Saturday, February 23, 2013

ஆதி பகவன் - திரை விமர்சனம்


                          பருத்திவீரன், ராம் போன்ற படங்களை எடுத்த அமீரின் திரைப்படம் இது என்பதை நிச்சயம் நம்ப முடியவில்லை.. ஆக்க்ஷன் ஹீரோ இமேஜ் இல்லாமல் நன்றாக நடித்துக் கொண்டிருந்த "ஜெயம்" ரவிக்கும் ஆக்க்ஷனில் கலக்கும் ஆசை வந்துவிட்டது போலும். விளைவு இந்த ஆதி-பகவன்..


                            கணவனின் தவறான தொழில் காரணமாக மகன் ரவி மற்றும் மகளுடன் தாய்லாந்திற்கு வருகிறார் சுதா சந்திரன். வந்த இடத்தில் தவறான நட்புகளால் பெண் வாணிபம், கள்ளக் கடத்தல் பின் கொலைக் குற்றங்கள் என குறுகிய காலத்தில் தாதாவாகிறார் ரவி.  இவரைக் கொல்லஆந்திராவிலும், தாய்லாந்திலும் பலர் முயற்சிக்கின்றனர். இவரது தவறான தொழில் காரணமாக தாயும் தங்கையும் பிரிந்து போய்விட தனிமையில் வாடுகிறார்.


                            அப்போது முன்பு இவரால் காப்பற்றப்பட்ட பெண் (நீது சந்திரா) இவருக்கு ஆதரவாக இருக்கிறார். மேலும் ஒரு கும்பல் ரவியை கொல்ல  முயல்கையில் அவரைக் காப்பாற்றி திருத்த முயற்சிக்கிறார் நீத்து. இதற்கிடையில் நீத்துவின் அப்பா உடல்நிலை மோசமாக இருப்பதால் அவரை பார்க்க மும்பை வரும் ரவிக்கும் நீத்துவுக்கும் அங்கே ஓர் ஆச்சர்யம் காத்திருக்கிறது.


                             ஆக்க்ஷன் படத்தின் இலக்கணமே திரைக்கதையின் வேகம் தான். திரைக்கதை புல் மீல்ஸ் சாப்பிட்ட எருமை மாட்டை போல் மெதுவாக செல்வதால் ரசிகர்கள் பொறுமை இழக்கிறார்கள். யுவனின் இசையில் பாடல்கள் அருமை என்றாலும் இடைவெளி இல்லாமல் வரும் பாடல்களும் எருமை மேல் பாரம் ஏற்றியது போல் ஆகிறது. தாய்லாந்தின் தலைசிறந்த தாதா லோக்கல் பெண் ரவுடியிடம் அடிமேல் அடி வாங்குவது அவர் கேரக்டரை பலவீனப் படுத்துகிறது.


                             முதல் முறையாக இரு வேடங்களில் ரவி.. ஆதியாக வரும்போது நன்றாக இருக்கிறார். பகவானின் உடல்மொழி அவ்வளவாக ஒத்துப் போகவில்லை என்பது என் கருத்து. இரண்டு கேரக்டர்களுக்கும் வித்தியாசம் காட்டுவதற்காக உழைத்திருப்பது தெரிகிறது.நீதுசந்திரா கலக்கல் நடிப்பு. மேக்கப் இல்லாமலும் அழகாக தெரிகிறார்.  கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் ஒளிப்பதிவாளர் அசத்தியிருக்கிறார். அமீரின் டச் இல்லாவிட்டாலும் சில இடங்களில் காட்சியமைப்புகள் சிறப்பாக உள்ளது.மீசைய வளைச்சா மட்டும் சண்டியர் ஆக முடியுமா?

42 / 100

6 comments:

 1. ஆக்ஷன் படங்களில் நடிச்சா மாஸ் ஹீரோ ஆயிடலாம்கற ஆசை ரவியையும் விட்டு வெக்கலியா? சீக்கிரத்துல ‘ஜெயத்தை’ இழந்து வெறும் ரவியா ஆகிடுவார் போலயே...! நான் படி்ச்ச ஒன்றிரண்டு வலைப் பதிவர் விமர்சனங்கள்லயும் அமீர்ங்கற பேரை நம்பிப் போனதா எழுதியிருந்தாங்க. அடுத்த படத்தில் அமீரின் மைண்ட் வாய்ஸ்... ‘இன்னுமாடா இந்த ஊரு நம்மளை நம்பிட்டு இருக்குது?’ அவ்வ்வ்வ்வ்!

  ReplyDelete
 2. அவ்வளவு மோசமில்லை.. கதை நல்லா இருக்கு..ஆனா சொன்ன விதம் பெட்டரா இருந்திருக்கலாம்.. அமீரின் முந்தைய படங்களில் இருந்த பல விஷயங்கள் மிஸ்ஸிங்.. குறிப்பா காமெடியே இல்லாதது பெரிய மைனஸ்..

  ReplyDelete
 3. மொத்தத்தில் ஜெயம் ரவிக்கு வெற்றியா தோல்வியா?

  ReplyDelete
 4. ஸ்கூல் பையன்- ரவி தன் பங்கை சிறப்பா செஞ்சிருக்காப்புல..உழைப்பை கொட்டியிருக்கார். படம் இன்னும் கொஞ்சம் வேகமா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்.

  வெற்றி அடுத்த படத்துல கிடைக்கலாம்..

  ReplyDelete
 5. //திரைக்கதை புல் மீல்ஸ் சாப்பிட்ட எருமை மாட்டை போல் மெதுவாக செல்வதால் ரசிகர்கள் பொறுமை இழக்கிறார்கள். // ஹா ஹா ஹா உங்கள் உவமையை ரசித்தேன்

  ReplyDelete
 6. நல்ல விமர்சனம்...

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails