Tuesday, January 1, 2013

பயணத்தின் சுவடுகள் -6 (Newyork Ball drop)




அனைவருக்கும் என் 2013- புத்தாண்டு வாழ்த்துகள்..!

பயணத்தின் சுவடுகள்...
தேசம்: 2; ஸ்தலம்: 5;  தொலைவு: 6.

(நியுயார்க் பால் டிராப்)
                           


                          நியுயார்க் நகரின் டைம்ஸ் ஸ்கொயர் எனும் இடத்தில் "நியு இயர்ஸ் ஈவ்" எனப்படும் புத்தாண்டின் முந்தைய தினத்தன்று பெருந்திரளான மக்கள் புத்தாண்டை கொண்டாடுவதற்காக குழுமி இருப்பர்.  ஒவ்வோர் ஆண்டும் சுமார் பத்து லட்சம் மக்கள் உலகெங்கிலும் இருந்து இங்கே வருவார்கள். எதுக்குன்னு கேக்கறீங்களா?  சொல்றேன்.

                         
                         டிசம்பர் மாதம் நியுயார்க் பொதுவாக பனிப் பொழிவுடன் காணப்படும். புத்தாண்டின் முன் தினம் மதியம் இரண்டு மணியளவிலேயே மக்கள் நிற்க ஆரம்பித்துவிடுவார்கள்.  டைம்ஸ் ஸ்கொயர் மூன்று தெருக்கள் ஒன்று கூடும் இடம் என்பதால் ஒவ்வொரு தெருவிலும் மக்கள் கூட்டம் அலைமோதும். இரவு ஆறு மணிக்கு மேல் விளக்குகளால் தெருக்கள் ஒளிர ஆரம்பிக்கும் போது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.


                          இரவு சுமார் பதினொன்று ஐம்பத்தி ஒன்பதுக்கு டைம்ஸ் ஸ்கொயரின் மாடியில் இருந்து 1200 பவுண்டு ( 550 கிலோ) எடையுள்ள பெரிய பந்து ஒன்றை கீழே இறக்குவர். பின்பு ஒவ்வொரு நொடிக்கும் மக்கள் பத்து, ஒன்பது, எட்டு என கவுண்ட் டவுன் சொல்ல ஆரம்பிக்க சரியாக பனிரெண்டு மணிக்கு ஹேப்பி நியு இயர் என்ற வாசகம் ஒளிர ஆரம்பிக்க எல்லா திசையிலும் வானில் வாண வேடிக்கைகள் நடக்க மக்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வர்.  ( அருகில் இருப்பவர் முன்பின் தெரியாதவராக இருந்தாலும் ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் கட்டியணைத்து புத்தாண்டின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.) 

                           
                              1907 ஆம் ஆண்டு துவங்கிய இந்த வழக்கம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டு புத்தாண்டின் போது இங்கு கால்கடுக்க காத்திருந்து புத்தாண்டை வரவேற்றது என் நெஞ்சில் என்றும் நீங்கா இடம் பெற்ற நிகழ்வாகும்..!



4 comments:

  1. இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. எதுக்கு என்று தெரிந்து கொண்டேன் கட்டிபுடி வைத்தியமா...ஹ ஹா
    அந்த பெரிய ஒளிரும் பந்து அப்புரம் கவுன் டவுன் பற்றிய தகவல் நமக்கு புதுசு..

    ReplyDelete
  3. புவனா, ஒரு மாசம் லேட்டா நியு இயர் விஷ் பண்றீங்க.. Happii New year to you and your family membes!!

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...