Saturday, February 9, 2013

பயணத்தின் சுவடுகள்-8 (Tulip Festival - ட்யுலிப் பெஸ்டிவல் )


பயணத்தின் சுவடுகள்...
தேசம்: 2; ஸ்தலம்: 7;  தொலைவு: 8.

ட்யுலிப்  பெஸ்டிவல்  (அமெரிக்கா)
( ஹாலண்ட் )

                      அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்திலுள்ள ஹாலண்ட் எனும் இடத்தில் ஆண்டு தோறும் ட்யுலிப்  கண்காட்சி நடப்பது வழக்கம். கண்காட்சி என்று சொல்வதை விட திருவிழா என்று சொல்வதே சிறப்பாக இருக்கும். சிகாகோவிலிருந்து சுமார் நான்கு மணி நேர தொலைவில் அமைந்துள்ள இந்த ஊரின் எல்லையை அடைந்தவுடனே வண்ண வண்ண ட்யுலிப்  மலர்களின் கண்கவரும் அணிவகுப்பு நம்மை  வரவேற்கிறது..


                         அந்நியன் திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் நாயகனும் நாயகியும் பூக்களின் மத்தியில் நடனமாடும் காட்சி படமாக்கப்பட்டிருக்கும்.
அதே போல திரும்பிய திசையெல்லாம் நமக்கு காணக் கிடைப்பது பல வண்ணங்களிலும் பூத்துக் குலுங்கும் இந்த ட்யுலிப்  மலர்களே.. பூக்களை ரசிக்காத மனிதர்களின் மனத்தையும் கொள்ளையடிக்கும் ஓர் பிரமாண்டமான அழகுப் பெட்டகம்.                          ஆண்டு தோறும் மே மாதம் முதல் வாரத்திலோ அல்லது இரண்டாவது வாரத்திலோ இந்த கண்காட்சி நடைபெறும். அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த கண்காட்சியை காண வருவர். குழந்தைகளும் ரசித்து மகிழும் இடமாதலால் பெரும்பாலும் குடும்பத்துடன் வந்து கண்டு களிப்பர்.


                          வருடத்தில் ஒரு முறை வரும் இந்த கண்காட்சிக்கு பிரத்தியேகமாக பல ஏக்கர் பரப்பளவில் ட்யுலிப்  மலர்களை வளர்ப்பர். இதற்கென்றே பல தோட்டங்கள் இருக்கின்றன.. இங்கு ட்யுலிப் மலர்களின் கண்காட்சி மட்டுமல்லாது ட்யுலிப் பல்ப் என்று சொல்லப்படும் ட்யுலிப் கன்றுகளையும் (?!!) விற்பனை செய்கின்றனர்.  ஓவ்வொரு வண்ணப் பூக்களுக்கு நடுவிலும் ஒரு எண் பதிக்கப் பட்டிருக்கும். கண்காட்சிக்கு வரும் மக்கள் தமக்கு பிடித்த பூவின் எண்களைக்  குறித்துக் கொண்டு வந்து விற்பனை நிலையத்தில் பணம் கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம். (ஒரு ஜோடி பல்பின் விலை சுமார் பத்து டாலரிலிருந்து ரகத்தைப் பொறுத்து ஐம்பது டாலர் வரை விற்கப்படுகிறது. )


                          இந்த ஆண்டு கண்காட்சியில் பல்புகளை வாங்கி வந்து நட்டு வைத்தால் அடுத்த வருடம் பூக்கள் பூக்கும். இந்த ட்யுலிப்  மலர்கள் பெரின்னியல் (perennial ) வகையைச் சேர்ந்தது. அதாவது ஆண்டு முழுவதும் மலரக் கூடியவை.. ஆனாலும் இவற்றின் ஆயுள் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளே..                          இங்கு ட்யுலிப்  மலர்கள் தான் சிறப்பு என்றாலும், பல வண்ண ரோஜாக்களும், மற்ற மலர்களும் சொற்ப அளவில் காணக் கிடைக்கும். கிட்டத்தட்ட எல்லா வண்ணங்களிலும் பூத்துக் குலுங்கும் இந்த மலர்களைக் காண்பது கண்களுக்கு குளிர்ச்சியும்  அதே சமயம் மனதிற்கு இன்பமும் தருவதாகும். ஊட்டியில் பூக்கள் கண்காட்சிகளைக் கண்டிருந்தாலும் அவற்றை விட பல மடங்கு பரப்பளவில் பூக்களைக் கண்டபோது என் மனம் கொள்ளை போனதென்னவோ உண்மை..!


14 comments:

 1. மச்சி...என்னை எப்போ கூட்டிட்டு போகபோற...?

  ReplyDelete
 2. மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்...

  ReplyDelete
 3. அழகான புகைப்படங்கள் ... நம்ப ஊர்ல இந்தச் செடி வளருமா?

  ReplyDelete
 4. பூவே... இனிய ட்யூலிப் பூவே...ன்னு காதலியப் பாத்து பாடணும் போலத் தோணுது படங்களப் பாத்ததும். காதலிக்கு எங்க போறது ஆவி? ஹூம்...! ட்யூலிப் திருவிழா பத்தி நீங்க எழுதினத ரசிச்சு, சிரத்தையா படங்கள் தேடிப் பகிர்ந்த உங்களைப் பாராட்டிட்டு எஸ்கேப்பாகிக்கறேன்!

  ReplyDelete
 5. ட்யூலிப் திருவிழா அழகான படங்களுக்கும் அருமையான தகவல்களுக்கும் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 6. அன்னியன் படத்துல பார்த்தது. கொள்ளை அழகு பூக்கள். படங்களை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 7. கோவை நேரம் said...

  மச்சி...என்னை எப்போ கூட்டிட்டு போகபோற...?
  >>
  இங்க சுத்தி பார்த்தது போதான்னு வெளிநாட்டுக்கு போக ட்ரை பண்றான்

  ReplyDelete
 8. ஜீவா- போவோமா ஊர்கோலம்??

  ReplyDelete
 9. எழில் மேடம் நன்றி.. நம்ம ஊரளையும் வளரும்.. ஆனா ஊட்டி போன்ற ஈரப்பதம் அதிகம் உள்ள பிரதேசங்களில் வளரும்..

  ReplyDelete
 10. பாலா சார்.. உங்க ட்யூன் அருமையா இருக்கு.. இன்னும் ரெண்டு லைன் பாடி இருந்தீங்கன்ன பேஸ்புக் ல நிறைய காதலிகள் கிடைச்சிருபாங்க.. ஆனா வூட்ட்ல நீங்கதான் பதில் சொல்லணும் :-)

  ReplyDelete
 11. நன்றி ராஜராஜேஸ்வரி மேடம்.. படங்கள் நானே எடுத்தது..

  ReplyDelete
 12. ராஜி- ஆமாங்க மனசு கொள்ளை போயிடும்

  ReplyDelete
 13. ராஜி- ஜீவா.. ஊரு சுற்றும் வாலிபன் ல இருந்து உலகம் சுற்றும் வாலிபனா புரமொட் ஆய்ட்டாரே..

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails