Tuesday, December 18, 2012

பறக்கும் மாட்டு வண்டி.. ( Air Asia )

                 
                      நம்மில் சிலர் கிராமத்தில் மாட்டு வண்டியில் பயணித்திருப்போம். மாடுகளின் கழுத்தில் பூட்டப்பட்ட அந்த மணியின் ஜல் ஜல் ஒலியும்,  டுர்  டுர்  என அந்த மாட்டை விரட்டும் மாட்டுக்காரனின் ரீங்காரமும்.. க்ளக் க்ளக்  என்று கேட்கும் குளம்படிச் சத்தமும்,  மேடு பள்ளங்களில் குலுக்கல்களும் அருமை எனும் ஒற்றை வார்த்தையில் அடக்கி விட முடியாது. அந்த இனிமையான பயணத்தை அனுபவிக்க நிச்சயம் இந்த தலைமுறையினருக்கு கொடுத்து வைக்கவில்லை..


                      அது சரி விஷயத்துக்கு வருவோம்.. மாட்டு வண்டி தெரியும், அதென்ன பறக்கும் மாட்டு வண்டி என்று கேட்கிறீர்களா? நம்ம ஏர் ஏசியா விமானத்தை தாங்க அப்படி சொன்னேன். நானும் எத்தனையோ ஊருல எவ்வளவோ பிளைட்டுல ஏறியிருக்கேன்.. ஆனா இந்த மாதிரி ஒரு அனுபவம் எந்த பிளைட்டுலையும் கிடைச்சதில்ல..


                         "Now Everyone Can Fly" என்பது ஏர் ஏசியாவின்  முத்திரை வாக்கியம்.  நடுத்தர மக்களும் விமானத்தில் பயணிக்க வேண்டுமென மற்ற விமான சேவைகளை விட குறைவான கட்டணத்தில் இயக்கப்படும் நோக்கத்திற்கு  என் பாராட்டுகள்.. ஆனால் அதற்காக இவர்கள் தரும் தரம் குறைந்த சேவைகளை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது.. 


                            ஒரு சாதாரண பேருந்தில் இருப்பதை விட மிக மிக நெருக்கமான இருக்கைகள்,  கால்களை நீட்டுவதற்கு தேவையான லெக் ரூம் குறைவு.  மூன்று மணி நேரத்திற்கும் மேற்பட்ட  பயணத்திற்கு ஏற்ற சொகுசு இருக்கைகள்  இல்லாதது..வெளிநாட்டு விமானங்களில் கூட வீடியோ வசதியின்மை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். மேலும் மலேசியா விமான தளத்திலிருந்து வெளியே வர சுமார் அரை மணி நேரம் நடந்து தான் வெளிவர வேண்டும். 


                                உள்நாட்டு விமானங்களில் குடிக்கும் தண்ணீருக்கு காசு வாங்குவதை ஏற்றுக் கொள்ளலாம்.. ஆனால் சர்வதேச விமானங்களில் பொதுவாக தண்ணீரும், ஏதாவது சிறிய அளவு உணவும் கொடுக்கப்படும். ஆனால் இங்கே குடிக்கும் நீருக்கே பணம் கொடுக்க வேண்டியுள்ளது  வருந்தத்தக்கது. ( நான் சொல்வது எகானமி கிளாஸ் என்று சொல்லப்படும் கடைநிலை சேவைகளைப் பற்றி ) .


                             
                                இத்தனை சிரமங்களுக்கு இடையிலும் நமக்கு ஆறுதல் அளிப்பது அவ்வப்பது குறுக்கும் நெடுக்குமாய் நம்மை கடந்து செல்லும் எழில் கொஞ்சும் விமானப் பணிப்பெண்கள் மட்டுமே..!
                        

8 comments:

  1. நண்பரே... ‘ஏர் ஏசியா’ ஏழைகளின் எள்ளுருண்டை.

    ReplyDelete
  2. என்னப்பா நண்பனின் அம்மணிக் காற்று வீசுகிறதா? ##குறுக்கும் நெடுக்குமாய் விமானப் பணிப்பெண்கள்##

    ReplyDelete
  3. எள்ளுருண்டை ஓகே.. ஆனா கிள்ளுக்கீரையாக மனம் ஒப்பவில்லை..

    ReplyDelete
  4. எழில் மேடம் - ஹி ஹி ஹி.. நாங்க எல்லாம் ஒரே குட்டை தானே..

    ReplyDelete
  5. மச்சி....அம்மணிகள் இருப்பதால் சகித்து கொண்டேன்...

    ReplyDelete
  6. அதிலும் அப்போ ஒரு கருப்பு அம்மணி என்னமாய் மேக்கப் பண்ணி இருந்தது...இன்கிட்டும் அன்கிட்டும் நடந்ததில் கலைந்தது அவளின் மேக்கப் மட்டுமல்ல...என் இதயமும் தான்...(
    மேக்கப் கலைந்தவுடன் அம்மணியின் சுய ரூபம் பார்த்து நாம் பயந்தது வேறு விசயம்...)

    ReplyDelete
  7. //இன்கிட்டும் அன்கிட்டும் நடந்ததில் கலைந்தது அவளின் மேக்கப் //

    மச்சி, அந்த மேக்கப் கலைந்தது கூட ஏசி சரியா போடதனால தானே?

    ReplyDelete
  8. //மேக்கப் கலைந்தவுடன் அம்மணியின் சுய ரூபம் பார்த்து நாம் பயந்தது வேறு விசயம்.//

    நந்திதா தாஸ் மாதிரி இருக்கிறா அப்புடின்னு தாங்கள் சொன்னதா ஞாபகம்.. ;-)

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails