இன்ட்ரோ  
                            நல்ல விஷயங்களுக்கு போராட நாம் பாதிக்கப் படவேண்டும் என்றோ, தீவிரமான காரணம் ஒன்று வேண்டுமென்றோ கிடையாது. அதை செய்ய நல்ல மனதும், கொஞ்சம் பலமும், நிறைய தைரியமும் இருந்தால் போதும் என்று கொஞ்சம் காதலையும் மிக்ஸ் பண்ணி சொல்லியிருக்கிறார்கள்.                       
கதை         
                         அரதப் பழசு கதை. சொன்ன விதம் தான் வேற மாதிரி. பதவி வெறி பிடித்த மந்திரி, அதற்கு உதவும் அவர் தம்பி. தன் சுயநலத்துக்காக சட்டக் கல்லூரியில் கலவரத்தை தூண்டி விடும் மந்திரியை சமார்த்தியமாக பதவியில் இருந்து இறக்கி ஒவ்வொரு சாமான்ய மனிதனும் மனதில் நினைப்பதை நிறைவேற்றுகிறான் நாயகன். இடையே வலிய வலிய வந்து வழியும் காதலியையும் லவ் பண்ணி கடைசியில் அவரைத் திருமணம் செய்யாமல் வேறொருவருக்கு தாலி கட்டுகிறார். இந்த சின்ன விஷயத்தை கொஞ்சம் ஜவ்வாக இழுத்து மூன்று மணி நேரம் கதை சொல்கிறார் இயக்குனர்.
                                                                                                                                            ஆக்க்ஷன் 
                          சத்தமில்லாமல் நாட்டுக்கு நல்லது செய்யும் கேரக்டர் ஹீரோவுக்கு.. இவர் வண்டியோட்டும் போது எந்த ஒரு இடத்திலும் இண்டிகேட்டர் போடவோ, கைகளால் திரும்புவதற்கு சிக்னலோ செய்வதாய் காட்டவே இல்லை. தவிர பொது இடத்தில் மூச்சா வேறு போகிறார். அதை தடுக்கும் நாயகியின் வீட்டுக்கு சென்று பாத்ரூமிற்கு செல்கிறார்.. மொதல்ல இந்த சின்ன சின்ன விஷயங்கள்ல எல்லாம் ஒழுங்கில்லாம இவர் நேதாஜி, வாஞ்சிநாதன் பத்தி பேசும்போது ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. விக்ரம்பிரபு கும்கி படத்தை விட இதில் கொஞ்சம் நடிக்க ஸ்கோப் இருக்கிறது.. இரண்டாவது படத்திற்கு இது பரவாயில்லை.. காதல் காட்சிகளில் சாத்சாத் "சபாபதி" என்றொரு பழைய படத்தில் "சபாபதி" என்று ஹீரோ அல்லாது மற்றொரு கேரக்டர் இருக்குமே, அவருடைய அதே மேனரிசம் இவரிடமும் தெரிகிறது. ஹீரோயின் சுரபி "இளிச்சவாயினி" காண்டெஸ்டுக்கு போட்டியிடுபவர் போல் இளித்துக் கொண்டே இருக்கிறார். தமிழ் சினிமாவின் வழக்கமான லூசுப் பெண் கேரக்டர்..வில்லன் மற்றும் அவர் தம்பி கதாபாத்திரங்கள் நிறைவாய் செய்திருக்கின்றனர். கணேஷ் வெங்கட்ராமன் இன்னும் இரண்டு படங்கள் இது போல் நடித்தால் தமிழ் திரையுலகை விட்டு ஓடி விடுவது உறுதி. நாயகனின் அமைதியான அறிமுகம், அறைக்குள் சிக்கிய வில்லனின் சாதுர்யம், ஆகியவை சபாஷ் போட வைக்கும் காட்சிகள்.. கொஞ்சம் நீளத்தை குறைத்தால் நிச்சயம் அவசியம்.
இசை-இயக்கம்
                               இதில் உள்ள ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகளை நாம் கண்டுகொள்ளாமல் படம் பார்க்க வைப்பது இயக்குனரின் திறமை.. வித்தியாசமான காட்சியமைப்புகள், நல்ல ஒளிப்பதிவு.. தேவையான இடங்களில் மட்டும் "நச்" விமர்சனங்கள் நம்மை ரசிக்க வைக்கின்றன.. சத்யாவின் இசையில்  (குரலில்) லவ்வுல பாடலும் என்னை மறந்தேன் பாடலும் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் இனிமை.
                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                           கட்டிப்போட்டிருக்கும் தன்னை கோத்த வரும் காக்கையிடம் "நான் இன்னும் சாகல, நாளைக்கு வா" என்று சொல்லும் நாயகி, அலுவலகத்தில் தன் ஒரு நாள் சம்பளம் பெரும் காட்சி.. எங்கேயும் எப்போதும் படத்தின் எதிர்பார்ப்பு இல்லாமல் பார்த்தால் படம் நல்ல என்டர்டெயினர். ஒரும முறை பார்க்கலாம்.
                  Aavee's Comments - He is No Different.

 
 
 
 
நல்ல விமர்சனம்!ஒரு முறை பார்க்கலாம் என்கிறீர்கள்,ஓசியில் தானே?ஹி!ஹி!!ஹீ!!!
ReplyDeleteநல்ல நண்பன் கிடைத்தால் ஏசியில் கூட பார்க்கலாம்.. ஹிஹிஹி..
Deleteஅருமையான விமர்சனம்...
ReplyDeleteதிரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து
வரும் படங்கள் மிகக் குறைவாக உள்ள
இந்நிலையில் திரைக்கதைக்கு ஒரு சபாஷ்
என்ற விமர்சனம் அழகு.
இயக்குனர் கதை சொன்ன விதம் அருமை.. பெரிய ட்விஸ்டுகளோ, சஸ்பென்ஸோ இல்லாமல் லீனியராக கதை சொன்ன விதம் அருமை..
Deleteபார்த்திடுவோம்
ReplyDeleteகண்டிப்பா பாருங்க ஸார்
Deleteஇப்ப தான் சிவகுமார் விமர்சனமும் படித்தேன்.
ReplyDeleteம்ம்ம்ம்... டிவில போடும்போது தான் பார்க்கணும்! :)
ஆரூர் மூனா அவர்களின் விமர்சனமும் பாருங்க.. :)
DeleteHe is no different - good english! hehehe! I want to view and enjoy the songs of this film in TV channels only!
ReplyDeleteSure Sir!! அடுத்த வார திரைப்பட வரிசைக்கு தயார் ஆகிடுங்க!!
Delete
ReplyDelete//கணேஷ் வெங்கட்ராமன் இன்னும் இரண்டு படங்கள் இது போல் நடித்தால் தமிழ் திரையுலகை விட்டு ஓடி விடுவது உறுதி. //
விடுங்க. அடுத்து மீச வச்ச போலீஸா வந்து கலக்குவார்.
ஹஹஹா.. பாரதியா நடிக்காம இருந்தா சரி!!
Deleteவணக்கம்
ReplyDeleteவிமர்சனம் அருமை வாழ்த்துக்கள் அண்ணா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்!
Deleteஇன்னாபா இது...? ஆவி டாக்கீசுல போடுற மூவிலாம் ஒரே மாறியே கீது...? ஆள மட்டும் மாத்திகினே... இஸ்டோரிய மாத்த மாட்டிகிறியே... என்க்கு ஒண்டிதான் இப்புடிக்கா பீலிங் ஆவுதா...? இல்லாங்காட்டி... டமில் சினிமாவே அப்புடிக்கா தானா?
ReplyDeleteஏம்பா, புச்சா வந்தாதானே இட்டார்றதுக்கு...
Deleteநல்ல விமர்சனம்.... பார்த்திடுவோம்.... நன்றி....
ReplyDeleteநன்றி தனபாலன்!
Delete//கோத்த வரும் காக்கையிடம் //
ReplyDelete//கைகளால் திரும்புவதற்கு சிக்னலோ//
//கொஞ்சம் நீளத்தை குறைத்தால் நிச்சயம் அவசியம். //
//ஒரும முறை பார்க்கலாம். //
இதில் உள்ள ஏகப்பட்ட .............................. நாம் கண்டுகொள்ளாமல் விமர்சனம் படிக்க வைப்பது நம் விமர்சகர் ஆவியின் திறமை.. :)
தற்(காப்பு) குறிப்பு : நா நக்கீரனெல்லாம் இல்லீங்கோ .... ச்சும்மானாச்சுக்கும் ...
தவறுகளை சுட்டிக் காட்டியதற்கு நன்றி.. விமர்சனம் வெளியான நேரமே அதற்கு காரணம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்..
Delete//இடையே வலிய வலிய வந்து வழியும் காதலியையும் லவ் பண்ணி கடைசியில் அவரைத் திருமணம் செய்யாமல் வேறொருவருக்கு தாலி கட்டுகிறார். //
ReplyDeleteஇதென்னய்யா புதுக்கதை........? வேற யாருக்கு தாலி கட்டினார்?
இதுக்குத்தான் கிளைமாக்ஸ் பார்த்துட்டு எழுந்து வரணும்கிறது!! மறுபடியும் பாருங்க.. நான் சொன்னா சஸ்பென்ஸ் போயிடும்!! ஹிஹிஹி..
Deleteகாதல் காட்சிகளில் சாத்சாத் "சபாபதி" என்றொரு பழைய படத்தில் "சபாபதி" என்று ஹீரோ அல்லாது மற்றொரு கேரக்டர் இருக்குமே, அவருடைய அதே மேனரிசம் இவரிடமும் தெரிகிறது.
ReplyDeleteபடம் பார்க்கும்போது எப்படி இதெல்லாம் ஞாபகம் வருது? இல்ல படம் பார்த்தபின் சபாபதி படம் பார்தேன்களா? இருந்தாலும் ஒப்பீடு செம!
"அந்த" சபாபதி கேரக்டர் எல்லாராலும் ரசிக்கப்படும் என்றாலும் "தேமே" என்று வந்து போகும் கேரக்டர்.. இந்தப் படத்திலும் (படம் பார்க்கும் போதே) எனக்கு அந்த கேரக்டர் தான் நினைவில் இருந்தது..
Deleteஏன் ஆவி, எல்லா படங்களையும் பார்த்துடுவீங்களா? உங்க விமரிசனம் பார்த்துதான் படத்தை பார்ப்பதா வேண்டாமா என்றே தீர்மானிக்கிறேன். நன்றிங்கோவ்!
ReplyDeleteஅவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்.. ரொம்ப சந்தோசம்மா.. சினிமா பார்க்கறதுன்னா அலாதி பிரியம் எனக்கு!! :) :)
ReplyDeleteஉங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன் . . நேரமிருந்தால் தொடருங்கள்
ReplyDeleteஇந்த வருடம் : திரும்பி பார்க்கிறேன் (தொடர்பதிவு )
I will write Raja.. Thanks for inviting me!!
Delete