பயணத்தின் சுவடுகள்...
தேசம்: 1; ஸ்தலம்: 4; தொலைவு: 5.
மை டியர் மலேசியா
(புத்ர ஜெயா )
பயணத்தின் சுவடுகள்...
தேசம்: 1; ஸ்தலம்: 5; தொலைவு: 5.
"அரசருக்கு வெற்றி" என்று பொருள் படும் இந்த ஊர், இட நெருக்கடியின் காரணமாக அரசாங்க அலுவலகங்கள் மற்றும் நீதிமன்றங்கள் ஆகியவை கோலாலம்பூரிலிருந்து இங்கே இடம்பெயர்ந்தது.. ஆயினும் கோலாலம்பூர் தான் இன்றும் மலேசியாவின் தலைநகராய் இருக்கிறது.. கெந்திங்கிற்கும் தலைநகருக்கும் இடையே புத்ரா ஆற்றங்கரையின் மேல் அமைந்த இந்த ஊருக்கு இன்னொரு பெருமையும் உண்டு.. இங்குள்ள கட்டிடங்கள் யாவும் (அரசாங்க மற்றும் மக்களின் வீடுகள்) முன்பே திட்டமிடப்பட்டு கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிந்த பின்னரே இங்கு மக்கள் குடியேறியதாக கூறுவர்.
தேசம்: 1; ஸ்தலம்: 5; தொலைவு: 5.
மை டியர் மலேசியா
(கோலாலம்பூர் )
மலேசியாவின் தலைநகராம் கோலாலம்பூரில் நுழைந்தவுடன் நம்மை வரவேற்பது உலகின் இரண்டாவது உயரமான கட்டமைப்பு கொண்ட பெட்ரோனாஸ் டவர் அல்லது இரட்டைக் கோபுரங்கள். (1998 இலிருந்து 2004 வரை உலகின் உயரமான கட்டிடம் இதுதானாம்!) எண்பத்தி எட்டு மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடம் மலேசியாவின் மிக முக்கிய அடையாளங்களுள் ஒன்று.
இந்த இரட்டைக் கோபுரங்களையும் இணைக்கும் ஒரு பாலம் இதன் 48 வது மாடியில் உள்ளது. இந்த கட்டிடம் மற்றும் பாலம் இஸ்லாம் மதத்தின் குறியீடு எனவும் கூறுவர்.
அது போலவே புகழ்பெற்ற மற்றொரு கட்டிடம் KL டவர். தொலைக்காட்சி ஒளிபரப்புக்கென கட்டப்பட்ட இந்த இடத்திற்கு செல்லும் போது கட்டிடத்தின் தாழ்நிலையில் (Basement) உள்ள 6D தொழில்நுட்ப திரையரங்கிற்கு தவறாமல் செல்லவும், குழந்தைகளும் பெரியவர்களும் மனம்விட்டு ரசிக்கக் கூடிய ஒரு த்ரில் அனுபவம் அது.
சுதந்திர சதுக்கம் (Independance Square ) எனும் இந்த பரந்த வெளியில் தான் மக்கள் சுதந்திர தின விழா மற்றும் எல்லா அரசு விழாக்களுக்கும் கூடுவர். இங்கிருந்து நாம் சாலையை காணும் போது கிடைக்கும் ரம்யமான காட்சி. ஓங்கி வளர்ந்த கட்டிடங்கள், சாலையின் இரு புறமும் மரங்கள் (அசோகர் இங்க வந்தாரானெல்லாம் கேட்கப் படாது) கண்ணுக்கு குளிர்ச்சி தரும்.
இஸ்தானா நெகாரா ( மலாய் மொழியில் அரசாங்க மாளிகை) பொது மக்கள் வெளியிலிருந்து பார்க்க மட்டும் அனுமதி. மலேசியாவின் அரசர்கள் தங்கும் மாளிகை இது.
இந்த மாளிகையின் வாசலில் நம் VGP கோல்டன் பீச்சில் நிற்பது போல ஒரு மனிதன் அசையாமல் நின்று கொண்டிருப்பார்.. புகைப்படங்கள் எடுக்க சிறந்த இடமிது. வேறு எதுவும் பார்க்க (?!!) நம்மை இங்கு அனுமதிக்காத காரணத்தால் இங்கிருந்து கெலுவார் ( மலாய் மொழியில் EXIT )
இங்கு மலேசியாவில் இன்னும் சில இடங்கள் (லங்காவி மற்றும் பெனாங் ) சுற்றுலா தளங்கள். இந்த தபா அங்கே போகதனால இதோட மலேசியா ஓவர்.. அப்பாடான்னு நீங்க சொல்றது கேட்குது.. அப்படி எல்லாம் விட்டுட மாட்டேன்.. அடுத்து வேற ஊர் போலாம் கிளம்புங்க..!
பயணத்தின் சுவடுகள்-4 (மை டியர் மலேசியா)
பயணத்தின் சுவடுகள்-3 (மை டியர் மலேசியா)
பயணத்தின் சுவடுகள்-2(மை டியர் மலேசியா)
பயணத்தின் சுவடுகள்-1(மை டியர் மலேசியா)
பயணத்தின் சுவடுகள்-4 (மை டியர் மலேசியா)
பயணத்தின் சுவடுகள்-3 (மை டியர் மலேசியா)
பயணத்தின் சுவடுகள்-2(மை டியர் மலேசியா)
பயணத்தின் சுவடுகள்-1(மை டியர் மலேசியா)
No comments:
Post a Comment
படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..