கவிதை ஒன்று சொல்லுதே நெஞ்சமே!
Link: https://soundcloud.com/anandwaits/20121229-kavithai-ondru-happy
லாலலால லாலலா லாலலா லலலாலலால லாலலா லாலலா..
கவிதை ஒன்று சொல்லுதே நெஞ்சமே!
செவிகள் திறந்து கேளடி கொஞ்சமே!
என் இதயம் என்றும் உன்னிடம் தஞ்சமே!
உன் மொழிகள் கேட்க வேண்டியே கேஞ்சுமே!
உன் ஆசை ஞாபகம் ஓர் காதல் காவியம்
கண் முன்னே தோன்றிப் போகுதே கண்மணி.. (கவிதை)
சின்ன சின்ன கண்களாலே பேசினாய்
சிந்தனைகள் யாவும் உனதாக்கினாய் (2)
சந்தோஷத்தாலே எந்தன் உள்ளம் துள்ளுதே
ஹைய்யோ உன் அழகு என் மனதை கொல்லுதே!! (கவிதை)
காதல் சொல்லி நானும் காத்து நிற்கிறேன்..
சிறு புன்னகையே பதிலாக தருகிறாய்.. (2)
ராஜாவின் ராகங்களும் ஓடுதே..
அச்சச்சோ இதுவும் ரொம்ப பிடிக்குதே! (2) (கவிதை)
சாதி பேதம் எதுவுமில்லை காதலில்.
நீயும் நானும் இணைவோமே புரிதலில். (2)
என்னோடு தயக்கமென்ன பைங்கிளி
எந்நாளும் நீதான் என் காதலி..! (2) (கவிதை)
கவிதை நல்லா இருக்குங்க. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஜெமினி கணேசன் பாட்டு மாதிரி இருந்ததுங்க குரலும் ,மெட்டும்... வாழ்த்துக்கள் ... இன்னம் கொஞ்சம் மெருகேற்றினால் போதும்
ReplyDeleteநன்றி சிவகாமி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
ReplyDeleteஎழில் மேடம்-சாம்பார்-ங்கறீங்க !! ;-)
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி..