Wednesday, November 27, 2013

காலை எழுந்தவுடன் கொலை!! (க்ரைம் தொடர்-5)

பகுதி-1     பகுதி-2




                     அந்த 'அதிபயங்கர' கொள்ளைக் கூட்டத்திடமிருந்து தப்பித்த ஆனந்த் தன் வண்டியை எடுத்துக்கொண்டு அவர்கள் கண் மறையும் தூரம் வரை சென்றான். பின் அந்த அடியாளிடமிருந்து கிடைத்த பேப்பரை எடுத்துப் பார்த்தான். வழக்கம்போல் ஒன்றும் விளங்காமல் போகவே அதை உள்ளே வைத்துவிட்டு மணி ஐந்தை காட்டியதால் மெரீனா பீச்சை நோக்கி சென்றான். அங்கு நின்றிருந்த லாவண்யா ஆனந்தின் சட்டையில் ஆங்காங்கே தெளித்திருந்த ரத்தத் துளிகளை பார்த்து அதிர்ச்சியுற்று "ஆனந்த் இதென்ன ப்ளட் ஸ்பாட்ஸ்?" என்றாள். "வர்ற வழில ஒரு கிடா வெட்டுக்கு போயிட்டு வர்றேன், அதான்." என்றதும் அவள் முறைக்க பின் அவளிடம் நடந்த எல்லாவற்றையும் சொன்னான். பின் தன்னுடைய பாக்கெட்டில் வைத்திருந்த அந்த பேப்பரை எடுத்து அவளிடம் நீட்டினான். அதில்

OUR NEXT TARGET
உன் உதட்டோரம் சிவப்பே..
காதலி, காதலி காதலால் தவிக்கிறேன்..
 ஒரு மணி அடித்தால். 

                         என்று எழுதியிருந்தது.  அதைப் படித்துவிட்டு லாவண்யா "ஒருவேளை பாட்டு பதிவு பண்ண கொடுத்திருப்பானோ?" என்றாள். "நோ..நோ.. அதுக்கு எதுக்கு OUR NEXT TARGETன்னு எழுதணும்.. 
இதுக்குள்ள யாரோ ஒருத்தர் பேர் இருக்கணும். 
அதைத்தான் நாம கண்டு பிடிக்கணும். 
அப்புறம் இந்த கேஸை முடிக்கணும்" 

                                என்று TR ஸ்டைலில் சொல்ல அதை ரசித்தபடி மெய்மறந்து நின்றாள் லாவண்யா.  "சரி சரி, என் டயலாக் டெலிவரிய ரசிச்சது போதும், இப்போ அந்த மூணு பாட்டும் எந்த படத்துல வருதுன்னு சொல்லு பார்ப்போம்" என்றான். அவள் சிறிது நேரம் யோசித்துவிட்டு "அவ்வை ஷண்முகி, காலமெல்லாம் காதல் வாழ்க, அப்புறம் முதல் பாட்டு ... ம்ம் .. பாஞ்சாலங்குறிச்சின்னு நினைக்கிறேன். மூணு பாட்டிலையும் லவ் தான் மெசேஜ்" என்றாள்.  "ஆமா, அந்த கொலைகாரன் லவ் லெட்டர் எழுதியிருக்கான் போலிருக்கு போலிசுக்கு"  என்ற அவன் நக்கலை செல்ல கோபத்துடன் ரசித்த அவள் " இப்படி கிண்டல் பண்ணினா நான் ஹெல்ப் பண்ண வரமாட்டேன்" என்று செல்லமாக கோபித்துக் கொண்டாள்.  "ஒக்கே, டார்லிங்.. கூல் டவுன்" என்று அவளை சமாதானப்படுத்திய ஆனந்த் "ப்ளீஸ் ட்ரை அகைன்" என்றான்.
  
                         சிறிது நேரம் தன் சுடிதாரின் நுனியை சுற்றியவாறே யோசித்தவள் திடீரென்று "வாவ்..ஆனந்த், ஒரு மேஜர் மேட்சிங் கண்டுபிடிச்சிட்டேன்." "வாட் ஈஸ் இட்" " மூணு பாட்டுமே தேவா சார் ம்யுசிக் பண்ணினது." " இல்லம்மா,  கொலைகாரன் இந்த முறை குறி வைக்கப் போறது H ல.. தேவா எப்படி வரு,,ம்.. வெயிட் எ மினிட்.. யெஸ் ஐ காட் இட்.. ஐ காட் ஹிம் லாவண்யா.." என்று அவளை தூக்கி சுற்றினான்.. "என்ன பேருப்பா" என்றாள் மை எழுதிய அவள் கண்கள் விரிய.."கொலைகாரன் இந்த முறை குறி வைக்கப் போறது H ல.மூணு பாட்டையும் பாடினது ஹரிஹரன். ஸோ ஹரிஹரன் தான் இன்னைக்கு கொலையாளியோட டார்கெட். இன்னொரு முக்கியமான விஷயம், கொலையாளி யாருன்னும் நான் கண்டுபிடிச்சாச்சு." என்றான் ஆனந்த். "யாரது?" என்றாள் அவள் ஆச்சர்யத்துடன். 

                          "ம்ஹூம், அவ்வளவு ஈசியா சொல்லிடுவேனா.. ஒரு கிஸ் பண்ணினாதான் சொல்லுவேன்" "நோ..நீங்க சொன்னாதான் கிஸ்" என்று இருவரும் மாறி மாறி கூறிக் கொண்டிருக்க கடைசியில் ஆனந்த் வென்றான். அவன் கொலையாளியின் பெயர் சொன்னதும் அவள் தன் ரெட்டினா டிஸ்ப்ளே ஒளிரக் கேட்டாள் "ரியலி? என்னால நம்பவே முடியலே." என்றாள். "பட் தட்ஸ் தி ட்ரூத்" என்று கூறிவிட்டு யமஹாவை கிளப்பினான். லாவண்யாவை விட்டுவிட்டு பின் நேராக சுந்தர் வீட்டை அடைந்தான். அங்கு ஒரு பெரிய பூட்டு தொங்கியது. உடனே சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தன் சித்து வேலையை காட்டியவுடன் மன்மோகன் சிங் போல் இறுகப் பூட்டியிருந்த பூட்டு பவர் ஸ்டார் வாய் போல் திறந்து கொண்டது. உள்ளே சென்று ஹாலின் ஓரத்தில் தொலைபேசிக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அந்த டெலிபோன் டைரக்டரியை புரட்டினான். அதில் அவன் எதிர்பார்த்தபடியே ஏற்கனவே கொலை செய்யப்பட்ட அந்த ஏழு பேர் பெயரும் டிக் செய்யப்பட்டிருந்தது. அதில் H வரிசையில் ஹரிஹரன் என்ற தொழிலதிபரின் பெயருக்கு நேராகவும் டிக் செய்யப்பட்டிருந்தது. நடக்கவிருக்கும் அபாயத்தை உணர்ந்த ஆனந்த் அதைத் தடுத்து நிறுத்த வேண்டி உடனே யமஹாவிற்கு விரைந்தான். யமஹா ஹரிஹரன் வீடு நோக்கி செல்கையில் சூரியன் மெல்ல அஸ்தமித்துக் கொண்டிருந்தது.


அடுத்த பகுதியில் முற்றும்..



18 comments:

  1. கொலையாளியோட அடுத்த டார்கெட்டைக் கண்டுபிடிச்ச கையோட ஆனந்து கொலைகாரனையும் கண்டுபிடிச்சிட்டாரே... அடடே..! கொலையாளியைக் கண்டுபிடிச்சா அவருக்கு இப்படி ஒரு ப்ரைஸ் கிடைக்கும்னா, இன்னும் பத்து கொலையாளியைக் கூட கண்டுபிடிப்பார், இல்ல...?

    ReplyDelete
    Replies
    1. டிடெக்டிவ் ஆனந்த்ன்னா சும்மாவா? யாரோட சிஷ்யன்? ஹஹஹா..

      //கொலையாளியைக் கண்டுபிடிச்சா அவருக்கு இப்படி ஒரு ப்ரைஸ் கிடைக்கும்னா,//
      இல்லையா பின்ன?

      Delete
  2. மூன்று பாடலை வைத்து... பாடியது யார் என்று கண்டுபிடித்து... செம சுவாரஸ்யம்...

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கு நன்றி..

      Delete
  3. தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

    ReplyDelete
  4. அடே அடடடே யப்பா பலியாட கண்டு புடிக்க ஏன்னா வொரு ட்விஸ்ட்டு

    // மன்மோகன் சிங் போல் இறுகப் பூட்டியிருந்த பூட்டு பவர் ஸ்டார் வாய் போல் திறந்து கொண்டது. // போட்ட ரூம்க்கு வாடக பாக்கி 500 ஊவா

    ReplyDelete
    Replies
    1. சுட்டகதை ட்விஸ்ட்அ விடவா?

      Delete
    2. //போட்ட ரூம்க்கு வாடக பாக்கி 500 ஊவா//

      அப்படியே ரெண்டு டீ சொல்லிடு தம்பி!! ;-)

      Delete
  5. எங்க மன்மோகன் சிங்கை கிண்டல் பண்ணியதை வன்மையாக ஆதரிக்கிறேன் சாமீ.....

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா அண்ணே..

      Delete
    2. அடுத்து பவர் ஸ்டார் பேன்ஸ் யாராவது வருவாங்கன்னு நினைக்கிறேன்.. ;-)

      Delete
  6. நன்னாருக்கு!இன்னிக்குத் தான் மொத்தமா,அஞ்சு தொடரையும் ஒரே மூச்சுல படிச்சேன்.நன்னாவே எழுதுறேள்!லாஸ்ட்டு பார்ட்டு எப்ப வரும்?

    ReplyDelete
    Replies
    1. இந்த வீக்கென்ட் ஆன்மீகப் பயணம் முடிச்சுட்டு, அடுத்த வார தொடக்கத்தில் போட்டுடறேங்க..

      Delete
  7. அது என்ன ஆதாரம் என்று சொல்லவே இல்லையே.'அது' சுந்தர் வீட்டில் கிடைத்தது என்றவுடனேயே சுந்தர் மீது தானே எல்லோருடைய சந்தேகமும் இருக்கும்.கொலையாளியையாவது மாற்றியிருக்கலாமே.

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. தொடர்ந்து படித்து வருவதற்கு நன்றி.. கடைசி பகுதியையும் படித்துவிட்டு உங்க கருத்தை கூறுங்கள்.. இப்போ உங்க குற்றச்சாட்டுக்கு நான் பதில் சொல்லப் போவதில்லை.. :)

      Delete
  8. சுவாரஸ்யம் குறையவில்லை! தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வருவதற்கு நன்றி நண்பா!

      Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...