Sunday, July 6, 2014

ஆவி டாக்கீஸ் - தொட்டால் தொடரும் (Music Review)

                          "துவார்" சந்திரசேகர் தயாரிப்பில் கேபிள் சங்கர் இயக்கி, தமன் அருந்ததி நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் படம் "தொட்டால் தொடரும்". டைகர் ஆடியோஸ் வெளியிட்டிருக்கும் இந்த ரொமேன்டிக் த்ரில்லர் படத்தின் ஆடியோ சமீபத்தில் சத்யம் தியேட்டரில் வெளியிடப்பட்டது. இதன் பாடல்கள் எப்படியிருக்குன்னு பார்ப்போம்..
1. படத்தின் டீசராய் முன்பே வெளிவந்து மக்களின் அபிமானத்தை பிடித்த பாடல் "Bossu Bossu".  இயந்திரமயமாகிவிட்ட உலகில் தான் தன் சுகம் என்று வாழப் பழகிவிட்ட மனிதர்களையும், சமூக அவலங்களையும் கேஷுவலாக சொல்லும் பாடல்.. அந்தோணி தாசன் குரல் பாடலுக்கு பெரிய ப்ளஸ். சாக்ஸபோனில் ஆரம்பித்து, ட்ரம்ஸ், கீபோர்ட் என ஒரு கலக்கல் ஜுகல்பந்தி வைக்கிறார் இசையமைப்பாளர் பி.சி. சிவன். முதல் முறை கேட்கும்போதே எல்லோரையும் ஈர்க்கும் பாடல்.

2. பூப்போல..பூப்போல - கணேஷ் வெங்கட்ராமன், பத்மலதா பாடியிருக்கும் டூயட் பாடல். பாடலின் வரிகளை சிறிதும் பாதிக்காத வண்ணம் ஒலிக்கும் இசை கேட்பதற்கு இசைவாய் உள்ளது. ஆயினும் பாடல் படமாக்கிய விதத்தில் தான் ரசிகன் தியேட்டரில் அமர்ந்து கேட்பதும், கேண்டீனில் பப்ஸ் வாங்க செல்வதும் இருக்கிறது.

3. Kiss of the Fate - இசையமைப்பாளர்கள் தங்கள் படங்களில் ஒரு பாடல் பாடும் கலாச்சாரம் இதிலும் தொடர்கிறது. பி.சி. சிவன் தானே இசையமைத்து பாடிய பாடலிது. இரண்டரை நிமிடமே ஒலிக்கும் இந்த மெலடி தாளம் போட்டு ரசிக்கும்படி உள்ளது.. புதிதாய் காதல் பூத்த ஒருவனின் மனத்துள்ளல் இசையின் அசைவில் துளிர்ப்பதை காணலாம்.

4. காரத்திக், வந்தனா ஸ்ரீநிவாசன் குரல்களில் வசீகரிக்கும் பாடல் "பெண்ணே.. பெண்ணே". காதலில் விழுந்த நாயகனும் நாயகியும் காதலால் உண்டான கெமிஸ்ட்ரி மாற்றங்களை பகிர்ந்து கொள்ளும் பாடல். ஒக்கே ரகம்.

5. "யாருடா மச்சான்" - ஆல்பத்தின் அசத்தல் பாடல். பண்பலைகளில் இனி சில மாதங்கள் முதலிடம் பிடிக்கப் போகும் பாடல். சத்யபிரகாஷ், வந்தனா ஸ்ரீநிவாசன் பாடியிருக்கும் இளமை துள்ளும் பாடல். சாமி படத்தில் வரும் "அய்யய்யோ பிடிச்சிருக்கு"  பாடலின் சாயல் ஆங்காங்கே தெரிந்தாலும் பாடல் இனிமையாக இருக்கிறது..

"காதல் என்ன தாய்ப்பாலா அழுதவுடனே கிடைக்க.. 
                காதல் என்ன கடலலையா ஓடிவந்து ஓடிவந்து காலை நனைக்க.."

                போன்ற வரிகள் பாடலை மெருகேற்றுகிறது..  

6. Kiss of the Dragon  (தீம் மியூசிக்) -  விறுவிறுவென ஹைபிட்சில் ஒலிக்கும் இசை நிச்சயம் பின்னணியில் நம்மை ரசிக்க வைக்கும்.


                     மொத்தத்தில் "தொட்டால் தொடரும்" இசை தொடர்ந்து கேட்க வைக்கிறது..

19 comments:

 1. பார்க்கலாம் விரைவில் வெளிவர இருக்கும் இப் பாடலையும் :))
  மிக்க நன்றி ஆவிச் சகோதரா பகிவுக்கு .

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ, வருகைக்கும் கருத்துக்கும்..!

   Delete
 2. யாருடா மச்சான் பாடலின் இசை, பாடிய குரல்கள், கேபிள் அதை காட்சிப்படுத்தி இருக்கும் விதம், ஒளிப்பதிவாளரின் கைவண்ணம் எல்லாம் சேர்ந்து மனசை அள்ளுது ஆவி. மகிழ்வான பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும் கேபிள் சங்கருக்கு.

  ReplyDelete
  Replies
  1. பாடல் வெளியீட்டு விழாவுக்கு வர முடியாமல் போன வருத்தம் இன்னும் இருக்கிறது.. படத்தின் வெற்றி விழாவிற்கு எல்லாரும் சேர்ந்து போலாம்..

   Delete
 3. யாருடா மச்சான், பெண்ணே பாடல்களும் காட்சி அமைப்பும் நல்லா வந்திருக்கு நண்பா

  ReplyDelete
  Replies
  1. அப்படியா.. நான் தான் மிஸ் பண்ணிட்டேன்

   Delete
 4. ஆக முதலும் கடைசியும் ஹிட்...!

  ReplyDelete
 5. கேபிள் சங்கர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பாடல்கள் கேட்க விருப்பம்.

  ReplyDelete
 6. பாஸு பாஸு பாடலை கேட்டு ரசித்தேன்! மற்ற பாடல்களை தரவிறக்க வேண்டும்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 7. பாஸூ பாஸூ கேட்டாச்சு... செம...
  மற்ற பாடல்கள் தரவிறக்கம் செய்து கேட்க வேண்டும்...

  ReplyDelete
 8. படம் பார்த்துட்டு நானும் சொல்றேன்.

  ReplyDelete
 9. நண்பர் கேபிள் சங்கரின் படப் பாடல்களை அறிமுகம் செய்ததற்கு வாழ்த்துக்கள் ,பாடல்களைப் போன்றே படமும் நன்றாய் இருக்குமென எதிர்பார்க்கிறேன் !
  கடந்த வருடம் ஜோக்காளிக்கு சிறந்த நகைச்சுவை பதிவர் என்று அவார்ட் தந்ததற்கு உங்களுக்கு என் நன்றி ,காண்க >>>http://www.jokkaali.in/2014/07/blog-post_8.html
  த ம 8

  ReplyDelete
 10. பாடல்கள் கேட்கின்றோம்! படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 11. வணக்கம்,ஆ.வி சார்!நலமா?///கேபிளார் படப் பாடல்கள் விமர்சனத்துக்கு நன்றி.கேட்போம்!

  ReplyDelete
 12. தங்கள் பதிவு வலைச்சரத்தில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது! //http://blogintamil.blogspot.in/2014/07/cocktail-fizzy-crissppy.html// நன்றி !

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...