Wednesday, November 20, 2013

காலை எழுந்தவுடன் கொலை!! (க்ரைம் தொடர்-4)

பகுதி-1 


                       
                      மாலையில் ஆனந்த் லாவண்யாவை ஹாஸ்டலில் டிராப் செய்துவிட்டு சுந்தர் வீட்டுக்குச் செல்ல அங்கு சுந்தர் வீட்டைப் பூட்டிவிட்டு ஹீரோ ஹோண்டாவில் கிளம்பினான். ஆனந்தின் குரல் கேட்டும் திரும்பிப் பார்க்காமல் சென்றான். ஆனந்த் அவனைப் பின்தொடர்ந்து தன் யமஹாவில் சென்றான். சுந்தர் பல நெடுஞ்சாலைகளை கடந்து ஒரு குறுகலான சந்தில் நுழைய, ஆனந்தும் பின்னாலேயே செல்ல அப்போது மறைவில் ஒளிந்து கொண்டிருந்த யாரோ ஒருவன் ஒரு உருட்டுக் கட்டை கொண்டு ஆனந்தின் மண்டையில் ஒரு போடு போட்டான். ஆனந்த் மயங்கியபடியே பைக்கை சுவற்றில் இடித்துவிட்டு கீழே விழுந்தான்.

                         அவன் கண்விழித்த போது ஒரு சேரில் கட்டப்பட்டிருப்பதை உணர்ந்தான். அவன் கைகள் ஒருசேர முன்பக்கமாக கட்டப்பட்டிருந்தது. அவன் எதிரில் நான்கு பேர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். ஆனந்த் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ஒரு விசில் அடித்தான். ஒருவன் திரும்பி 'என்ன' என்றான். 'தண்ணி' என்று தாகமேடுப்பதுபோல் தன் ஆதாம் உருண்டைகளை மேலும் கீழும் அசைத்து காட்டினான். ஒரு டம்ளரில் எடுத்து வந்த அடியாளிடம் " ஏய், என்ன செய்யற நீ. இவனுக்கு சோறு தண்ணி எதுவும் கொடுக்காதீங்க.பட்டினி போட்டே சாகடிக்கணும்' என்றபடி கோட் சூட் அணிந்த தாடிவாலா ஒருவன் உள்ளே நுழைந்தான்."டேய் ஆனந்த், உனக்கு நான் ஏற்கனவே வார்ன் பண்ணினேன். நீ கேக்கலே. இப்போ அனுபவி. நீ சாகப் போறேங்கிறதுக்காக உன்கிட்ட என்னைப் பத்தி எல்லா உண்மைகளையும் வழக்கமா எல்லா வில்லன்களும் சொல்ற மாதிரி சொல்வேன்னு நினைக்காதே. நான் புத்திசாலி" என்றவுடன் ஆனந்த் கிண்டலாக சிரித்தான்.

                          'ஏண்டா சிரிக்கிற?' 'நிறைகுடம் நீர்தழும்பல் இல். புத்திசாலின்னு மனசில நினைசுகிட்டு நிறைய தப்பு பண்ணிட்டீங்க. கொலை நடந்த இடத்துல யாருக்கும் கிடைக்காத தடயம் எனக்கு கிடைச்சிருக்கு.' என்று ஆனந்த் சொன்னவுடன் அவன் முகத்தில் வியர்வை அரும்பியது. 'நா.. எந்த தடயமும் விடலையே' என்றான். 'கொலைகளை நீ செஞ்சா தானே விடறதுக்கு' என்று ஆனந்த் சொல்லவும் அவன் முகத்தில் மேலும் கலவரம் சேர்ந்து கொண்டது. அவன் பதட்டத்தில் ஜன்னல் புறமாக திரும்ப ஆனந்த் கட்டை அவிழ்க்க முயற்சித்தான். சட்டென திரும்பிய அவன், 'டோன்ட் மூவ், தப்பிக்க நினைச்சே, சூட் பண்ணிடுவேன். ஹேண்ட்ஸ் அப் மேன்" உடனே ஆனந்த் "அடேய் அப்ரசண்டி, துப்பாக்கிய தூக்கினதும் ஹேண்ட்ஸ் அப் சொல்லிடறதா? கைய கட்டி வச்சிட்டு ஹேண்ட்ஸ் அப்புன்னா என்ன அர்த்தம். ம்ஹூம் உனக்கு ட்ரெயினிங் பத்தாது."  இதைக் கேட்ட அவன் அடிக்க வர அதற்குள் போன் சிணுங்கியது. அதை காதுக்கு கொடுத்து "ஹலோ, கிருஷ்ணா ஸ்பீக்கிங்" என்றபடி பேச ஆரம்பித்தான். ஆனந்தின் முகத்தில் ஒரு ஏளனச் சிரிப்பு.

                         அவன் பேசி முடித்ததும் ஆனந்திடம் வந்தான். "அப்ப உனக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சு இல்லே. உன்ன உயிரோட விட்டா எங்களுக்கு ஆபத்து. நான் உன்னை வந்து கவனிச்சுக்கறேன்." என்று கூறிவிட்டு தன் உதவியாளன் ஒருவனிடம் "ராஜ், நம்ம அடுத்த டார்கட் இந்த பேப்பர்ல எழுதியிருக்கேன், நீ வழக்கம் போல ஏற்பாடுகள கவனி, மத்தத தலைவர் பாத்துக்குவார்." என்றபடி ஒரு பேப்பரை அவன் கைகளில் திணித்தான். பின்னர் அங்கிருந்த மூன்று அடியாட்களுடன் வெளியேறினான். அவர்கள் சென்றதும் ராஜ் அங்கிருந்த பிரிட்ஜில் இருந்து ஸ்காட்ச் விஸ்கியை எடுத்து முன்பே குடித்துக் கொண்டிருந்த ஒரு கிளாசில் ஊற்றினான். பின்னர் ஆனந்துக்கு எதிரில் இருந்து ஒரு சோபாவில் அமர்ந்தபடியே தொலைக்காட்சியை ஆன் செய்தான்.

                           நான்கைந்து ரவுண்டுகளுக்கு பின்பு அவன் சற்று தள்ளாடுவதை கண்ட ஆனந்த் தனது சர்ட் காலரில் ஆபத்துக்கு உதவ வைத்திருந்த பிளேடை பற்களால் கடித்து இழுத்து பின், கைகளை கட்டியிருந்த கட்டை அறுத்து அவிழ்த்துக் கொண்டான். தப்பி வெளியே சென்றவன் மீண்டும் உள்ளே வந்து போதையில் தள்ளாடிக் கொண்டிருந்தவனை தட்டி எழுப்பி " ஹலோ பிரதர், குட் ஈவனிங் அண்ட் குட் பை" என்று கூறி இரண்டு குத்துவிட்டு அவனை ஒரு சேரில் உட்கார வைத்து அவன் கைகளை பின்பக்கமாக கட்டியபடி " டேய் மட சாம்பிராணி, ஒரு ஆளை கட்டிப் போடணும்னா பின்பக்கமா கட்டிப் போடணும், இந்த பேஸிக் ரூல் கூட தெரியாத நீங்க எல்லாம் கிரிமினல்ஸ்.."  என்று கூறிவிட்டு நகர முயன்ற போது அவன் மூளையில் ஒரு பிளாஷ் அடித்தது. திரும்பி வந்து ராஜின் சட்டை பாக்கெட்டில் இருந்த அடுத்த டார்கெட் என கிருஷ்ணா சொல்லிக் கொடுத்த பேப்பரை எடுத்துக் கொண்டான். "ஸீ யு லேட்டர்" என்று அவன் கன்னத்தில் தட்டியபடி வெளியே வந்த ஆனந்த் தன் யமஹா நிற்பதை பார்த்துவிட்டு "புத்திசாலி, புத்திசாலின்னு சொல்லிட்டு குடிகாரன காவலுக்கு வச்சிட்டு, பைக்கையும் வச்சிருக்கான். கிருஷ்ணா, யு ஆர் ரியலி கிரேட் டா கண்ணா" என்றபடி யமஹாவை கிளப்பினான்.

                               
தொடரும்..

15 comments:

  1. ஆந்திர சினிமாவுல கூட இப்படி கேனையான வில்லன்களைப் பார்த்ததில்ல ஆவி! ஹா... ஹா... ஹா...!

    ReplyDelete
    Replies
    1. சார், இது ஒரு பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எழுதின கதை சார்.. அந்த காலகட்டத்துக்கு ஒப்பிட்டு பாருங்க.. ஹஹ்ஹா..

      Delete
  2. பேஸிக் ரூல் கூட தெரியாத கிரிமினல்ஸ்....! அதானே...@!

    ReplyDelete
  3. //டேய் மட சாம்பிராணி, ஒரு ஆளை கட்டிப் போடணும்னா பின்பக்கமா கட்டிப் போடணும், இந்த பேஸிக் ரூல் கூட தெரியாத நீங்க எல்லாம் கிரிமினல்ஸ்.." // யோவ் போன பதிவுல எழில் அக்கா கிட்ட சொன்ன ட்விஸ்ட் இது தானா ... :-))))))

    //கிருஷ்ணா, யு ஆர் ரியலி கிரேட் டா கண்ணா" என்றபடி யமஹாவை கிளப்பினான்.// இது யார் அந்த கிருஷ்ணா

    உங்க மொத்த பதிவையும் இப்போ தான் படிச்சேன்.. நாட்களா யார் பதிவுக்கும் போகலை.. சுமை, அலுப்பு இத்தியாதி இத்யாதி..

    பட் கமெண்ட்ஸ் எல்லாம் படிச்சேன்..

    மை சஜசன்

    இது நீங்க முன்னாடியே எழுதி வச்சதாவும், இப்போ அப்டியே டைப் பண்ணி போடுறதாவும் சொல்றீங்க..

    விச் மீன்ஸ் ஸ்டாப் தட்...

    ஏன்னா இப்ப கடைசியா எழுதின கடவுள் கோட்பாடு மற்ற சில பதிவுகள்ள உங்க எழுத்து நல்லாவே மெருகேறியிருக்கு அதுனால இதையும் மெருகேத்துங்க

    சில இடங்கள்ள எதாவது உவமை சேர்த்த நல்லா இருக்கும்,வந்தான் போனான் நடந்தான் இருக்கு..

    ஆனந்த் கைய கட்டி போட்ருகாங்க.. அத கயிறின் அரவணைப்பு (அ) பாசப்பிணைப்பு தான் அந்த நாற்காலியுடன் சேர்த்து கட்டபட்டிருகிறோம் என்பதை மேலும் உறுதி செய்தது. தலையில் அடி விழுந்ததன் பின்பு முதன் முறையாக தன கண்களைத் திறந்தான்....

    இந்த மாதிரி கொண்டு போங்க..

    இது தொடக்கம் தான்.. STILL YOU HAVE LOT OF BASE AND SPACE...

    அறியாச் சிறுவன் தெரியாது உளறி இருந்தால் மன்னிக்கவும்

    ஸ்வாமியே சரணம் ஐயப்பா

    ReplyDelete
    Replies
    1. //இது யார் அந்த கிருஷ்ணா

      உங்க மொத்த பதிவையும் இப்போ தான் படிச்சேன்..//

      இரண்டு ஸ்டேட்மண்டும் முரணா இருக்கே.. முழுசா படிச்சிருந்தா கிருஷ்ணா யாருன்னு தெரிஞ்சிருக்குமே! (இந்த பகுதில தானே அவன் வர்றான்..

      Delete
    2. இந்த பகுதி எழுதும் போது அதை யோசிச்சேன். கொஞ்சம் வரிகளை மாற்றலாம் என்று, பின்னர் அதே ப்ளேவரில் இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.. அடுத்த பகுதியில் உரை 'நடை' யை ஆவி 'நடையாய்' மாற்றி விடுகிறேன்.. சீனு சொன்னதுக்கப்புறம் அப்பீல் ஏது?

      Delete
    3. // இது யார் அந்த கிருஷ்ணா // சரியா போச்சு போ.... முன் கதை சுருக்கம் தேவையோ?

      Delete
    4. பயப்படாதீங்க சார்.. முன்கதை சுருக்கமெல்லாம் கொடுக்க மாட்டேன்.. ஹிஹிஹி..

      Delete
  4. //ஆனந்த் தனது சர்ட் காலரில் ஆபத்துக்கு உதவ வைத்திருந்த பிளேடை பற்களால் கடித்து இழுத்து பின் கைகளை கட்டியிருந்த கட்டை அறுத்து அவிழ்த்துக் கொண்டான். //இங்க பின்னாடி முன்ன முன்னாடி ன்னு இருக்கே... சர்ப் போடாம விளக்கவும்...

    ReplyDelete
    Replies
    1. 'இழுத்து பின், கைகளை கட்டியிருந்த' ன்னு வந்திருக்கணும். ஒரு கமா மிஸ்ஸிங்.. ;-)

      Delete
  5. தொடருங்கள்... தொடர்கிறோம்...

    ReplyDelete
  6. // 'தண்ணி' என்று தாகமேடுப்பதுபோல் தன் ஆதாம் உருண்டைகளை மேலும் கீழும் அசைத்து காட்டினான்.//
    அங்க நிக்கிறபா... நீ...
    கடையாண்ட வாபா... பேசிக்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. //அங்க நிக்கிறபா... நீ...//

      எங்க ஆதாம் உருண்டையிலா? :)

      Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...