ஜாக்கி சானின் கடைசி ஆக்க்ஷன் திரைப்படம் என்ற முத்திரையோடு வெளிவந்திருக்கும் இந்தப் படம் "அகில உலக சூப்பர் ஸ்டார்" இவர்தான் என்பதை நிச்சயம் மீண்டும் ஒரு முறை பறைசாற்றும் என்பதில் ஐயமில்லை.. ஆக்க்ஷன், காமெடி, சென்டிமென்ட் மற்றும் இவற்றை தாங்கிப் பிடிக்கும் வலுவான கதை என்று வழக்கமான ஜாக்கி சானின் எல்லா அம்சங்களும் நிறைந்த படம்.
போரில் இங்கிலாந்து சீனாவிடமிருந்து கடத்தி சென்ற பன்னிரண்டு புராதன சின்னங்களை ( நம்ம ஊர் கோஹினூர் வைரத்த சுட்டுட்டு போன மாதிரி) மீட்டு வர பணியமர்த்தப் படுகிறார் JC (ஜாக்கி சான் ). இவர் தன் குழுவுடன் சென்று பல சாகசங்கள் செய்து ஆபத்தான எரிமலையின் முன் கடைசி சின்னம் வரை மீட்பது தான் கதை.
டைரக்டர், புரோடியுசர், பாடகர், சண்டைப் பயிற்சியாளர் என பதினைந்து பொறுப்புகளை ஏற்று அதற்காக கின்னஸ் ரெக்கார்டு புக்கில் (இரண்டு சாதனைகள்) இடம் பெற்றிருக்கிறார் நம்ம ஜாக்கி.. (நம்ம டி.ஆர். சார் ஏன் இதுக்கு முயற்சி செய்யல?) இந்த வயதிலும் உடலை வளைத்து அவர் சண்டை போடும் காட்சிகள் அபாரம். (இன்னமும் இளமைத் துள்ளல்). படத்தின் இறுதியில் வழக்கும் போல் இடம்பெறும் ப்ளூபர்ஸ் காட்சிகள் மட்டுமல்லாமல் ஜாக்கி பாடிய பாடலும் இடம்பெறுகிறது.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே..!
80 / 100
2012 நமக்கு எப்படி ஆரம்பித்ததோ தெரியாது. ஆனால் அதன் முடிவு நமக்கு நிச்சயம் சோகம் தருவதாய் உள்ளது. சச்சினின் ஓய்வு அறிவிப்பு மற்றும் ஜாக்கியின் கடைசி ஆக்க்ஷன் படம் என்பது வருத்தத்தை தந்தாலும் அவை இளைஞர்களுக்கு வழிவிட்டு வழிகாட்டும் என்பதால் சந்தோஷத்தோடு அவற்றை நாம் ஏற்றுக் கொள்வோம்..! இந்த வருடத்தின் கடைசி பதிவு இது என்பதால் எல்லோருக்கும் 2013 ஆம் ஆண்டின் புத்தாண்டு நல்வாழ்த்துகள் கூறிக் கொள்கிறேன்..!
போரில் இங்கிலாந்து சீனாவிடமிருந்து கடத்தி சென்ற பன்னிரண்டு புராதன சின்னங்களை ( நம்ம ஊர் கோஹினூர் வைரத்த சுட்டுட்டு போன மாதிரி) மீட்டு வர பணியமர்த்தப் படுகிறார் JC (ஜாக்கி சான் ). இவர் தன் குழுவுடன் சென்று பல சாகசங்கள் செய்து ஆபத்தான எரிமலையின் முன் கடைசி சின்னம் வரை மீட்பது தான் கதை.
80 / 100
2012 நமக்கு எப்படி ஆரம்பித்ததோ தெரியாது. ஆனால் அதன் முடிவு நமக்கு நிச்சயம் சோகம் தருவதாய் உள்ளது. சச்சினின் ஓய்வு அறிவிப்பு மற்றும் ஜாக்கியின் கடைசி ஆக்க்ஷன் படம் என்பது வருத்தத்தை தந்தாலும் அவை இளைஞர்களுக்கு வழிவிட்டு வழிகாட்டும் என்பதால் சந்தோஷத்தோடு அவற்றை நாம் ஏற்றுக் கொள்வோம்..! இந்த வருடத்தின் கடைசி பதிவு இது என்பதால் எல்லோருக்கும் 2013 ஆம் ஆண்டின் புத்தாண்டு நல்வாழ்த்துகள் கூறிக் கொள்கிறேன்..!
பத்துப் பதினஞ்சு பொறுப்புகளை கவனிச்சாலும் ஜாக்கியின் படங்கள் சந்தோஷம் தருபவை... டி.ஆர். ரத்தம் வர வெக்கிற ஆசாமியாச்சுதே... ஏன்யா அவரத் தூண்டறீங்க? வொய்திஸ் கொலவெறி? துவக்கம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்ற ஒன்றும் இருந்தே தீர வேண்டும். சச்சின் என்றாவது ஒரு நாள் மற்றவர்கள் துரத்தி ஓய்வு பெறாமல், சாதனை மன்னனாக கம்பீரத்துடன் விலகியிருப்பதில் மகிழ்வுதான் அடைய வேண்டும். வரும் 2013 உங்களுக்கு எல்லா வளங்களையும் தர என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
ReplyDeleteஎன்னாது...? கமெண்ட்லாம் ‘ஓனர்’ பாத்துத்தான் வெளில வருமா? யாருப்பா அது ‘ஓனர்’? ஹி... ஹி...
ReplyDeleteஆரம்ப கால டி.ஆரின் ரசிகன் நான். நிஜமாவே அவருக்கு திறமை இருக்குன்னாலும் சமீபத்திய பிளேடுகளினால் மக்களிடம் ரத்தம் வர வெச்சது உண்மைதான்..
ReplyDeleteஉங்களுக்கும் 2013 சிறப்பாய் அமைய வாழ்த்துகள்.. உங்க புத்தக வெளியீடும் மாபெரும் வெற்றியடைய மனமார வாழ்த்துகிறேன்..
சார்.. அந்த அப்பாடக்கர் நாங்க தாங்கோவ்.. நாங்க கடைய திறந்தா தான் சரக்கு வெளிய வரும்.. ஹி ஹி ஹி.. ( முன்பு சில விஷமிகள் அத்து மீறி உள்ளே நுழைந்ததால் இந்த ஏற்பாடு )
ReplyDeleteஜாக்கிசான் படத்துக்கு சுடச்சுட விமர்சனம் எழுதிய
ReplyDeleteகோவை ஆ.வி சாமிக்கு பாராட்டுக்கள்.
ஜாக்கி சான் படத்துக்காக சமயத்தின் கட்டுப்பாடுகளை வேறு மீற வேண்டியிருந்தது.. ;-)
ReplyDelete