"What is this Pongal?" என் அலுவலக நண்பர் கேட்க..
"It's a festival, Tom" என்றேன்..
"Oh.. What do you do on that day?" என்று அவர் மீண்டும் கேட்கவே அவருக்கு ஆங்கிலத்தில் பொங்கல் பற்றி சொல்லத் துவங்கினேன்..
" பொங்கலுக்கு முந்தைய தினம் வீடுகளைச் சுத்தம் செய்வோம், வீட்டுக்கு வெள்ளையடித்து அழகு படுத்துவோம். பின் உறவினர்களை அழைத்து இனிப்புகள், கரும்புகளுடன் பொங்கல் வைத்து கொண்டாடுவோம்"
"Did you say you make Pongal on that day?" என்று ஒரு குழப்பத்துடன் கேட்டார்..
ஆம் என்று நான் பதிலளிக்கவும்..
"So, Pongal is some kind of food or what?" என்றார்.
"டாம், பொங்கல் என்பது உணவு தான். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இரண்டு வகையான பொங்கல் இருக்கிறது.. ஒன்று இனிப்பாக செய்யப்படும் சர்க்கரைப் பொங்கல், மற்றொன்று சிறிது காரத்துடன் செய்யப்படும் வெண் பொங்கல்" என அவருக்கு புரியும்படியாய் சொல்லவும்..
" Wait, wait.. your festival and the food has the same name?" எனக் கேட்க
" ஆமா டாம் .. உணவின் பெயரில் இருந்து தான் அந்த பண்டிகைக்கு பெயர் கிடைத்திருக்க வேண்டும்.அமெரிக்காவில் Thanks Giving Day கொண்டாடுவது போல நெல் விதைத்து அறுவடை செய்யும் உழவர்கள் தங்கள் உழைப்பில் உருவான அரிசியில் உணவு சமைத்து உறவினர்களுடன் பகிர்ந்து உண்ணும் ஒரு சிறந்த நாள் இது" என்றேன்."
"Is it celebrated throughout India" என்று அடுத்த கேள்வியை அடுக்க,
" இல்ல டாம் .. பொங்கல் என்பது தமிழ் நாட்டில் மட்டும் கொண்டாடப் படும் ஒரு பண்டிகை. இது போன்ற பண்டிகைகள் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது."
" So you make Pongal dish only on Pongal day" என்று அவர் கேட்கவும், எனக்கோ பார்த்திபனிடம் மாட்டிக் கொண்ட வடிவேலுவின் நிலைமை ஞாபகத்துக்கு வந்தது..
" அப்படியில்ல, எப்ப வேணும்னாலும் நாம பொங்கல் செஞ்சு சாப்பிடலாம்" என்றேன்.. அதற்கு அவரோ
" Oh.. Even on Diwali day you make Pongal ?" அவர் செல்லும் ரூட் எனக்கு புரிந்து விட..
" டாம், தீபாவளியன்னிக்கு பொங்கல் செய்யலாம், ஆனா தீபாவளிய பொங்கல்ன்னு சொல்ல மாட்டோம்.." என்றபடி அவர் அடுத்த கேள்விக் கணையை தொடுக்கும் முன் அவருக்கு கொஞ்சம் பொங்கல் கொடுத்து விட்டு என் மேசைக்கு நகர்ந்தேன்..
அனைவருக்கும் என் போகி, பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள்..!
இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
ReplyDeleteநல்ல நகைச்சுவையான பொங்கல் வாழ்த்துக்கள். உளமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும்
ReplyDeleteஹா ஹா ஹா நல்லா மாட்டிகிட்டீங்க சார். நல்லாவே சமாளிச்சிருக்கீங்க. பகிர்வுக்கு நன்றிங்க.
ReplyDeleteஇனிய பொங்கல் தினங்கள் ..வாழ்த்துக்கள் !
ReplyDeleteஇனிய பொங்கல் வாழ்த்துக்கள். அருமையான நகைச்சுவைப் பொங்கல்
ReplyDelete