சிலர் நல்லா தூங்கிட்டா எதுவுமே தெரியாதுன்னு சொல்ல கேட்டுருப்பீங்க..
சிலருக்கு அவ்வப்போது தூக்கத்தில் கனவுகள் வருவதுண்டு.. எனக்கு கோர்வையான ஒரு
கதைகளும், கவிதைகளும் வருவதுண்டு. சில கதைகள் நேரமின்மையால் தொலைக்காட்சி தொடர்
போல அடுத்த நாள் கனவில் தொடர்ந்ததும் உண்டு.. அதுபோல தோன்றிய ஒரு கற்பனை தான் இந்த ஷேக்ஸ்பியர் தமிழனா இருந்தா? எனும்
சிந்தனை. (நகைச்சுவைக்காக மட்டுமே,
இலக்கணம் எல்லாம் பாக்காதீங்க..! )
(ஆப்பாயில் - Tragedy)
ஷேக்ஸ்பியர் எழுதின “ Hamlet “ தெரியும். அதே அவரு தமிழ்ல எழுதியிருந்தா.. “ஆப்பாயில்”
ன்னு பேர் வச்சிருப்பாரு. ஒரு ஹாஸ்பிடல்ல ஒரு கோழிய ஸ்ட்ரெச்சர் ல போட்டு தள்ளிட்டு
போறாங்க.. (அதுக்கு பிரசவமாம்..!) உடன் கணவன் சேவலும், அப்பா சேவல் மற்றும் அம்மா
கோழி கூட ஓடுறாங்க.. வெள்ளை வெளேர்ன்னு கோட் போட்டுக்கிட்டு ஸ்டெதஸ்கோப்போட ஒரு
முயல் முன்னாடி ஓடிகிட்டு இருக்கு. ரெண்டு மங்கி ( Monkey) நர்சுகள் மற்றவர்களை ஆபரேஷன் தியேட்டர் உள்ள
வர விடாம தடுக்குது. பிரசவ கோழி, முயல் மற்றும் நர்சு மங்கிகள் உள்ளே செல்கின்றன..
கணவன் சேவல் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த போது பக்கத்து
வீட்டு புறா அந்த சேவலின் மகன் கோழிக்குஞ்சை கூட்டி வருகிறது. கோழிக்குஞ்சு
படபடப்புடன் “அப்பா அம்மா எங்கப்பா?” என்றது. “உனக்கு ஒரு தம்பி பாப்பா பொறக்கப்
போகுதுடா கண்ணா..!” என்று கூறவும் அமைதியானது. தாத்தா சேவல் அந்த கோழிக்குஞ்சை
மடியில் இருத்திக்கொள்ள ஆவலுடன் பிரசவ அறையையே எல்லோருடைய கண்களும் நோக்கிக்
கொண்டிருந்தன.. அதே நேரம் இன்னும் ஒரு ஜோடி கண்கள் அந்த அறையை நோக்கி
கொண்டிருந்ததை யாரும் கவனிக்கவில்லை..
சிறிது நேரத்தில் ஒரு மங்கி நர்ஸ் வெளிய வர கணவன் சேவல் அதனுடன் சென்று “சிஸ்டர்”
எனவும், “ட்வின்ஸ் போல இருக்கு.. சிசேரியன் தான்.. இந்த மருந்தெல்லாம் வாங்கிட்டு
வாங்க.” என்று ஒரு சீட்டை சேவலிடம் கொடுத்தது. அவசரமாக ஓடிச்சென்று அந்த
மருந்துகளை வாங்கி வந்து கொடுத்தது. அதை வாங்கிக் கொண்டு உள்ளே சென்ற மங்கி கதவை
சாத்திவிட்டு முயல் டாக்டரிடம் “டாக்டர் வெளிய எல்லாரும் கோழிக்குஞ்ச எதிர்பார்த்து
காத்திருக்காங்க.. நாம பண்றது என்னமோ தப்பா தெரியுது” என்றது. முயல் மெதுவாக
மங்கியிடம் நடந்து வந்து “ நாலு பேருக்கு நல்லது நடக்கணும்னா எதுவுமே தப்பில்ல”
என்றபடி தன் கோட் பாக்கெட்டிலிருந்து செல்பேசியை எடுத்து நம்பரை ஒற்றியது..
இந்த போன்காலுக்காக காத்திருந்த,
வெளியே நின்று கொண்டிருந்த “அந்த” இரு கண்களுக்கு சொந்தக்காரனான “நல்லவன் நம்பியார்” எனும்
அந்த மனிதன், போனை உயிர்பித்து பேசத் தொடங்கினான். “சொல்லுங்க டாக்டர்” “மிஸ்டர்
நம்பியார், இந்த முறை இரட்டைக் கரு இருக்கு அதனால நீங்க சொன்ன பணத்த விட ஒரு பங்கு
அதிகம் கொடுக்கணும்.” “சரி டாக்டர்” “வழக்கம் போல் ஆஸ்பிட்டல் பின்னாடி வந்து
முட்டைய வாங்கிக்கோங்க.. நான் அவங்ககிட்ட கரு இறந்தே பிறந்ததா சொல்லிடறேன்” என்று
கூறி போனை வைத்தது.
பின்பக்கம் சென்ற நம்பியார் முயலிடம் இருந்து அந்த இரட்டைக்கரு முட்டையை
பெற்றுக் கொண்டு தன் ஹோட்டலுக்கு சைக்கிளில் விரைந்தான். தன் சைக்கிளை
நிறுத்திவிட்டு கிச்சனுக்கு சென்ற அவன்.. தான் கொண்டு வந்திருந்த ,முட்டையை
உடைத்து தோசைக்கல்லில் ஊற்றிய போது அந்த மஞ்சள் நிறத்தில் அப்போது விரிந்த
முல்லைபோல் இரண்டு கருக்களும் கல்லின மேல் கிடத்தப்பட்டன.. தீயின் சூட்டில் உடலின்
எல்லா பாகங்களும் பொசுங்க அவை இரண்டும் சிந்திய கண்ணீர் அந்த நம்பியாரின்
கண்களுக்கு தெரியவே இல்லை..!
அப்போ பிரசவத்தில் குஞ்சு பொறக்கலையா...முட்டை தான் வந்துச்சா...?
ReplyDeleteகற்பனைக்கு அளவே இல்லாமல் போச்சு...
கதைன்னாலும் அந்த லாஜிக் எல்லாம் மீற முடியுமா? :-)
ReplyDeleteஇந்தக் கதையை அப்படியே டெவலப் பண்ணி ஹாலிவுட்டுக்கு வித்துருங்க...
ReplyDeleteஸ்கூல் பையன் - அப்படீங்கறீங்க?? ;-)
ReplyDelete//சில கதைகள் நேரமின்மையால் தொலைக்காட்சி தொடர் போல அடுத்த நாள் கனவில் தொடர்ந்ததும் உண்டு//
ReplyDeleteஎனக்கும் இப்படித்தான்... வெளிய சொன்னா லூசா நீ'னு கேப்பாங்கன்னு நெனச்சுட்டு சொல்றதில்ல...:)
காமடியா ஆரம்பித்து கலங்க வெச்சுட்டீங்க. கோழி குஞ்சு என்றாலும் கஷ்டமாத்தான் இருண்டது...:(
கெனவுன்னாலும் கரிக்ட்டான லாஜிக்கோட கீது!
ReplyDeleteகோழி முட்டைதானே பிறசவித்திருக்கிறது !
நல்லாத்தான் கனவு காண்ரீங்க கண்டினியூ....
ReplyDeleteஷேக்ஸ்பியர் தமிழில் கதை எழுதி இருந்தால் "செகப்பியர்" என்று பெயர் மாற்றி வைத்திருப்பார்.
ReplyDeleteஎப்பிடீண்ணே ,இப்பிடி...............எல்லாம்......அந்த கடேசி போட்டோ.........
ReplyDelete