Sunday, April 20, 2014

IPL அப்டேட்ஸ்... 20140420



 முதல்  ஆறு போட்டிகளின் முடிவில் அணிகளின் நிலவரம்...  (ஏப்ரல் 19 வரை)  
        
அணிகள்
மொத்த போட்டிகள்
வெற்றி
தோல்வி
டை
புள்ளிகள்
ரன் விகிதம்
Bangalore T20
2
2
0
0
4
1.168
Kolkata T20
2
1
1
0
2
0.909
Mohali T20
1
1
0
0
2
0.688
Jaipur T20
1
1
0
0
2
0.273
Delhi T20
2
1
1
0
2
-0.61
Hyderabad T20
1
0
1
0
0
-0.273
Chennai T20
1
0
1
0
0
-0.688
Mumbai T20
2
0
2
0
0
-1.515









*  விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி வாகை சூடிய ஒரே அணியாகவும் முதலிடத்திலும் பெங்களூரு தற்சமயம் உள்ளது. 

* பெங்களூரு டெல்லியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதே இதுவரை அதிக விக்கெட் வித்தியாசத்தில் முடிந்த ஆட்டம்.  

* கொல்கட்டா மும்பையை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதே அதிக ரன்கள் வித்தியாசத்தில் முடிந்த ஆட்டம்.

* சென்னை எடுத்த ரன்களை 205 ஓவர்டேக் செய்து மொஹாலி எடுத்த 206 ரன்களே அதிகபட்சமாக ஒரு அணி குவித்த ரன்கள்.

* பேட்டிங்கில் டெல்லியின் டுமினி 119 ரன்களுடன் முதலிடத்திலும், மனிஷ் பாண்டே 112 ரன்களுடன் இரண்டாமிடத்திலும் உள்ளனர்.

* மேக்ஸ்வெல் சென்னைக்கு எதிராக அடித்த 95 ரன்களே ஒரு வீரர் அதிகபட்சமாக அடித்த ரன்கள்.

* அதிக சிக்ஸர்களை டுமினியும் ( 6 ) அதிக பவுண்டரிகளை (15)  மேக்ஸ்வெல்லும் அடித்துள்ளனர்.

* அதிக முறை டக் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் கம்பீர் (2) உள்ளார்.  IPL வரலாற்றில் மொத்தமாக சேர்த்து இவர் இரண்டாமிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலிடத்தில் காலிஸ் உள்ளார். (இருவரும் கொல்கட்டாவை சேர்ந்தவர்கள் என்பதை கவனிக்க..)

* அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் கொல்கட்டாவின் சுனில் நரேனும், மும்பையின் மலிங்காவும் தலா ஐந்து விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளனர்.

* ஒரே ஆட்டத்தில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையிலும் இதே ஜோடி உள்ளது. (நான்கு விக்கெட்டுகள்)

* அதிக விக்கெட் வீழ்த்திய கீப்பர்கள் வரிசையில் பெங்களூரின் பார்த்திவ் பட்டேலும், கொல்கட்டாவின் உத்தப்பாவும் தலா இரண்டு விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளனர். 

* ஜெய்ப்பூர் அணியை சேர்ந்த ரிச்சர்ட்சன் அதிக கேட்சுகள் பிடித்தவர் வரிசையில் முதலிடம் பெறுகிறார். இவர் மூன்று கேட்சுகள் பிடித்துள்ளார்.

* அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற பெருமையை கொல்கட்டாவின்  காலிஸ், மனிஷ் பாண்டே ஜோடி மும்பைக்கு எதிராக  இரண்டாவது விக்கெட்டுக்கு இவர்கள் எடுத்த 131 ரன்கள் மூலம் தக்க வைத்துள்ளனர். 

                   இரண்டு போட்டிகளிலும் மோசமாக தோற்ற மும்பை, அதிக ரன்கள் எடுத்தும் மோசமான பவுலிங் மற்றும் பீல்டிங் காரணமாக தோற்ற சென்னை அணி, சுமாராக விளையாடிய சன்ரைசர்ஸ் அணி ஆகியவை முதல் புள்ளியை எடுக்க போராட வேண்டும். 

                  ஆடிய ஒரு போட்டியில் வெற்றியை ருசித்துள்ள ஜெய்பூர் மற்றும் டெல்லி இன்னும் ஆர்வத்துடன் விளையாடி முதலிடத்துக்கு வர முயற்சி செய்ய வேண்டும்.  விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றியும் மற்றொன்றில் தோல்வியும் பெற்ற டெல்லி மற்றும் கொல்கட்டா அணிகள் கவனத்துடன் விளையாட வேண்டும். 
 
                   பெங்களூரு அணி (இதுவரை கெயில் எனும் பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்தாமலே) இரண்டு வெற்றிகளை பெற்று முதலிடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறது. அணியின் ஒரு வீரரை மட்டும் நம்பி இருக்காமல் தேவைக்கேற்ப எல்லோரும் ஒரே அணியாக விளையாடுவதை தொடர வேண்டும். 

                 இது முதல் ஆறு போட்டிகளின் நிலவரம் மட்டுமே. அடுத்த  வாரம் இன்னும் சில போட்டிகளின் முடிவுகளுடன் அட்டவனையை பார்ப்போம்.. வர்ட்டா..


நன்றி: ESPNCricinfo

13 comments:

  1. தகவல் களஞ்சியமா வந்திருக்கீரே ஆவி... நான் ஆடறேன்.... (கிரவுண்டில் அல்ல) ஐ ஸ்வே...

    ReplyDelete
  2. முக்கிய அணிகள் ஆரம்பமே அதிர்ச்சி...

    ReplyDelete
    Replies
    1. என் கணிப்பின்படி மும்பை முதல் நான்கு இடத்தில் வருவது கடினம், சென்னை பொறுப்புடன் விளையாட வேண்டும்..

      Delete
  3. வணக்கம் ஆ.வி சார்!நலமா?//:நன்றி, ஆ.வி சார்!

    ReplyDelete
    Replies
    1. நல்லா இருக்கேன் பாஸ்! நீங்க.?

      Delete
  4. அது எப்படிப்பா சிக்சர் அடிக்கறதுக்காகவே லாஸ்ட் பந்து போட்டாரு
    அது சிக்சர் இல்லப்பா.. பிக்ஸர்

    சுப்பு தாத்தா
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா... சிக்ஸர்- பிக்ஸர்..

      எது எப்படியோ தாத்தா எங்க பெங்களூர் ஜெயிச்சா போதும்.. :) :)

      Delete
  5. கிரிக்கட்னாலே பிடிக்காது. இதுல சூதும் கலந்தப் பிறகு அந்தப் பக்கமே போறதில்ல.

    ReplyDelete
    Replies
    1. முன்ன குடுத்த மாதிரி கறந்த பாலை அப்படியேவா கொடுக்கறாங்க.. இப்ப முக்கால்வாசி தண்ணி கலந்து கொடுத்தாலும் வாங்கி காப்பி போடறீங்களே அக்கா.. கிரிக்கட்டை மட்டும் ஏன் ஒதுக்கி வைக்கறீங்க?

      Delete
  6. டெம்ப்ளேட் மாறியிருக்கே. ம்ம்ம்.... எனக்கும் கிரிக்கெட்டுக்கும் ரொம்ப தூரம் நண்பா....

    ReplyDelete
    Replies
    1. ஆமா சேப்பாக்கம் உங்க வீட்டுல இருந்து கொஞ்சம் தூரம் தான். ஹஹஹா :)

      Delete
    2. ஆமா டெம்ப்ளேட் மாறியிருக்கு.. நல்லாயிருக்கா இல்லையான்னு சொல்லலியே?

      Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...