அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, தங்கை, பாட்டி என உறவுகளின் பெருமையையும் அவர்களுக்கிடையே இருந்த பசப் பிணைப்பையும் கூறும் படம் இது. நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும்.. வயதில் சிறியவரோ பெரியவரோ யாராயினும் நல்லதை கூறினால் ஏற்றுக் கொள்ளலாம் என்ற நல்ல கருத்துகளை கூறும் திரைப்படம்.
பார்க்கும் எல்லோரிடமும் இன்முகத்துடன் நல்ல விஷயங்களை மட்டும் பேசும் அப்பா (பிரகாஷ் ராஜ்), பிள்ளைகளை அன்புடனே வளர்க்கும் அன்னை(ஜெயசுதா). பாசக்காரப் பாட்டி, கோபக்கார அண்ணன் (வெங்கடேஷ்), புத்திசாலித் தம்பி (மகேஷ் பாபு). இவர்கள் வீட்டில் வளரும் உறவுக்காரப் பெண் சீதா(அஞ்சலி), தம்பியை காதலிக்கும் மற்றொரு உறவுக்காரப் பெண் கீதா (சமந்தா) மற்றும் தங்கை (அபிநயா).. இவர்களுக்குள் நிகழும் உணர்வுப் போராட்டங்கள் தான் கதை..
அஞ்சலியின் முதல் தெலுங்கு படம், அசத்தியிருக்கிறார்.. வெங்கடேஷிடம் தன் உணர்வுகளை சொல்லும் இடத்தில் நெகிழ வைக்கிறார். சமந்தா செல்லமாய் வந்து போகிறார். மகேஷ் பாபுவை பார்த்தவுடன் காதலிப்பதும், அவரைச் சுற்றி வருவதுமாய் இருக்கும் அவர் கொஞ்சம் நடிக்கவும் முயற்சித்திருக்கலாம்.
                                       படத்தில் இவ்வளவு கேரக்டர்கள் இருந்தாலும் பெரியவன் வெங்கடேஷும் சின்னவன் மகேஷ் பாபுவும் படம் முழுக்க வியாபித்திருக்கிறார்கள். அப்பா அம்மாவிலிருந்து காதலிக்கும் பெண் வரை எல்லோரும் சின்னவனே , பெரியவனே என்று தான் விளிக்கிறார்கள். மகேஷ் பாபு படத்தை முழுவதுமாக தன்  தோளில்  தாங்கி நகர்த்துகிறார்.  அண்ணனை சமாதானப் படுத்துவதிலும், அவரை நல்வழிப்படுத்தும் ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பாக செய்திருக்கிறார். அதே போல் ரோமென்ஸ் காட்சிகளிலும் கலக்குகிறார். வெங்கடேஷ் கோபப்படும் கேரக்டர் என்பதற்காக எல்லா இடத்திலும் கோபமாக நடந்து கொள்வது அவ்வளவாக மனதோடு ஒட்டவில்லை.
                                     நல்ல தரமான குடும்பப் படங்கள் எடுத்துக் கொண்டிருந்த நம் இயக்குனர் விக்ரமனை நினைவு படுத்திய படம் இது.நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல குடும்பப் படம் பார்த்த திருப்தி.. தமிழில் இந்தப் படத்தை ரீமேக் செய்தால்  கூட நன்றாக இருக்கும்.
70 / 100
70 / 100






 
 
 
 
உங்க விமரிசனமே படம் பார்த்தாமாதிரி இருக்குங்க. பகிர்வுக்கு நன்றிங்க.
ReplyDeleteவிஜய்க்கு மீண்டும் ஒரு ஹிட் படம் கொடுக்க நல்ல ஒரு வாய்ப்பை தந்துள்ளார்..மகேஷ் பாபு !
ReplyDeleteபொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள்!
நன்றி பூந்தளிர்..
ReplyDeleteநன்றி ரமேஷ். விஜய் இன்னும் இரண்டு வருஷத்துக்கு பிஸி என்று கேள்வி.. எனவே ரீமேக்கில் அவர் நடிப்பது சந்தேகமே..
ReplyDelete