Thursday, January 10, 2013

ஆங்கிலேயரை அடித்து விரட்டுமா இந்தியா??

                              பாகிஸ்தானிடம் பஞ்சராகிப் போன நமக்கு கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது ஆறுதல் தந்தது. அதுவும் குறைந்த இலக்கை துரத்திச் சென்ற பாகிஸ்தானை பவுலிங்கில் மடக்கி அடி பணிய வைத்தது நாளை துவங்கும்  இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு பலம் சேர்ப்பதாய் இருந்தது.



                               சாதனைக் கடவுள் சச்சின் ஓய்வு பெற்று விட்ட நிலையில் தொடர்ந்து சில போட்டிகளில் சொதப்பிய சேவாக்கையும் துரத்தி விட்டு முழுக்க முழுக்க இளைஞர்களை நம்பி இறங்கும் இந்தியா சொந்த மண்ணில் சாதிக்குமா ?   நம்பிக்கை தரும் நட்சத்திரங்கள் யார் யார் என்று பார்ப்போம்.


விராத் கோஹ்லி  -  இந்தியாவின் வருங்கால கேப்டன் என பலராலும் கூறப்பட்ட இளம் வீரர். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் பேட்டிங்கில் சாதிக்கவில்லை என்றாலும்  பீல்டிங்கில் வழக்கம்போல் கலக்கினார்.  இங்கிலாந்துக்கு எதிராக அதிரடி வாணவேடிக்கை  நடத்துவார் என எதிர்பார்க்கலாம்.


அஷ்வின்-   இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சுழல் மாயஜாலத்தை நிகழ்த்திய இவர் மற்ற போட்டிகளில் சோபிக்கவில்லை என்றாலும் ரன் வேகத்தை கட்டுப் படுத்தவும் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கவும் செய்கிறார் பேட்டிங்கிலும் ஜொலிப்பதால் இந்திய அணிக்கு பலம் சேர்க்கிறார்

கம்பீர், ரெய்னா, ஜடேஜா - துவக்க ஆட்டக்காரர் கம்பீர், ரெய்னா இருவரும் தமது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். சேவாக்கின்  வெளியேற்றம் கம்பீரின் மனதிலும் பயத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதால் இந்த முறை நல்ல துவக்கத்தை இவரிடம் எதிர்பார்க்கலாம். ஜடேஜாவின் பக்கம் அதிர்ஷ்டம் இருப்பதால் பாகிஸ்தானுக்கு எதிரான இவர் செயல்பாடு தேர்வாளர்களுக்கு திருப்தி அளித்துள்ளது.


ரஹானே, புஜாரா - சேவாக்கின் இடத்தை நிரப்ப வந்திருக்கும் இளம் சிங்கங்கள். ரஹானே டிவென்டி 20 போட்டியில் சாதித்தவர். பூஜாரா டெஸ்டில் கலக்கியவர். இருவரும் ஒருநாள் போட்டிகளில் இனிமேல் தான் தமது திறமையை நிரூபிக்க வேண்டும்.


டிண்டா, புவனேஸ்வர் குமார், இஷாந்த் - ஸ்விங் பந்து வீச்சின் மூலம் பாகிஸ்தானை திணறடித்தார் புவனேஸ்வர். ஜாகீர் இல்லாததால் டெத் பவுலிங்கை கையாள இஷாந்த் நிச்சயம் உதவுவார். டிண்டா  இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் நிரந்தர இடம் பிடிக்கலாம்.


யுவராஜ் சிங்- தற்போது பேட்டிங் மற்றும் பவுலிங்கில் முழு பார்மில் உள்ள ஒரே இந்திய வீரர். இவருடைய சிக்சர்களுக்கு இங்கிலாந்து பவுலர்கள் தடுமாறப் போவது உறுதி.

ரோஹித், அமித், ஷமி அகமது-   படு கேவலமான பார்மில் உள்ள போதும் ரோஹித்  தேர்வு செய்யப்பட்டிருப்பது ஆச்சர்யமான விஷயம். அமித் மிஸ்ரா சுழல் ஜாலம் காட்டுவர் என நம்பலாம். புதுமுகம் ஷமி தன்  அட்டகாசமான வேகத்தால் முதல் போட்டியில் கலக்கினார். இனிவரும் போட்டிகளிலும் தொடர  வேண்டும்.


தோனி - விளங்க முடியாத கவிதையாய் இவர். சில நேரம் மோசமாக விளையாடுகிறார். எல்லோரும் சொதப்பும் போது  இவர் விஸ்வரூபம் எடுக்கிறார். என் தனிப்பட்ட கருத்து 2015 உலகக் கோப்பையை மனதில் கொண்டு ஒருநாள் மற்றும் டிவென்டி 20 போட்டிகளுக்கு இளைஞர்கள்  யாராவது ஒருவருக்கு தலைமை பொறுப்பை கொடுத்துவிட்டு இவர் டெஸ்டில் மட்டும் வழிநடத்தினால் நன்று.




No comments:

Post a Comment

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails