Wednesday, February 27, 2013

கஷ்டப்பட்டு சாவதற்கு ஏற்ற ஒரு நல்ல நாள்!! ( A Good Day to Die Hard)

                                

                                 "கஷ்டப்பட்டு சாவதற்கு ஏற்ற ஒரு நல்ல நாள்!! " - பேரை கேக்கும் போதே அதிருதில்ல.. படமும் அதே அதிரடியா இருக்குங்க.. "டை ஹார்ட்" திரைப்படத்தின் என் போன்ற  டை ஹார்ட் விசிறிகளுக்கு இந்த படம் நிச்சயம் ஒரு விருந்தாக அமைந்தது. என்ன, முதல் இரண்டு பாகங்களில் இருந்த நம்பகத்தன்மை இல்லாதது ஒரு குறை என்றாலும் படத்தின் பிரம்மாண்டம் அதை போக்குகிறது..



                                   ஆக்க்ஷன்  படம் என்று பார்க்க வருபவர்களுக்கு முதல் காட்சியிலிருந்து, கடைசி காட்சி வரை அதிரடி ஆக்க்ஷன் அட்டகாசம். இங்கே அறுபதுக்கு மேல் ஆனாலும் நாம் ரஜினி கமலை கொண்டாடுவது போல் ஹாலிவுட்டில்  புருஸ் வில்லிசை தலையில் வைத்து கொண்டாடுகிறார்கள்.. அர்னால்டு, சில்வர்ஸ்டர் ஸ்டாலோன் போன்றோரது உடல்வாகோ உயரமோ இல்லாவிட்டாலும் தன் நடிப்பினால் எல்லோரையும் நம்ப வைக்கிறார் மனிதர். (ஆனா இருபது அடுக்கு மாடியிலிருந்து கீழே விழுந்த போதும், அசால்டாக மேலே கிடக்கும் குப்பையை தட்டிவிட்டு அடுத்த சண்டைக்கு தயாராவது கொஞ்சம் டூ மச்..)



                                     சரி கதைக்கு வருவோம், பெருசா கதைன்னு ஒன்னும் இல்லே.. நியுயார்க் போலீசான ஜான் மெக்லென் (புருஸ் வில்லிஸ்) தன மகன் ரஷ்யாவில் ஆபத்தில் இருப்பதை அறிந்து காப்பாற்ற மாஸ்கோ  வருகிறார். அவர் மகன் ஒரு சிறைக் கைதியை காப்பாற்றி கூட்டி செல்லும் போது வில்லன் கும்பல் அவரை கொல்ல  வர அவர் மாட்டிக் கொள்ளும் தருணத்தில் ஜானின் அசுர ஸ்டன்ட்களினால் இருவரும் காப்பற்றப் படுகின்றனர். அந்த கைதியிடமிருந்து ஒரு பைலை பெற முயல்கிறார் ஜானின் மகன் ஜேக். கைதியோ தன மகளை காப்பாற்றும்படி சொல்கிறார். அதன்படி காப்பாற்ற செல்லும் ஜேக், ஜான் மற்றும் கைதி மூவரும் வில்லனிடம் மாட்டிக் கொள்கின்றனர். காரணம் அந்த கைதியின் மகளும் வில்லனின் கும்பலில் இருக்கிறார்.. அவர்களிடமிருந்து எப்படி தப்பித்து வந்து உண்மையை கண்டுபிடிக்கிறார்கள் என்பதே கதை..



                                     டால்பி எட்மொஸ் சவுண்ட் தொழில்நுட்பத்தில் ஒவ்வொரு காட்சியிலும் இசை நம் காதைப் பிளக்கிறது. குறிப்பாக முதல் சேஸிங் காட்சியில் ரீ-ரெகார்டிங் அசத்தல்.. நகைச்சுவை, ஆக்க்ஷன் , செண்டிமெண்ட் என எல்லா மசாலாவும் நிறைந்த இந்தப் படம் ஒரு நல்ல பொழுதுபோக்கு படம் என்பதில் ஐயமில்லை.

50 / 100



5 comments:

 1. சுருக்.. நறுக்.. விமர்சனம்...

  ReplyDelete
 2. ஆக்ஷன் படமா? எனக்கு அவுட் ஆஃப் சிலபஸ்! அப்புறம் சந்தி்க்கறேன் ஆவி! ஹேவ் எ நைஸ் டே! ஸீயு!

  ReplyDelete
 3. சீக்கிரம் பார்த்துடலாம்

  ReplyDelete

 4. "கஷ்டப்பட்டாலும் வாழ்வதற்கு ஏற்ற ஒரு நல்ல நாளை தேடிக்கொண்டிருக்கிறார்கள் பலர்..

  ”பயணம்” தொடரட்டும்..

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails