இரு இதழ் விரித்து,
இதயத்தை உணர்த்து,
மௌனம் வேண்டாம் பெண்ணே!
கண்களில் காதல்,
உதட்டினில் பொய்கள்,
உண்மையை உரைத்திடு கண்ணே!
நிஜம் நீ தொலைவில்,
நிழலாய் நினைவுகள்,
தினம் தினம் வாட்டுது அன்பே!
கூச்சங்கள் விடுத்து,
தலைக்கனம் தவிர்த்து,
காதலை சொல்லிடு நெஞ்சே!!
இன்னும் சொல்லலையா...?
ReplyDeleteஎந்த பெண் தன்னை சொல்லியிருக்கிறாள்..!
ReplyDeleteவெளிபடுத்தாதது
தலைக்கனத்தினால் அல்ல..அது
கவசமிட்ட கலாச்சாரம்!
நன்று..வாழ்த்துக்கள்!
தலைக்கனம் இருக்காதே
ReplyDeleteகாதலில் விழுந்துட்டீங்களோ?! சொல்லிட்டீங்களா?!
ReplyDeleteதனபாலன்- சொல்லாம இருக்கிற வரைக்கும் தான் சுகம்.. சொல்லிட்டா அது காலி ஆயிடுமே.
ReplyDeleteரமேஷ், இப்போ எங்கே கலாசாரம் எல்லாம்..
ReplyDeleteகார்த்திக், மற்றவர் சொல்லட்டும்னு காத்திருத்தலே ஒரு விதத்துல தலைக்கனம் தானே
ReplyDeleteராஜி- ஆமாங்க, விழுந்து பெருங்காயங்கள் வாங்கிட்டேன் ;-)
ReplyDeleteஅழகிய கவிதை
ReplyDelete