Wednesday, January 23, 2013

உலக நாயகன் கமலஹாசனுக்கு,

உலக நாயகன் கமலஹாசனுக்கு,


                                தமிழ் சினிமாவிற்கு முழுமையாக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கலைஞனே!! திரை உலகத்தில் சம்பாதித்த பணத்தை கல்யாண மண்டபங்கள் கட்டாமல், ரியல் எஸ்டேட்டில் போடாமல் திரை உலகத்திலேயே விட்டுவிட்டு தமிழ்நாட்டு மக்களிடம் கையேந்தி நிற்கும் அப்பாவியே!! தேவர் மகனில் ஆரம்பித்து உன் ஒவ்வொரு திரைப்படம் வெளிவரும் போதும் ஏதாவது ஒரு தடையை கிளப்பி திக்கு முக்காடச் செய்து பின் தடுமாற்றத்துடனும், வருத்ததுடனும் வெளியிட வைப்பது இப்போது வாடிக்கையாகிவிட்டது.

                                 மேடைகளில் ஆதரவாக பேசும் அரசியல் தலைகளோ, உன்னை நண்பன் என்று கூறிக் கொள்ளும் சினிமாவைச் சேர்ந்த பெரும் புள்ளிகளோ இப்போது ஆதரவுக் கரம் நீட்ட தயங்குவது ஏன்.. தமிழ்நாடு உன் தாய்வீடு என்பதெல்லாம் சரி. வெள்ளைக்காரன் உன்னை புரிந்து கொண்ட அளவு கூட உள்ளூர்காரர்கள் புரிந்து கொள்ளாதது உன் துரதிர்ஷ்டமே!!பொறுத்ததெல்லாம் போதும்.. இனியும் உன் திறமைகளை உணரத் தவறிய மக்கள் வாழும் சமூகத்துக்காக படம் பண்ணத் தேவையில்லை..

                                 இதே படங்களை ஹாலிவுட்டில் எடுத்திருந்தால் இந்நேரம் ஆறேழு ஆஸ்கர்களை அள்ளியிருப்பாய்.. இப்போதோ  இருக்கும் வீட்டையும் விற்று படம் எடுத்து பேரம் பேசிக் கொண்டிருக்கிறாய். உன் கலைத்திறனை மதிக்கத் தவறிய மண்ணில் இனியும் உன் திறமைகளைக் கொட்டி வீணாக்காதே!! இது கமலஹாசன் எனும் கடவுளிடம் இந்த பக்தன் வைக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள்..!


இவண்,
கோவை ஆவி.

3 comments:

  1. ஆவிக்கு ஏன் இத்தனை கோபம்? எனக்கு சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே கொட்டி, கலைத் தீவிரவாதியாய் வாழும் கமலை ரொம்பப் பிடிக்கும். அவருக்கு மட்டும் ஏன்தான் இத்தனை பிரச்னைகள் வருகின்றன என்கிற வருத்தமும் உண்டு. ஆனால் இத்தனை அறச்சீற்றம் எனக்கு வரலைப்பா.

    ReplyDelete
  2. அதென்னமோ தெரியலீங்க, நேத்து விஸ்வரூபத்துக்கு தடைன்னு கேள்விப்பட்டதும் உள்ளே உண்டான கொதிப்பு, எண்ணக் குமுறல்கலாக வெளிவந்துவிட்டது.

    ReplyDelete
  3. படத்தை ஒரு தரப்பினரை மட்டும் பார்க்க வைத்து கருத்து கேட்டு முடிவெடுப்பது கண்டிப்பாக தவறு ...

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails