நீண்ட நாட்களாய் நம் ஆவலை தூண்டிய நீதானே என் பொன் வசந்தம் மற்றும் கும்கி திரைப்படங்கள் இன்று வெளியாயின.. வழக்கம் போல் திரையரங்குகளில் முதல் நாள் கூட்டம் அலை மோதினாலும் படத்தின் வெற்றியை தீர்மானிப்பது படத்தின் கதையும், அதை படமாக்கிய விதமும் தான்.
கும்கி - மலையாளத்திலிருந்து சுட்ட கதைன்னு சொல்லிக்கிறாங்க, ஆனா அதெல்லாம் படம் பாக்கும் போது மறந்து போகிறது. அற்புதமான இசை (இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் பாடல்கள்).. ஜூனியர் சிவாஜியின் முதல் படம், மைனாவை பறக்க வைத்த பிரபு சாலமனின் இயக்கம் இவை எல்லாவற்றையும் விட நம்மை கவர்வது (சுந்தர பாண்டியன் புகழ் ) லட்சுமி மேனோனின் அசத்தலான அழகும், கும்கி யானையின் அட்டகாசமான நடிப்பும்.. சந்தேகமின்றி போட்டியில் நம் மனம் கவர்வது கும்கியே..!
ஆன்மீக காரணங்களால் (??) இந்த திரைப்படங்களைப் பார்த்து விமர்சனம் செய்யும் வாய்ப்பு இல்லாததால், படம்பார்த்து விட்டு வந்த என் நண்பர்களின் விமர்சங்களின் சிறு தொகுப்பு இங்கே என் வாசகர்களுக்காய் ..
நீதானே என் பொன்வசந்தம் - கெளதம் மேனன் கைவண்ணத்தில் வந்துள்ள இந்தப் படத்தில் கதை என்ற ஒன்றே கிடையாது ( இதை முன்பே இயக்குனர் கூறிவிட்டதால் அதை மன்னிப்போமாக).. இருப்பினும் சம்பவங்களின் கொர்வைகளையே படமாகும் வித்தையை முன்பே இதே இயக்குனரின் வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா படங்களில் பார்த்து விட்டதால் கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது. ஆபத்பாந்தவனாய் சந்தனத்தின் குறும்புத் தனம் நிறைந்த காமெடிகள் மட்டும்.. (கெளதம் சார் மாத்தி யோசிங்க ப்ளீஸ்)
நான்கு பருவங்களை வித்தியாசப் படுத்தும் முயற்சியில் ஜீவா ஜெயிக்கிறார்.. படத்திற்கு தொய்வை ஏற்படுத்துவது வசனங்கள், கெளதம் மேனோனின் சொந்தக் குரலில் பாடிய பாட்டு ( சார் நெக்ஸ்ட் நீங்க ஏன் ஒரு பேய் படம் எடுத்து எல்லா பாடலையும் பாடக் கூடாது??) இவருக்கு துணையாக சொந்தக் குரலில் பேசி இரு(அறு )க்கும் சமந்தா.. இளையராஜாவின் பின்னணி இசை.. ( சச்சின் மாதிரி நீங்களும் ரிடையர் ஆக வேண்டிய நேரம் வந்திடுச்சு சார்)
கும்கி - மலையாளத்திலிருந்து சுட்ட கதைன்னு சொல்லிக்கிறாங்க, ஆனா அதெல்லாம் படம் பாக்கும் போது மறந்து போகிறது. அற்புதமான இசை (இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் பாடல்கள்).. ஜூனியர் சிவாஜியின் முதல் படம், மைனாவை பறக்க வைத்த பிரபு சாலமனின் இயக்கம் இவை எல்லாவற்றையும் விட நம்மை கவர்வது (சுந்தர பாண்டியன் புகழ் ) லட்சுமி மேனோனின் அசத்தலான அழகும், கும்கி யானையின் அட்டகாசமான நடிப்பும்.. சந்தேகமின்றி போட்டியில் நம் மனம் கவர்வது கும்கியே..!
படம் பார்த்து விமர்சனம் செய்வீங்கன்னு பாத்தா இப்படி ஏமாத்திடீங்களே ஆ.வி
ReplyDeleteவிஸ்வரூபதிற்கு கலக்கல் விமர்சனம் கொடுத்திடுவோம்.. ஆதரவுக்கு நன்றி எழில் மேடம்..!
ReplyDeleteஅடேய்..சாமி...படம் பார்க்காமலே...நீங்க நல்லா வ்ருவீங்க சாமி....
ReplyDelete