Tuesday, August 19, 2014

ஆவி டாக்கீஸ் - கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்


இன்ட்ரோ  
                            வழக்கமான கிளிஷே படங்களுக்கு நடுவே 'வித்தியாசமான படம்' என்ற அடையாள அட்டையுடன் களமிறங்கி அதை முழுமையாக மக்கள் ஏற்றுக் கொள்ளவும் வைத்திருக்கிறார் பார்த்திபன். "அஞ்சான்"  எனும் மிகப்பெரிய எரிமலை (இப்போ புஸ் ஆயிடுச்சு!) மோதுவதற்கு தன் ஸ்க்ரிப்டுக்கு பலம் உண்டு என்ற நம்பிக்கைக்காகவே இயக்குனர் பார்த்திபனுக்கு ஒரு ஷொட்டு..!                          

கதை
                           வாழ்வின் அடுத்த நொடி என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. எது வந்த போதும் அதுவும் கடந்தே செல்லும். பின்னால் நடக்கப் போவதை முன்பே அறிந்தாலும் அதை மாற்றவோ, தடுக்கவோ வாய்ப்பேதுமில்லை. ஆகையால் வாழ்வின் அந்தந்த நொடிகளை வாழ்ந்து விடுவதே புத்திசாலித்தனம் என்பதை சொல்வது தான். க.தி.வ.இ யின் கதை. இந்தக் கதையை இயக்குனராக நினைக்கும் ஒருவனின் வாழ்வோடும், அவன் இயக்கும் படத்தோடும் தண்டவாள ரயில் போல் எந்த ஒரு இடத்திலும் தடம் புரளாது சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

        
                                                                                                                                            ஆக்க்ஷன் 
                               பார்த்திபனின் நாயகிகள் யாரும் இதுவரை சோடை போனதில்லை. அவ்வரிசையில் லேட்டஸ்ட் வரவு அகிலா கிஷோர். நயன்தாராவின் சாயலுடன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும் இன்னொரு சிம்ரன். கண்டிப்பாக கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வர அனைத்து தகுதிகளும் உள்ளது. கேமிராவில் தான் உடைமாற்றும் காட்சி பதிவாகியிருப்பது கண்டு காதலனிடம் மன்றாடும் காட்சியும், பதறாமல், சிதறாமல் பக்குவமாய் நாயகனுக்கு நிஜத்தை உணர்த்திவிட்டு செல்லும் கடைசி காட்சியுமே அவர் நடிப்புக்கு நல்ல எ.கா.                            

                               இயக்குனர் வேடத்தில் நடித்திருக்கும் நாயகன் சந்தோஷ் நல்ல அறிமுகம். காதல் காட்சிகளில் கொஞ்சம் தேற வேண்டும் என்ற போதும் மற்றபடி ஒக்கே. நாயகனுக்கு இணையாய் கலக்கியிருக்கும் மற்றொரு கதாப்பாத்திரம் தம்பி ராமையா. மனிதர் இதே போன்ற கதாப்பாத்திரத்தில் ஏற்கனவே நடித்திருந்தாலும் இதில் சலிப்பு தட்டவில்லை. தினேஷ், லல்லு, சாஹித்யா, விஜய் ஆகியோர் உதவி இயக்குனர்களாக தங்கள் கேரக்டரை அளவோடு செய்திருக்கிறார்கள்.

                                  படத்தில் சிறிதே வந்த போதும் மனதை அள்ளிச் செல்பவர் அமலா பால். கொஞ்சம் காதல், கொஞ்சம் ஜாலி, கொஞ்சம் சென்டிமென்ட் என செம்ம ஆக்டிங். ஆர்யா கூட நல்லாத்தான் நடிச்சிருக்கார். விஜய் சேதுபதி, விஷால், டாப்ஸி, விமல், இனியா, பரத், சாந்தனு,சேரன் மற்றும் பிரகாஷ்ராஜ் என நட்புக்காக ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. தயாரிப்பாளர் தனஞ்செயன் 'அவராகவே' நடித்திருக்கிறார். அப்பப்போ இடைச்செருகலாய் நடிகர் பார்த்திபனும்..!


இசை
                                  நடிகர்களை போலவே இசைக்கும் ஒரு பெரிய பட்டாளம் வேலை செய்திருக்கிறது. சத்யா பின்னணி இசையையும் ஒரு பாடலையும் கவனித்துக் கொள்ள தமன், விஜய் ஆண்டனி, சரத் மற்றும் அல்போன்ஸ் ஜோசப் ஒவ்வொரு பாடலுக்கு இசையமைத்திருக்கிறார்கள்.                                                                                                

                                                                                 கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம் 
                                  கதையே இல்லாமல் திரைக்கதையின் மூலமே படத்தை நகர்த்திச் செல்வது மட்டுமல்லாமல், ஆடியன்ஸை அவ்வப்போது தன் "நச்" வசனங்களால் சிரிக்க வைத்து, அதே சமயம் திரைக்கதையின் ஓட்டத்தோடு ஒன்ற வைத்து நிச்சயம் சிறப்பாக செய்திருக்கிறார் இயக்குனர் பார்த்திபன். ஒரு சில இடங்களில் கொஞ்சம் குறும்பட எபெக்ட் தெரிந்தாலும் மொத்தத்தில் சபாஷ் சொல்ல வைக்கும் படம்.


                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                  ஆர்யா-அமலா பால் ஜோடியின் கதை ஆடியன்ஸ் ஒவ்வொருவனும் ஒவ்வொரு விதத்தில் தன் வாழ்க்கையுடன் பொருத்திப் பார்க்க கூடிய அருமையான எபிசோட். "வெண்மேகம் போலவே", "காற்றில் கதையிருக்கு" பாடலும் இனிமை. இப்படி ஒரு கிளைமாக்ஸ் இதற்கு முன் தமிழ் சினிமாவில் வந்திருக்கிறதா என்பது சந்தேகமே!

                           
Aavee's Comments -  A complex algorithm looks simple!

18 comments:

 1. படத்தை ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. அப்போ விமர்சனத்தை ரசிக்கலேன்னு சொல்ல வர்றீங்களா? ;);)

   Delete
 2. அருமையான விமர்சனம்
  அவசியம் படம் பார்க்கிறேன் நண்பரே

  ReplyDelete
 3. வித்தியாசமான படம் என்று நானும் ஆங்காங்கும் இங்கும் படித்ததிலிருந்து தெரிந்து கொண்டேன்.

  இடை இடையே சில குறள்கள் காட்டியிருப்பதைப் பற்றியும் பேஸ்புக்கில் படித்தேன்.

  ReplyDelete
 4. வித்தியாசமான இந்த முயற்சியைப் பாராட்டுவதற்காவாவது தியேட்டர்ல போய் படத்தைப் பார்த்துடறதுன்னு முடிவு பண்ணியிருக்கேன்.

  ReplyDelete
 5. //"அஞ்சான்" எனும் மிகப்பெரிய எரிமலை // சொரிமலைனு சொல்லிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்ணா. படத்த பாத்துட்டு அவனவன் தலைய சொரிஞ்சிகிட்டுதான் வரானுங்க .

  நானும் இன்னைக்கு ப்ளான் பன்னிருக்கேன்ணே!! அதுக்குமுன்னாடி உங்க விமர்சனம் படம் பாக்கர ஆர்வத்த அதிகமாக்கிடுச்சி!!!

  ReplyDelete
 6. வணக்கம்
  தங்களின் பார்வையில் நன்றாக சொல்லியுள்ளீர்கள் சொல்லிய விதத்தை படிக்கும் போது படம் பார்க்க வேண்டும் என்ற உணர்வு வருகிறது
  த.ம 3வது வாக்கு

  என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: வடிந்து உருகும் தாயுள்ளம்:

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 7. யாராக இருந்தாலும் இந்த மாதிரி ஒரு படத்தை எடுப்பதற்கு தயங்குவார்கள்... பார்த்திபன் எப்போதுமே வித்தியாசமானவர் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார்....

  ReplyDelete
 8. அஞ்சான் செம போர், மொக்கை. பார்த்திபனின் படத்தைப் பற்றி நல்ல விமர்சனங்கள் வருகின்றது. பார்க்க வேண்டும். அவர் ஒரு நல்ல டைரக்டர், விச்சியாசமான டைரக்டர்.....வசனங்கங்களில் கூட.....வித்தியாசம் இருக்கும்.....அதுவும் அவர் கொடுத்த அட்.....அஞ்சானுக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் என் படத்தைப் பார்க்க வாருங்கள்னு கொடுத்தது கூட ஒரு வித்தியாசமாக ஸ்ட்ராட்டஜியோ?!!

  ReplyDelete
 9. படம் எப்படியோ உங்க விமரிசனம் நல்லாருக்கு!

  ReplyDelete
 10. பார்த்திபனின் படங்கள் பெரும்பாலும் சோடை போகாது! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 11. உங்க விமர்சனம் படம் பார்க்கத்தூண்டுகின்றது விரைவில் பார்த்துவிடுவோம்.

  ReplyDelete
 12. வணக்கம்,ஆ.வி.சார்!நலமா?///பாரதிராஜா பாசறையிலிருந்து வந்த ஒருவர்.நடிப்பிலும் சரி,இயக்குவதிலும் சரி அவருக்கென்று ஒரு பாணி இருந்தது.இப்போதும் இருக்கும் என்று நம்பலாம்.இப்போதைய,டிரெண்ட் மாறிட்டதால கொஞ்சம் கேப் விழுந்துட்டுது.விமர்சனம் நன்று!

  ReplyDelete
 13. விமர்சனம் அருமை. பாத்துருவோம்.

  ReplyDelete
 14. அஞ்சான் பாதி பாத்தாச்சு. க.தி.வ.இ இன்னும் பாக்கல. டிவிடி இருக்கு. அருமையான விமர்சனம். ஹாரிக்கு சரியான போட்டி நீங்க தான். நமது வலைத்தளம் : சிகரம்

  ReplyDelete
 15. ஹார்ட்பீட் தொண்டு நிறுவனம் செ.சொர்ப்பனந்தல் பதிவு எண் : 321/2009 சார்பில் வெளிவரும் இதயத்துடிப்பு செய்திமடலிற்கு தங்கள் படைப்புகளையும், நன்கொடையும் தந்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். படைப்புகளை அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் முகவரி : editoridhathudippu@gmail.com. தொடர்பு எண் 9940120341, 9524753459, 949703378,

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...