Wednesday, June 18, 2014

ஆவி டாக்கீஸ் - சலீம் (Music Review)


                         "நான்" படத்தின் ஆரவாரமில்லாத வெற்றிக்கு பின் விஜய் ஆண்டனி ஹீரோவாக தயாரித்து நடிக்கும் படம் "சலீம்". அவரே இசையமைத்திருக்கும்  பாடல்கள்  இயக்குனர்கள் கேயார், பாரதிராஜா பாலா மற்றும் பலர் முன்னிலையில் சத்யம் தியேட்டரில் வெளியிடப்பட்டது.


1. "Prayer" - புனித குர்-ஆனை இசைச் சேர்ப்புகளோடு  யூசுப் பாடியிருக்கிறார். குர்-ஆன், பகவத் கீதை போன்றவற்றை கமர்ஷியல் சினிமாக்களில் பயன்படுத்துவது மத வேறுபாடுகளற்ற சமூகத்தை உருவாக்கும் என்றாலும் இவற்றை எந்த ஒரு மதத்தவரும் மனம் கோணாதவாறு படமாக்க வேண்டும் என்று பொறுப்புணர்வும் இயக்குனருக்கு அவசியம். பாரதிராஜாவின் சிஷ்யர் நிர்மல் அதில் ஜெயித்தாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

2. "உன்னைக் கண்ட நாள் முதல்" - சுப்ரியா, ஹேமச்சந்திரா மற்றும் ஸ்ரீநிவாசன் பாடியிருக்கும் பாடல். கவிஞர் அண்ணாமலையின் காதல் வரிகளுக்கு டிரம்ஸ் இசை ஒரு பார்ட்டி ஸாங் போன்ற தோற்றத்தை கொடுத்தாலும் "மக்காயலா"வில் இருந்த துள்ளல் மிஸ்ஸிங்..

3. "அவள நம்பித்தான்" - நினைத்தாலே இனிக்கும் படத்தில் வரும் 'சிவசம்போ' பாடலின் ரீ-மிக்ஸ். ஒரு சேஞ்சுக்கு இதில் கானா பாலா பாடல் மட்டும் எழுதிக் கொடுக்க அதை மகாலிங்கம் கிளாசிக் இசையின் வனப்பு சிறிதும் கெட்டு விடாமல் பாடியிருக்கிறார்.

4. 'என் உச்சி மண்டையில' டைப் குத்துப் பாட்டு இந்த "மஸ்காரா போட்டு".  கிளைமாக்ஸுக்கு முன்  வரப் போகும் பாடலாக இருக்கலாம். சுப்ரியா, விஜய் ஆண்டனி மற்றும் ஷர்மிளா ஹை-பிட்ச்சில் கலக்கியிருக்கும் பாடல்.

5. 'நான்' படத்தின் அதே தீம் மியுசிக்குடன் துவண்டு போன நாயகனை நிமிர்ந்து நிற்கச் செய்யும் பாடல் "உலகம் உன்னை". பிரபு பண்டாலா உணர்ச்சிப் பெருக்குடன் பாடுகையில் அரங்கில் உறங்கிப் போனவர்களும் எழுந்து அமர்வது உறுதி..

                         
                      ஓரிரு பாடல்களை தவிர மற்றவை சுமார் ரகம். திரையில் பார்க்கும்போது பிடிக்கலாம். மொத்தத்தில் மும்மொழிகளில் வெளியாகும் இந்த சலீம் இசை தமிழ் ரசிகர்களுக்கு ஹலீம் விருந்தாக அமையலாம்.
                     



18 comments:

  1. Boss, ivvalavu speed koodaathu...... ippothaan enga oorila music CD varumnu sollikittu irukkaanga, athukulla........ ennavo ponga.

    Sari, padam eppadi irukkum, athaiyum sollidunga.

    ReplyDelete
    Replies
    1. பாஸ் கிண்டல் பண்றீங்களா? CD வந்து ஒரு மாசம் கிட்ட ஆகப் போகுது..

      Delete
  2. "உலகம் உன்னை" ரசிக்க வேண்டும் ஆவி...

    ReplyDelete
    Replies
    1. உலகம் என்னை ரசிக்க வேண்டுமா?? ஹஹஹா

      Delete
  3. சென்ற வாரம் தான் நான் படம் பார்த்தேன் நல்ல மேக்கிங். மக்காயலா பாட்டு எனக்கு பிடிச்ச சாங். சலீம் பாட்டு இனிமே தான் கேட்கணும்

    ReplyDelete
    Replies
    1. சென்ற வாரம் நீங்க படமே பார்த்துட்டீங்களா? அவ்வ்வ்வ்.. இன்னும் போஸ்ட் ப்ரொடக்க்ஷன் வேலை தான் போயிட்டிருக்குன்னு சொன்னாங்களே.. ;-)

      Delete
    2. நான்....பார்த்த படத்தை நீ பார்க்கவில்லை (ஆவி அதிர்ச்சி ! )

      Delete
  4. நண்பா நான் பார்த்த படம் நான்

    ReplyDelete
    Replies
    1. ஒ.. நீங்க அந்த நானை சொன்னீங்களா.. ஹஹஹா ;-)

      Delete
    2. எனக்கு அப்பவே இஷ்க்..இஷ்க் என்று கேட்டது

      Delete
  5. ம்ம்ம்ம்ம் கேட்டுப் பார்க்கிறேன் ஆவி.....

    ReplyDelete
  6. //சலீம் இசை தமிழ் ரசிகர்களுக்கு ஹலீம் விருந்தாக அமையலாம்...// டச்சிங்

    ReplyDelete
  7. ம்ம்ம்ம்ம்ம் கேட்கணும்........சொல்லிட்டீங்கல்ல......!!!!!

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...