Saturday, November 16, 2013

ஆவி டாக்கீஸ் - வில்லா


இன்ட்ரோ  
                          இறப்பிற்கு பின் என்ன என்ற கேள்வி தொக்கி நிற்கும் காலம் வரை அமானுஷ்யங்களும், மூட நம்பிக்கைகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். "Paranormal Activity" என்ற ஆங்கிலப் படத்தின் அத்துணை பாகங்களையும் பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன், வில்லா படத்தை இயக்கிய தீபன், ஒளிப்பதிவாளர் தீபக் குமார் மற்றும் 'இசைச்சிற்பி' சந்தோஷ் நாராயண் ஆகியோர் இணைந்து ஒரு தரமான த்ரில்லர் படத்தை கொடுத்துள்ளனர்.




கதை         
                            விபத்தில் சிக்கி இறந்து போகும் நாயகனின் தாய், தனக்கு சொந்தமாக ஒரு பெரிய வீடு இருப்பதை சொல்லாமல் மறைத்து இறந்து போகும் நாயகனின் தந்தை, எல்லாம் இழந்த போதும் உடன் பக்கபலமாய் நிற்கும் காதலி இவர்களுக்கு நடுவே ஒரு எழுத்தாளன் கம் காதலன் நம் கதாநாயகன். மிகவும் பணக் கஷ்டத்தில் இருக்கும் இவருக்கு ஒரு சொந்த வீடு (வில்லா) இருப்பதாய் தெரிய வர பர்கர் சாப்பிட்டுக்கொண்டே அந்த வீட்டை விற்க வருகிறார். வீட்டை விற்க முற்படுகையில் என்ன நேர்கிறது என்பதே படத்தின் கதை .

                                                                                                                                            ஆக்க்ஷன் 
                              ஆவி, பேய் என்று எதையும் கண்களில் காட்டாமல் இடைவேளை இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டதா எனத் தோன்றும் அளவிற்கு நம்மை இயக்குனர் தன் திரைக்கதையால் கட்டிப் போட்டாலும் இது போன்ற படத்திற்கு அமைதியான அதே சமயம் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தும் நாயகன் தேவை. பீட்சாவில் விஜய் சேதுபதி கலக்கியது போலவே இந்தப் படத்தில் கலக்கியிருக்கிறார் "சூது கவ்வும்" புகழ் அசோக் செல்வன். இவர் தலைவாரிய ஸ்டைல், அணிகின்ற உடை, உடல் மொழி, உச்சரிப்பு  என ஒவ்வொன்றும் டாப் கிளாஸ். இவருக்கு பக்க பலமாய் சஞ்சிதா. அம்மணி இரண்டாவது படத்திலேயே மனதை கவர்கிறார். (நடிப்பை சொன்னேங்க!) நாசர் சிறிது நேரமே வந்தாலும் திகிலூட்டுகிறார்.

                               பீட்சாவில் வந்த அதே முகங்கள் இதிலும் வந்த போதும் முற்றிலும் வேறுபட்ட கதாப்பாத்திரங்கள் என்பதால் நமக்கு அவர்களின் நடிப்பு சீக்கிரம் பிடித்துப் போகிறது. குறிப்பாக சைக்கியாட்ரிஸ்ட்டாக வரும் கதாப்பாத்திரம் மற்றும் வில்லாவின் முன்னாள் உடைமையாளராக வரும் தாடிவாலா. நாயகனின் நண்பனாக வரும் கதாப்பாத்திரமும் நம் மனசில் பச்சக் என்று ஒட்டிக் கொள்கிறது. ஆயினும் கிளைமாக்ஸ் காட்சியில் நாசர் பேசும் வசனங்கள் தெளிவற்று இருக்கும்படி செய்தது திரைக்கதையின் பாகம் என்றாலும் "C" சென்டர் ரசிகனுக்கு கொஞ்சம் புரியாமல் போகலாம்.


இசை-இயக்கம்-ஒளிப்பதிவு
                                 பரிச்சயமில்லாத முகங்கள், மருந்துக்கு கூட இல்லாத நகைச்சுவை, வர்த்தக குத்து/ டாஸ்மாக் பாடல் இது எதுவும் இல்லாமல் "நச்" என்று ஒரு படம் கொடுத்த இயக்குனர் தீபனுக்கு பாராட்டுக்கள். இந்தப் படத்தின் எதார்த்த நாயகன் சந்தோஷ் நாராயண் தான். திரையில் வரும் காட்சியை விட பன்மடங்கு பயத்தைக் கூட்டுவது இவர் இசைதான். தியேட்டரில் இருந்த  கால்கள்  ( சீட் கால்கள் உட்பட) அத்தனையும் நடுங்கிச்சின்னா பாருங்க. "பாம்பாம்பாம்பாம் பபாம்" என்று கானா பாலா பாடி இவர் இசையமைத்த பாடல் வரும்போது அழுகின்ற குழந்தையும் வாயில் லாலிபாப் சொருகிக் கொள்கிறது. கூடவே குமாரின் ஒளிப்பதிவும் அருமை.

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                 இன்டர்வெல் ப்ளாக்- அமானுஷ்யத்தின் அருகாமையை விளக்கும் அந்தக் காட்சி- செம்ம சீன்.  "பூமியில்" பாடல் இசையும் படமாக்கப்பட்ட விதமும் இனிமை மற்றும் இளமை. கிளைமாக்ஸ் காட்சியில் பயணத்தை தொடர்ந்து கொண்டு செல்ல வரும் "அந்த" மர்ம நபர் விஜய் சேதுபதியாய் இருக்கக்கூடும் என்று பக்கத்து சீட்காரரை போலவே நம்பி ஏமாந்த ஆவி அதைத் தவிர திருப்தியுடன் வெளிவந்த போது சிந்தித்தது. 'இது பிரமாதமான த்ரில்லர் என்று சொல்ல முடியாவிட்டாலும் வழக்கமான மசாலாக்களை தவிர்த்து ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி. கண்டிப்பாக  நல்ல சவுண்ட் சிஸ்டம் உள்ள அரங்கில் போய் பார்க்கவும்!

                  Aavee's Comments - Paranormal Activity 5.0.




20 comments:

  1. ஏமாந்து போக விருப்பவில்லை ஆவி... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மோசமில்லை தனபாலன்.. ஒரு முறை நிச்சயம் பார்க்கலாம்..

      Delete
  2. கண்டிப்பா பீட்ஸா மாதிரி வெற்றியடைஞ்சிடும் போலிருக்கு....

    ReplyDelete
    Replies
    1. சொல்ல முடியாது மேடம்.. அடுத்த வாரம் இரண்டாம் உலகம் வருது.. இது நல்லா இருக்குன்னாலும் அதுக்கு முன்னாடி கொஞ்சம் கஷ்டம் தான்..

      Delete
  3. நல்ல விமர்சனம் ஆவி..தியெட்டரில் பார்த்தால்தான் பிடிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பா! எனக்கு பிடிச்சது.. நண்பர் DD ஏன் அப்படி சொன்னார்ன்னு இன்னும் யோசிச்சுகிட்டு இருக்கேன்..

      Delete
  4. நாளை பார்க்கலாம்னு இருக்கேன். . . விமர்சனத்துக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க ராஜா!!

      Delete
  5. சோக்கா சொல்லிகினபா... வாய்ப்பு கெட்ச்சா கண்டுகிறேம்பா...
    அப்பால டைம் கெட்ச்சா நம்ப கடையாண்ட வந்து போபா...

    ReplyDelete
    Replies
    1. இதோ, இப்போவே வர்றேன்..

      Delete
  6. நல்ல விமர்சனம்!பார்க்கலாம்!!நன்றி!!!

    ReplyDelete
  7. பீட்ஸாவை நினைத்துக் கொண்டு இந்தப் படம் பார்த்தால் மட்டும்தான் ஏமாற்றம் கிடைக்கும். மற்றபடி நல்லதொரு படம்தான் என்று ஒரு டாக் காதில் விழுந்தது. ஆவியின் விமர்சனம் அதை உறுதிப்படுத்திடுச்சு. ம்ம்ம்... ட்ரை பண்றேன் & தியேட்டர்ல பாகக! ஹி... ஹி...!

    ReplyDelete
  8. படத்தினைப் பார்க்கத் தூண்டுகிறது தங்களின் விமர்சனம். அவசியம் பார்க்கின்றேன் நண்பரே நன்றி

    ReplyDelete
    Replies
    1. பார்த்துட்டு சொல்லுங்க நண்பரே!

      Delete
  9. பில்லா போய் வில்லா ,இது வெற்றி பெற்றால் குல்லா வரும் !ஜில்லா வேறு ரெடியாகி விட்டது ,தமிழில் ஒரே லாலா படங்களாவே வருதே !
    த.ம 3

    ReplyDelete
    Replies
    1. "லாலாலா" ன்னு பாட்டு போட்ட விக்ரமன் படம் எடுக்கிறத நிறுத்தினதும் நம்மாளுக ஆளாளுக்கு லாலா ன்னு வச்சு எடுக்கிறாங்க பாருங்க.. :)

      Delete
  10. பார்க்க வேண்டிய படம் என்கிறீர்கள்... பார்த்து விடுவோம்...

    ReplyDelete
    Replies
    1. ஒருமுறை பார்க்கலாம்..

      Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...