆவி நினைச்சுருப்பார்...இல்லையா ஆவி....(ஓவர் சென்டி ஆகிடுச்சோ!!!!?)

   Delete
  5. ஹாஹாஹாஆ....சீனு...நீங்கள் எங்கள் எல்லோரிலும் ஒன்றாகிப் போனதால்.....பிரித்துப் பார்க்க முடியாத அளவு....அதனால் தனியாகச் சொல்ல வேண்டாம்னு ஆவி நினைச்சுருக்கலாம்......இல்லையா ஆவி?!!1 (ஓவர் சென்டி ஆகிடுச்சோ!!!??)

   Delete
  6. அடடா.........மருமகளுக்கு வாழ்த்து சொல்ல மறந்துட்டனே!(மயங்கி விழுந்ததுனால.)இன்று போல் என்றும் வாழ்க,"சனா" க் குட்டி!

   Delete
 3. வணக்கம்,ஆ.வி.சார்!நலமா?///நிழற்குடை நல்-நிழல் தந்தது!///ஓ.....இதான்,சிக்ஸ் பேக் கா?///ஒரேயொரு ப்ரண்ட் தானே தெரியுது?அதுலயும் மூணு நெஞ்செலும்பு!

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹா.. எல்லா புகழும் ஹ்ரிதிக் ரோஷனுக்கே!!

   Delete
 4. தங்கை பெற்றெடுத்த தேவதைக்கு எங்கள் வாழ்த்துகளும் ஆவி!

  ReplyDelete
 5. சனாவுக்காக எழுதிய கவிதை பிரமாதம்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி வாத்தியாரே!

   Delete
 6. நூறாவது நாள் விழா காணும் மருமகளுக்கு என் வாழ்த்துக்கள்... :)

  ReplyDelete
 7. வணக்கம்
  ஆவியப்பா.

  பிறந்த மருமகளுக்கு எழுதிய கவிதை கண்டு மகிழ்ந்தேன். மற்ற தலைப்புகளில் எழுதிய கருத்துக்களை வாசித்து அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி
  த.ம3வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. அட... ஆவி எப்ப அப்பா ஆனீங்க...? சொல்லவே இல்ல...!

   Delete
  2. ஆவிப்பா வெளியீட்டிற்கு பின்னால இருந்து ரூபன் என்னை அப்படித்தான் அழைக்கிறார்.. :) :)

   Delete
  3. இல்ல ஒருவேளை அவர் போடுற கமெண்ட்ஸ் எல்லாம் எங்க அப்பாவுக்கோ? ;)

   Delete
  4. நன்றி ரூபன் உங்க கருத்துகளுக்கு!

   Delete
 8. கவிதை பட்டாசுணா!! அவ்வளவா கவிதைல ஈடுபாடு இல்லாத எனக்கே, ரொம்ப பிடிச்சிருந்தது. சனாவிற்கு இப்படி ஒரு மாமான் கிடைத்தற்கு வாழ்த்துகள்.

  உண்மையான 6 பேக்கை பார்த்து யாரும் பொறாமை பட்டு தீக்குளித்துவிடக்கூடாது என்பதற்காக, கிராபிக்ஸ் என்று பொய்சொல்லி , பலரை வாழவைத்த உங்களை எண்ணும் போது பெருமை பெருமையாக இருக்கிறது

  ReplyDelete
 9. தங்கை பெற்றெடுத்த தேவதைக்கு இனிய வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 10. கவிதை சூப்பர் ஆவி! உங்க செல்ல தேவதை மருமகளுக்கு நீங்கள் எழுதிய கவிதை! தேவதைக் குட்டிக்கு எங்கள் இனிய வாழ்த்துக்கள்!

  எங்கள் சார்பில் நன்றி சொல்லிய உங்களுக்கு எங்கள் நன்றி! வாழ்த்த வந்திருந்த அனைவருக்கும் எங்கள் நன்றி!

  எப்பங்க 6 பாக் எல்லாம் எடுக்க ஆரம்பிச்சீங்க?!! டைரக்டர்ஸ்....உங்களுக்கு சூர்யா மட்டுமில்ல....6 பாக் வேணும்னா....எங்க ஆவியும் இருக்காரு பாத்துக்கங்க.......

  ReplyDelete
  Replies
  1. மிரண்டுடாதீங்க,டைரக்டர்'ஸ்.'ஆவி' க்கே சிக்ஸ் பேக்கா ன்னு!ஆ.வி.ன்னு பிரிச்சு புரிஞ்சுக்குங்க,ஹ!ஹ!!ஹா!!!

   Delete
 11. தங்கை பெற்றெடுத்த தேவதைக்கு இனிய வாழ்த்துக்கள்!!

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...