Friday, January 11, 2013

நாயக் (தெலுங்கு) - திரை விமர்சனம்



                           அப்பாவின் மெகா ஸ்டார் பட்டத்தையும் சித்தப்பாவின் பவர் ஸ்டார் (நம்ம ஊர் பவர் ஸ்டார் இல்ல ) பட்டத்தையும் சேர்த்து மெகா பவர் ஸ்டார் என்ற அடைமொழியோடு களமிறங்குகிறார் ராம் சரண் தேஜா.. படத்தில் இரு வேடங்களில் வருகிறார்.. இரு கேரக்டர்களும் ஹேர் ஸ்டைல் ஒரே மாதிரி வைத்துள்ளது அழகிய தமிழ் மகன் விஜயை நினைவு படுத்தினாலும் (?!!) இரண்டாவது பாதியில் அதற்கான தேவையை உணர்த்தியிருக்கிறார்கள்..


                            புராதானப் படங்களிலேயே  பார்த்துவிட்ட கதை. வில்லன் ஊரையே மிரட்டி அடக்கி ஆள்கிறான். எதிர்ப்பவர்களை எல்லாம் குத்திக் கொலை செய்கிறான். ஆரம்பத்தில் இந்த அநியாயங்களை தட்டிக் கேட்க நினைக்கும் தன் அக்காவின் கணவரை ஹீரோ தடுத்து நிறுத்துகிறார். பின்பு அவரைக் குத்திக் கொன்ற பிறகு பொது நலத்துடன்( ?!!) மக்களைக் காக்க தாதாவாகி எல்லோரையும் அழிக்கிறார்.. (திருப்பாச்சி ஞாபகத்துக்கு வருதா?) அடிபணியும் ரவுடிகளின் சொத்துக்களை எழுதி வாங்கிக் கொள்கிறார். எதிர்ப்பவர்களை ஆபீஸ் ரூமுக்கு வரவைத்து கவனிக்கிறார் (சிவாஜி தெலுங்குல வந்துதா இல்லையா). முடியலடா சாமி..


                             மகதீராவில் சூப்பர் ஜோடி பட்டம் வென்ற ஒரே காரணத்துக்காக மீண்டும் காஜல் அகர்வால். இந்த முறை அமலா பாலும் சேர்ந்து கொள்(ல்)கிறார். ஆனால் என் ஒட்டு ஒரு பாடலுக்கு வந்தாலும்  ராம் சரணுக்கு பொருத்தமாக இருக்கும் சார்மிக்குதான். படம் தொய்வடையும் போதெல்லாம் படத்தை தூக்கி நிறுத்துவது பிரம்மாநந்தத்தின் காமெடிகள் தான். காஜலின் அண்ணனாக வரும் ரவுடி அசத்தல் எக்ஸ்பிரஷன்களில் நம்மை கவர்கிறார்.தமனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். கடைசி குத்து பாட்டு கலக்கல்.


                               ஒருவாறாக நம்ம ஊரில் விஜய் திருந்தி நல்ல படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார்.. அது மாதிரி ஆந்திராவில மாற்றம் ஏதும் நிகழுமா?

  40 / 100                       

1 comment:

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...