Saturday, December 21, 2013

ஆவி டாக்கீஸ் - பிரியாணி


இன்ட்ரோ  
                           த்ரில்லர் எனும் பாத்திரத்தில், கார்த்தி எனும் பாஸ்மதி அரிசி போட்டு, ஹன்சிகா என்ற சிக்கனையும், மேன்டி என்ற மட்டனையும், நாசர் எனும் நெய்யை ஊற்றி, பிரேம்ஜி வெங்காயத்தையும் சம்பத் இஞ்சியையும், ராம்கி எனும் தக்காளியையும் வதக்கி, கொஞ்சம் கொத்தமல்லி சுப்பு பஞ்சு மற்றும் பட்டை-கிராம்பு உமா ரியாஸ், ஜெயபிரகாஷ் எல்லாம் சேர்த்து வெங்கட் பிரபு எனும் செப் கிண்டியிருக்கும் இந்த பிரியாணி மேல் பகுதி வேகாமலும் கீழ்பகுதி அதிகமாக வெந்தும் இருக்கிறது.



கதை         
                            ஜாலியாக, பார்க்கும் பெண்களை எல்லாம் எளிதில் கவர்ந்துவிடும் கலியுக கண்ணனாக வலம் வரும் கார்த்தி, நண்பனுக்காக தன் காதலை எல்லாம் தியாகம் செய்யும் நண்பன் பிரேம்ஜி, இவர்கள் இருவரும் ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு கடத்தல் சம்பவத்தில் போலீசால் தேடப்படுகின்றனர். கடத்தப்பட்ட நாசர் கொலை செய்யப்பட்டதை உணரும் இருவரும் அந்த வழக்கில் இருவரையும் திட்டமிட்டு ஜோடிக்கப் பட்டிருப்பதை கண்டு அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே கதை.

                                                                                                                                            ஆக்க்ஷன் 
                               கேஷுவலாக நடிக்கிறேன் பேர்வழி என்று காமெடி, ரோமென்ஸ் எல்லாவற்றிலும் மீண்டும் சொதப்பல் நடிப்பு கார்த்தியுடையது. அவருடைய நடிப்புக்கு சற்றும் சளைக்காது போட்டி போட்டு மொக்கை போட்டிருக்கும் பிரேம்ஜி, இருவரும் காமெடி என்ற பெயரில் கழுத்தை பதம் பார்க்கின்றனர். நாசர் சிறிது நேரமே வந்தாலும் அருமையான நடிப்பு, அதிலும் பிரேம்ஜி போல் இவர் நடிக்கும் போது செம்ம அப்ளாஸ் தியேட்டரில். ராம்கி, சம்பத், ஹன்சிகா, மதுமிதா, சுப்பு பஞ்சு,  படவா கோபி ஆகியோர் பெரிதும் சொல்லும்படி ஒன்றுமில்லை.  அறிமுக நடிகை மேன்டி தன் கிளாமர் நடிப்பை தாரளமாக வழங்கியிருக்கிறார்.

                                கடைசி ஒரு மணி நேரம் விறுவிறுப்பான திரில்லர் மக்களை நிச்சயம் கவரும், ஆனா அதுக்குள்ள டயர்ட் ஆகிவிட்ட மக்கள் கதை ஸ்பீட் எடுக்கும் நேரத்தில் கொட்டாவி விடுவதை இயக்குனாரால் தடுக்க முடியவில்லை. த்ரில்லர் கதையில் முடிந்தளவு லாஜிக் ஓட்டை இல்லாமல் இருத்தல் அவசியம். ஆனால் இதில் ஓசோனில் விழுந்த ஓட்டையாய் நம்மை மூச்சை அடைக்கிறது.


இசை-இயக்கம்
                                யுவனின் நூறாவது படம்,  கொஞ்சமும் குறைவின்றி திருப்திகரமாக செய்திருக்கிறார். பாடல்களிலும், பின்னணி இசையிலும் கலக்கி இருக்கிறார். ஆனால் ஏனோ இந்தப் படத்திற்கு அது ஒட்டாதது போல் ஒரு பீலிங். வெங்கட் பிரபு எனும் இயக்குனர் கொஞ்சம் கதைக்காக மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. இருந்தாலும் திரைக்கதையை இன்னும் கொஞ்சம் பலப்படுத்தி இருக்கலாமோ? அதிலும் முதல் பாதி கார்த்தி ஒரு ப்ளே பாய் என்று சொல்லவும், அவரிடம் ஒவ்வொரு முறையும் பிரேம்ஜி ஏமாறுகிறார் என்பதை ரசிகர்களுக்கு  உணர்த்த இவ்வளவு காட்சிகள் தேவையில்லை. குறிப்பாக அந்த கம்பெனியில் மூன்று பெண்களையும் ஒரே நேரத்தில் கரெக்ட் செய்யும் காட்சி படத்திற்கு கொஞ்சமும் அவசியமில்லாதது. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பாஸ்!

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                 "எவ்வளவோ பண்ணிட்டோம்" என்று பிரேம்ஜி ஸ்டைலில் நாசர் சொல்வது செம்ம காமெடி, உமா ரியாஸ்கானின் ட்விஸ்ட், சூப்பர் பாஸ்ட் இரண்டாவது பகுதி.

                  Aavee's Comments - Not Cooked Properly.




6 comments:

  1. ஆவி, நல்ல விமர்சனம்..
    கார்த்தி அக்காவை கடத்த வரும் உமா ரியாஸ் மற்றும் வேன்னில் வரும் ஒரு கும்பல் காட்சி மட்டும் தான் பெரிய லாஜிக் பிழை போல் தோன்றியது. இருவரையும் அனுப்பியது ஒரே ஆள் என்றே நான் நினைக்கிறன். மற்ற படி பெரிய அளவு லாஜிக் மீறல்கள் இருப்பது போல் எனக்கு தோன்றவில்லை...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜ்!!
      அது மட்டும் இல்லை.. பிரேம்ஜி என நினைத்து நாசரை ஹோட்டலில் இருந்து தூக்கி வரும் கார்த்தி அவரை டரங்கில் போட்டு அடைப்பதன்..

      டம்மி பீஸ் கார்த்தியின் அக்காவை கடத்த வாடகைக் கொலையாளி வைக்கத் தெரிந்த வில்லன் நேரடியாக அவரே வந்து நாசரை சுடுவது ஏன்.. (முக்கியமான ஆள் என்பதாலா?)

      அவ்வளவு அழகாக ப்ளான் பண்ணி வரவழைத்து இரண்டு முறை சுட்டுவிட்டு பழியை வேறொருவர் மீது போடுமளவிற்கு நேரம் இருந்த வில்லனுக்கு அவர் இறந்துவிட்டாரா உயிரோடு இருக்கிறாரா என்று பார்க்க தெரியாதா.. (இதைக் கூட ஒத்துக் கொள்வேன்.. மேல் இரண்டு மீறல்களை ம்ஹூம்) :)

      Delete
  2. விமர்சனத்தில் இன்ட்ரோ செம...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு தலை வணங்குகிறேன்!!

      Delete
  3. பிரியாணி என்றதும் ஓடோடி வந்தேன் .(எதுக்கு இப்ப வாலக் காணோமே என்று பாக்குறாங்க :))) )சிறப்பான திரைப்பட விமர்சனம் .வாழ்த்துக்கள் ஆவிச் சகோதரா .

    ReplyDelete
  4. வேகாத பிரியாணி... :) ரசித்தேன்!

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...