Saturday, December 8, 2012

பயணத்தின் சுவடுகள்-4 (மை டியர் மலேசியா)



பயணத்தின் சுவடுகள்...
தேசம்: 1; ஸ்தலம்: 3;  தொலைவு: 4.

மை டியர் மலேசியா 
(கெந்திங்  ஹைலண்ட்ஸ் )



                       பத்து மலையிலிருந்து நேராக பயணித்தது எழில் கொஞ்சும் கெந்திங் ஹைலண்ட்சிற்கு.  இங்கு செல்வதற்கு தரை மார்க்கமாகவும் செல்லலாம் அல்லது  கேபிள் கார் துணை கொண்டும் செல்லலாம். சுற்றிலும் மலை சூழ்ந்திருப்பதால் இங்கு எப்பொழுதும் ஒரு மெல்லிய குளிர் இருந்து கொண்டேயிருக்கிறது.  அவ்வப்போது  சிறு சிறு தூறலாய் மழையும் நம்மை வரவேற்கத் தவறுவதில்லை.


                        கிட்டத்தட்ட நம் ஊட்டியின் தட்பவெப்ப நிலையைக் கொண்டிருக்கும் கெந்திங்கில் வழி நெடுக காடுகள் சூழ்ந்துள்ளதால் காற்றில் ஈரப்பதம் அதிகமாக காணப்படுகிறது. சுருக்கமாக சொல்வதென்றால் தேன்நிலவிற்கு ஏற்ற ஸ்தலம்  என்றே கூறலாம்..!

                          அங்கு நான் தங்கியிருந்த ஹோட்டலின் பெயர் "First World". ஆனால் என்னைப் பொறுத்தவரை அதற்கு "பூலோக சொர்க்கபுரி" என்றே பெயரிட்டிருக்க வேண்டும். மொத்தம் 6718 அறைகளை கொண்ட இந்த தங்கும்  விடுதி உலகிலேயே மிக அதிக அறைகளைக் கொண்ட விடுதியாகும். ( 2008 க்கு முன்பு வரை இதுதான் முதலிடத்தில் இருந்ததாம்). Why  சொர்க்கபுரி  என்று நீங்கள் கேட்பது புரிகிறது. 


                               500,000 சதுர அடி பரப்பளவுள்ள இந்த விடுதியின் உள்புறத்தில் டவர் 1, டவர் 2 என இரு கட்டிடங்கள் உள்ளன. டவர் 1 இல் தங்கும்  அறைகளும், டவர் 2 இல் பிரம்மாண்டமான First World  Plaza  வும் உள்ளது. இதில் ஒரே நேரத்தில் இருபத்தி-ஐந்து  வாடிக்கையாளர்களை வரவேற்க வசதியான லாபியும், பணியாளர்களும்  உள்ளனர். இருநூறுக்கும் மேற்பட்ட கடைகளும், உணவகங்களும், ஒரு திரையரங்கமும் அமைந்திருப்பது சிறப்பு.  எட்டாவது மாடி முழுவதும் உணவுக்கென இருக்கிறது. ஆசிய உணவுகள் ஒரு பக்கமும், மேற்கத்திய உணவுகள் ஒரு பக்கமும் இருக்கிறது.  மேலும் ஒரு கேசினோ எனப்படும் ஒரு பிரம்மாண்டமான சூதாட்ட மையமும் உள்ளது.  ( இதன் உள்ளே செல்வதற்கு மலேசியா சிங்கப்பூர் வாசிகளை தவிர அனைவருக்கும் இலவசம்.. ) 


                               இவை மட்டுமா,  குழந்தைகளும் பெரியவர்களும் விளையாடி மகிழ ஒரு உள் விளையாட்டரங்கமும், வெளிப்புறம் தீம் பார்க் எனப்படும் விளையாட்டரங்கமும் இருக்கிறது. நான் மற்ற நாடுகளில் பார்க்காத ஒரு விளையாட்டு இங்கே இருந்தது. அது கெந்திங் ஸ்கை வென்ச்சர் (Genting  Sky Venture ) எனும் அந்த விளையாட்டு புதுமையாக இருந்தது. ஸ்கை பால் (Sky Fall ) சிமுலேட்டர் எனப்படும் இந்த விளையாட்டில் ஒரு சிறிய உருளை வடிவிலான அறையில் நம்மை ஒரு வலையின்  மேல் படுக்க வைக்கிறார்கள்.. பின் ஒரு ராட்சத விசிறி கொண்டு காற்றை உள்ளே செலுத்தி நாம் வானில் பறப்பது போன்ற உணர்வும்,  முன் இருக்கும் திரையில் நாம் கீழே இறங்குவது போன்ற ஒரு மாயையும் உருவாக்குகிறார்கள்.  (நமக்கும் தரைக்கும்  நான்கே அடிதான் உள்ளது என்பது நன்றாக தெரிந்தாலும் நம் மூளை அதை நம்ப மறுத்து நம் அடி வயிற்றில் ஒரு கிலி உண்டு பண்ணுவது என்னவோ உண்மை..!)



                              ஒரு இரவையும் ஒரு பகலையும் கெந்திங்கில் களித்த பின்னர் அந்த மூடு பனி உலகத்தை விட்டு மெல்ல கீழிறங்கி மீண்டும் கோலாலம்பூர் வந்தடைந்தேன். கோலாலம்பூரின் சிட்டி டூர் எனப்படும் நகர் உலா செல்ல கொஞ்சம் பொருத்திருப்போமா ?



7 comments:

  1. singaporean also free entry to casino

    ReplyDelete
  2. மலேசியாவிற்கு ‘புனிதப்பயணம்’
    சென்று வந்த நண்பரே...
    வாழ்க...வாழ்க.

    ReplyDelete
  3. ஸ்கைபால் சிமுலேட்டர் வித்தியாசமான விளையாட்டாகத்தான் இருக்கிறது. பார்க்கவே சொர்க்கபுரியாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
  4. ஸ்கை பால் (Sky Fall ) சிமுலேட்டர் எனப்படும் இந்த விளையாட்டும் பயண அனுபவங்களும் வித்தியாசமாக அருமையாக மனம் கவர்கிறது ..பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  5. அண்ணே, 'புனித பயணம்' சென்றது மலேசியாவிற்கு அல்ல..! ;-)

    ReplyDelete
  6. நன்றி ராஜராஜேஸ்வரி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  7. எழில் மேடம், எல்லா வயதினருக்கும் ஏற்ற பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்திருந்தது,, கருத்துக்கு நன்றி..

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...