Wednesday, January 9, 2013

2013- பொங்கல் படங்கள் ஒரு அலசல்!!

                          பொங்கல் வந்தாச்சு..!! பானையில் பொங்கல் வைக்கிறோமோ இல்லையோ, கரும்பு கடிக்கிறோமோ இல்லையோ நிச்சயம் பொங்கல் நாளில் நம்மில் பலரும் ஒரு திரைப்படம் பார்க்க நிச்சயம் ஆசைப்படுவோம்.. ( நல்ல நாளில் சினிமா பார்த்து டைம் வேஸ்ட் பண்ணனுமான்னு நினைக்கிறவங்க இந்த பதிவ ஒரு டைம் பாஸுக்காக  படிங்க.. )                          இப்போ, அப்போன்னு அவரோட அரசியல் பிரவேசம் மாதிரியே எதிர்பார்ப்போடு இந்த முறையும் கோச்சடையானுக்காக நம்மை காத்திருக்க வைக்கிறார் சூப்பர் ஸ்டார். மீண்டும் ஏமாற்றம் தான்.. ( கடை, எப்போ சார் திறப்பீங்க?? )


                       
                            விஸ்வரூபம் - கலையுலகத்தின் என்சைக்ளோபீடியா கமலஹாசன் நடித்து வெளிவரும் படம். வழக்கம்போல் கமல் படங்களுக்கே உரிய எதிர்ப்புகளை சந்தித்து (இந்த முறை DTH  வடிவில்) நம்மை வந்தடைகிறது. போர் மற்றும் வன்முறையால் பாதிக்கப்படும் ஒருவன் எவ்வாறு இந்த சமூகத்தை எதிர்கொள்கிறான் என்ற கதைக் கருவோடு, ஆரோ-3D  எனும் ஒலி  நுட்பமும் இணைத்து நம் கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்து படைக்க விஸ்வரூபம் எடுக்கிறார் உலக நாயகன். ஆண்ட்ரியா, பூஜா குமார் கதாநாயகிகள். ஷங்கர்-எசான்-லாய் இசை.
போதிய திரையரங்குகள் கிடைக்காத காரணத்தால் சனவரி 25 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


                             அலெக்ஸ் பாண்டியன்- தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகிவிட்ட நிலையில் கார்த்தி, அனுஷ்கா நடித்து வெளிவரும் படம். இயக்குனர் சுராஜ் (படிக்காதவன் இயக்குனர் ) இந்த படத்தை பற்றி கூறும் போது ஆக்க்ஷன் மற்றும் காமெடி நிறைந்த படம் என்றார்.. ட்ரைலர் நம்மை அவ்வளவாக கவராவிட்டாலும் "BAD  BOY " பாடலும் சந்தானத்தின் டைமிங், ரைமிங் காமெடிகளும் படத்தின் வெற்றிக்கு உதவலாம்.
                                 கண்ணா லட்டு தின்ன ஆசையா -   சந்தானம், சேது மற்றும் பவர் ஸ்டார் நடித்து வெளிவரும் நகைச்சுவை விருந்து இது. பெரிய திரையில் லொள்ளு சபா பார்க்கலாம். பவர் ஸ்டார் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருப்பதாய்  கேள்வி..( என்ன கொடுமை சார் இது..) இந்த படம் "இன்று போய்  நாளை வா" திரைப்படத்தை போல் இருக்கிறது என்று சொல்லி இயக்குனர் கே.பாக்கியராஜ் வழக்கு தொடர்ந்திருக்கிறார். சந்தானத்திற்காக  சிம்பு சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார்.பாடல்கள் சுமார்.                                    நாயக் (தெலுங்கு) -  "மாவீரன்" புகழ் ராம் சரண் தேஜா நடித்து வெளிவரும் படம். காஜல் அகர்வால், அமலா பால் கதாநாயகிகளாக நடிக்க முதன் முறையாக இரு வேடங்களில் நடிக்கிறார் ராம்சரண். தமனின் இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட் என்பதால் இப்படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது.                                   சீதம்மா வகிட்லொ சிரிமல்லெ செட்டு (தெலுங்கு)- மசாலா பட ஹீரோ வெங்கடேஷும் "பிரின்ஸ்" மகேஷ் பாபுவும் இணைந்து நடித்திருக்கும் படம். அஞ்சலி, சமந்தா கதாநாயகிகள். இசை மிக்கி J மேயர்.                                        மாத்ரு கீ பிஜ்லி கா மண்டோலா (ஹிந்தி ) - இளம் புயல் இம்ரான் கான் மற்றும் "கள்ளச் சிரிப்பழகி" அனுஷ்கா ஷர்மா நடித்து வெளிவரும் நகைச்சுவைத் திரைப்படம். அமீர்கான் மற்றும் அஜய் தேவ்கன் நட்புக்காக சிறு வேடத்தில் நடித்துள்ளனர்.                                            கேங்ஸ்டர் ஸ்குவாட் -  ஐயாம் சாம் திரைப்படத்திற்காக ஆஸ்கர் வாங்கிய ஷான் பென்  மற்றும் ரயன் கோஸ்லிங்  நடித்து வெளிவரும் அதிரடி திரைப்படம். இந்தியாவில் அடுத்த வாரம் வெளியாகலாம்.

விஸ்வரூபம், சமர், ஆதிபகவன்,  வாலு, மதகஜராஜா, கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் பரதேசி ஆகிய குதிரைகள் பொங்கல் ரேசிலிருந்து பின்வாங்கிவிட்டதால் அலெக்ஸ் பாண்டியன் தனிக்காட்டு ராஜாவாய்  வலம்  வருவான் என்பதில் ஐயமில்லை...
4 comments:

 1. கோவிலுக்கு போய்ட்டு வந்தவுடன் ஏதோ பக்தி மார்க்கமா பதிவு போடுவான்னு பார்த்தா..பயபுள்ள...சினிமாவுக்கு தாவிடுச்சே...

  ReplyDelete
 2. இவ்வளவு படங்களா ரிலீசாகுது. நீங்க எந்தப்படம்லாம் பாத்தீங்க பாஸ்? (பாக்கப்போரீங்க?)

  ReplyDelete
 3. பூந்தளிர்-ஆமாங்க.. எந்த படத்த மிஸ் பண்றதுன்னு தெரியல.. ஹி ஹி ...

  ReplyDelete
 4. மச்சி, டோன்ட் ஒர்ரி.. ஆன்மீக பயணம் சற்று பொறுத்து வரும். காற்றுள்ள போதுதானே தூற்ற முடியும்.. பொங்கல் ரிலீஸ் பத்தி இப்போதானே போட முடியும்.

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails