பயணத்தின் சுவடுகள்...
தேசம்: 2; ஸ்தலம்: 6; தொலைவு: 7.
மீ இன் மாசெசூசெட்ஸ் (அமெரிக்கா)
( பாஸ்டன் )
வேலை நிமித்தமாக அமெரிக்காவின் மாசெசூசெட்ஸ் மாநிலத்தின் வால்தம் நகரில் எட்டு மாத காலம் தங்க வேண்டியிருந்தது. நான் பணிபுரிந்த அலுவலகம் மாசெசூசெட்ஸின் தலைநகரான பாஸ்டனில் இருந்தது. அமெரிக்காவின் சுதந்திரப் போராட்டத்தின் துவக்கமாக அமைந்த "பாஸ்டன் தேநீர் விருந்து" நடந்த பாலத்திற்கு மிக அருகில் இருந்தது அலுவலகம்.
வருடத்தில் ஏழு மாதங்கள் பனிப்பொழிவு இருக்குமாதலால் தெருக்கள் எப்போதும் வெண்மை நிறத்தில் காணப்படும். பாஸ்டன் நகரம் அமெரிக்காவின் மிகப் பழமையான நகரங்களுள் ஒன்றாகும். பாஸ்டனுக்கு மிக அருகில் கேம்பிரிட்ஜ் நகரில் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகம் உள்ளது.
அதிகப்படியான பனிப்பொழிவின் காரணமாக இங்குள்ள மக்களின் முக்கிய பொழுதுபோக்கு ஸ்கீயிங் என்று சொல்லப்படும் பனிச்சறுக்கு விளையாட்டு தான். சிறிய குன்று போன்ற பனிச் சரிவில் மேலிருந்து கீழே வருவது தான் இந்த விளையாட்டு.
பனிச்சறுக்கை விளையாட்டு என்று கூறினாலும், முதல்முறை செல்பவர்களுக்கு அங்கே முறையான பயிற்சி அளிக்கப்படுகிறது இதற்கென பிரத்யேக காலணிகள் உள்ளன.. அந்த காலணிகளில் பொருந்தக் கூடிய தட்டையான ஒரு தகடும் "Pole" என்று சொல்லப்படும் இரு கம்பிகளும் கொடுக்கப்படும்.
முதலில் இவற்றை சுமந்து கொண்டு அந்த பனிக்குன்றை ஏற வேண்டும். பின்பு தகட்டை காலணிகளுடன் பொருத்திக் கொண்டு கால்களை சரித்து மெதுவாக எழுந்து நிற்க வேண்டும். பின் சிறு உந்துதல் மூலம் கீழ்நோக்கி நகர ஆரம்பிக்க வேண்டும். போல்களின் உதவி கொண்டு திசை மாற்றவோ, அல்லது வேகத்தை குறைக்கவோ செய்யலாம்.
அமெரிக்காவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் அரசுப் பேருந்துகளும், எலெக்ட்ரிக் ரயில்களும் அதிகம் உள்ள ஒரு மாநிலம் மாசெசூசெட்ஸ். உச்சரிக்க சற்று சிரமமான பெயர் தான் என்றாலும் எனக்கு பிடித்தமான ஊர்களில் இதுவும் ஒன்று..!
படங்களும் பகிர்வும் நல்லா இருக்கு. பனி பார்க்கும் போது இங்கயும் குளிருது.
ReplyDeleteதகவல்களும்..போட்டோக்களும் அருமை....நீங்க சொன்னமாதிரி கலர்(?)கள் குறைவாகத்தான் இருக்கு..!
ReplyDeleteஅம்மக்களின் பழக்க வழக்கங்களையும்
ReplyDeleteசொல்லுங்கள் ஐயா.
ஏழு மாசம் பனி இருந்தா எப்படி நடமாடறது!
‘சர்வவைல் ஆப் த பிட்டஸ்ட்’- டார்வின் விதி.
மனிதன் மனிதனோடு அல்லது இயற்கையோடு போராடித்தான் ஆக வேண்டும்.
"பாஸ்டன் தேநீர் விருந்து" பற்றி மகனுக்கு சொல்லிக்கொடுத்து தேர்வுக்கு அனுப்ப அதற்கு சிறுவயதில் அவர் எழுதி சொத்ப்பிய பதில் நினைவுக்கு வந்து சிரிக்கவைத்தது ...
ReplyDeleteஅருமையான பயணப்பகிர்வுகள்..பாராட்டுக்கள்..
அவர்களின் நடைமுறை வாழ்க்கை தெரிந்து கொள்ள ஆவல் மிகக்கொண்டேன். அடுத்த பதிவில் எதிர் பார்க்கிறேன். கலர் !!! படங்களுடன் :)
ReplyDeleteநன்றி பூந்தளிர்
ReplyDeleteநன்றி மனோ.. வருகைக்கும், அறிமுகத்திற்கும் நன்றி..!
ReplyDeleteவாங்க ரமேஷ்.. ரொம்ப நாளா காணோம்..
ReplyDeleteநன்றி உலக சினிமா ரசிகன் அவர்களே!! உங்கள் விருப்பத்தை அடுத்து வரும் பதிவுகளில் நிறைவு செய்ய முயற்சிக்கிறேன்.
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி,மிக்க மகிழ்ச்சி.. வருகைக்கு நன்றி..
ReplyDeleteகலாகுமாரன் அவர்களே, நிச்சயம் உங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்ய முயல்கிறேன்..
ReplyDelete