Thursday, June 19, 2014

ஆவி டாக்கீஸ் - வடகறி


இன்ட்ரோ  
                          ஜெய்-ராஜா ராணியின் வெற்றியை பயன்படுத்தி இன்னும் உயரங்களுக்கு போயிருக்கலாம்.. 'நவீன சரஸ்வதி சபதம்' எனும் மொக்கை படத்தில் கமிட் ஆனது, 'திருமணம் எனும் நிக்காஹ்' நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது, என பல காரணங்களால்  திரையுலகின் அடுத்த "இளையதளபதி" ஆக முடியாமல் தவிக்கிறார்.. இந்தப் படம் இவருக்கு கைகொடுக்குமா, பார்ப்போம்..!



கதை         
                            காலாவதியான மருந்துகளை அதன் எக்ஸ்பெய்ரி தேதியை மாற்றி புதிய ஸ்டிக்கர் ஒட்டி மீண்டும் விற்பனை செய்யும் ஒரு கும்பலிடம் பல லட்சம் மதிப்புள்ள மருந்துகளை கொடுத்து ஏமாந்த ஒருவனிடம் ஒரு செல்போனுக்கு ஆசைப்பட்டு தவறுதலாக மாட்டிக் கொள்ளும் மெடிக்கல் ரெப் நாயகன். இந்த சிக்கலுக்கு இடையில் தான் ஆசையாய் துரத்தி துரத்தி காதலித்த நாயகி நெருங்கி வருகையில் அவளிடம் பேச முடியாத அவஸ்தையோடு பிரச்னையை எப்படி எதிர்கொள்கிறான் என்பதே கதை.

                                                                                                                                            ஆக்க்ஷன் 
                               தனக்கென்று அமைத்துக் கொண்ட அதே பார்முலாவில் ராஜ நடை போடுகிறார் ஜெய். நாயகியிடம் காதல் சொல்ல வெட்கப்பட்டு அவள் தோழியிடம் கூறுவதும், அண்ணனிடம் சம்பளப் பணத்தை கொடுத்துவிட்டு பேந்த பேந்த விழிப்பதுமாய் நல்ல நடிப்பு. சுவாதி முதல் பாதியில் மட்டும் வருகிறார்.. அப்புறம் கொஞ்சம் இடைவெளி விட்டு கிளைமேக்ஸில் ஜெய்யுடன் இணைகிறார். கலர் கலர் சுடிதாரில் அம்மணி அம்சமாக வலம் வருகிறார். வெங்கட் பிரபு மானேஜர் ரோல். அப்பப்போ காமெடி, அப்பப்போ கரெக்டர் ன்னு அசத்துறார்.

                                 RJ பாலாஜி ஜெய்யின் நண்பனாக படம் நெடுக வருகிறார். டைமிங் காமெடியில் ரைமிங்காக பேசி கைதட்டல் வாங்குகிறார். குறிப்பாக தான் மாட்டிக் கொண்ட கடத்தல் கும்பலிடம் பேசிப் பேசி நட்பாய் மாறும் காட்சி கலகல. இனி இவரை பல படங்களில் பார்க்கலாம்..! அண்ணனாக அருள்தாஸ் கொஞ்ச நேரம் வந்தாலும் சிரிக்க வைக்கிறார்.. கஸ்தூரி, மிஷா கோஷல் நிறைவான நடிப்பு. பிரேம்ஜி நட்புக்காக..


                                                                                             ஆரவாரமான அறிமுகம்        
                                    ப்ரொடக்க்ஷன் பேனர், நாயகன், நாயகி, இயக்குனர் பெயர் வரும்போதெல்லாம் அமைதியாக இருந்த நம்ம ரசிகர்கள் ஒரு அறிமுக நடிகையை (தமிழில்) இவ்வளவு கரகோஷத்தோடு வரவேற்றது நிச்சயம் தமிழனுக்கு பெருமை (?!!!) சேர்க்கும் விஷயம் தான். சன்னி லியோனுக்கு ஒரே ஒரு ஐட்டம் ஸாங் என்ற போதும் வடகறியின் மேல் வைக்கப்பட்ட செர்ரி பழம் போல் இனிக்கிறார்.  அந்தப் பாடல் முடியும் வரை விசில் சப்தம் அரங்கைக் கிழித்தது. தவிர Porn ஸ்டாருக்கும் புடவை கட்டி ஆட விடும் ரசனை தமிழனுக்கே அன்றி வேற யாருக்கு இருக்கும்..



இசை-இயக்கம்-தயாரிப்பு
                                 யுவன் ஷங்கர் ராஜா முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டு பின் பின்வாங்கியதால் விவேக்-மெர்வின் இசைப் பொறுப்பை எடுத்துக் கொண்டு சிறப்பாய் செய்திருக்கின்றனர்..  வெங்கட் பிரபுவின் அசிஸ்டென்ட் சரவண ராஜன் முதல் முயற்சியில் வெற்றி கண்டிருக்கிறார்.. பிரவீன்-ஸ்ரீகாந்த்தின் எடிட்டிங் படத்திற்கு பலம். ஆயினும் யுவனின் "உயிரின் மேலொரு" பாடல் படத்தில் மிஸ்ஸானது நிறைய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்திருக்கும். தயாநிதி அழகிரி தயாரிப்பு போட்ட முதலை வசூலித்துக் கொடுக்கும்.

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                  "நெஞ்சுக்குள்ள நீ" பாடல் ரசிக்கும்படி இருக்கிறது.காதல் சொல்ல வந்து வேலைக்கு செல்லும் பெண்களின் நிலை சொல்லி சுவாதியை பின்தொடர்ந்ததற்கு சாரி சொல்லும் இடம் மற்றும் RJ பாலாஜியின் காமெடி சீன்ஸ்.

           Aavee's Comments - உட்டாலக்கடி கிரிகிரி இது தரமான வடகறி!




17 comments:

  1. படம் பார்த்துடறேன் நன்றி நண்பா பகிர்வுக்கு

    ReplyDelete
    Replies
    1. வாவ்.. உடனடி கமென்ட்.. கலக்கறீங்க போங்க..

      Delete
  2. வடகறி விமர்சனம் செம சுவை! ரொம்ப நாளாய் படம் எதுவும் பார்க்கலை! பார்த்துடலாமா?!

    ReplyDelete
    Replies
    1. anna nejama' PATAM 'papperkala' thalr sureh;

      Delete
    2. ஒரு முறை கண்டிப்பா பார்க்கலாம் சுரேஷ்.!

      Delete
    3. //anna nejama' PATAM 'papperkala' thalr suresh//

      ஹஹஹா.. நல்ல கேள்வி..!

      Delete
  3. வணக்கம்
    ஆவியப்பா.

    விமர்சனத்தை பார்க்கும் போது படம் நல்லா இருக்கும் போல ....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. என்னா பாஸ்டு? கலக்குங்க.... எனக்கு பார்க்க நேரமில்லை.... :)

    ReplyDelete
    Replies
    1. அவ்ளோ பிஸியா? திரையுலகம் உங்களை மிஸ் பண்ணது பாஸ்.. வாங்க சீக்கிரம்..!

      Delete
  5. சன்னி லியோன் காட்சி ஆவியை டச் செய்யலையா!

    ReplyDelete
    Replies
    1. அதான் தனியா ஒரு பத்தி எழுதிட்டனே.. ஹஹஹா.. இன்னுமா "ஜொள்ளனும்" சாரி சொல்லனும்னு விட்டுட்டேன்..

      Delete
  6. வடகறி போலவே சுவையான படம்னு சொல்லுங்க! எஞ்சாய்.....

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி சார்..

      Delete
  7. அன்று காலையில் பள்ளிக்கூடத்திற்கு

    கிளம்பும் போதே அவனுக்கு ரொம்ம

    சந்தோசமாயிருந்தது. அப்பாவும்,

    அம்மாவும் பேசிட்டு இருந்தாங்க


    "சாயந்தரம் வரும்போது முன்மேயே

    சொல்லிட்டு வாங்கிட்டு வந்திருங்க"

    "வடகறிதானே"

    "டேய் இன்னிக்கு அரை நாள் தானே"
    "ஆமாம்ப்பா"

    "அங்க இங்க சுத்தாம நேரமே

    வீட்டுக்கு வந்திடுபா " இது அம்மா

    அன்று சனி கிழமைபள்ளிக்கூடம்

    விட்டதும் நேரே வீட்டுக்கு

    கிளம்பினான்... பாப்கார், ஐஸ்க்ரீம்
    சாப்பிட்டு ஜாலியாக படம்

    பார்க்கலாம்...நினைக்கவே சந்தோசமாக

    இருந்தது.

    முன்னமேயே வந்திருந்த அப்பா...
    க்.....கெய்கால் ம்..முகம்..ம்...க்..

    கழெவிட்டு வாடா..
    சாப்பிடுவோம் எதையே சாப்பிட்டுக்
    கொண்டே பேசினார்.

    "என்னப்பா.."

    "வட கறிப்பா...ட்டேஸ்டா இருக்கு"

    "ங்...ஙே..."

    #சில_நொடிக்_கதை ( )

    டிஸ்கி : இது விளம்பரம் அல்ல...

    படைப்பாளி அனுமதி இன்றி

    விளம்பரத்திற்கு உபயோகப்படுத்த

    கூடாது.

    ReplyDelete
  8. ஆவி தாம்தமா வந்ததுக்கு மன்னிப்பு......ஸோ வட கறி டேஸ்டினு சொல்றீங்க.....ம்ம்ம்ம்ம்

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails