இராவணன் எனும் மாபெரும் மொக்கையை கொடுத்த, அதே சமயம் மௌன ராகம், இதய கோவில் பார்க்கும் போதெல்லாம் இவரா இந்தப் படத்தை எடுத்தார் என்று எப்போதுமே வியந்து பார்க்கும் ஒரு சைலண்ட் கில்லர் ( அதனால தான் விஸ்வரூபம் பிரச்னைக்கு ரொம்ப அமைதியா இருந்தாரோ? ) டைரக்டர் மணிரத்னம் இயக்கியிருக்கும் படம். ஆஸ்கார் நாயகன் இசையில், ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவில், முன்னாள் நடிகர்கள் கார்த்திக் மற்றும் ராதாவின் வாரிசுகள் நடிக்கும் திரைப்படம் தான் இந்தக் கடல்..
படத்தின் நாயகன் என கௌதமை முன் நிறுத்தியிருந்தாலும், படத்தின் எதார்த்த நாயகன் அரவிந்த்சாமி தான். மின்சாரக் கனவில் பாதரான அவர் இந்தப் படத்திலும் அவ்வாறே தொடர்கிறார். கடவுளுக்கும் சாத்தானுக்கும் (?!!) நடக்கும் போராட்டத்தில் கடவுளின் பக்கம் அரவிந்த் சாமியும் சாத்தனின் பக்கம் ஆக்க்ஷன் கிங் அர்ஜுனும் நிற்கிறார்கள். நன்மையை மட்டுமே போதிக்கும் அரவிந்த் சாமியை கிண்டல் செய்வதோடு பல பாவங்களையும் செய்யும் அர்ஜுனை பாதிரியாராக முடியாமல் செய்கிறார் அரவிந்த்சாமி. இதை மனதில் வைத்து அவருக்கு படம் நெடுக தொல்லை கொடுக்கிறார் அர்ஜுன்.
அரவிந்த்சாமியால் வளர்க்கப்படும் சிறுவன் கௌதமை தன்னைப் போலவே கொடூர குணம் படைத்தவனாய் மாற்ற நினைக்கிறார் அர்ஜுன். ஆனால் அவரை மீண்டும் நல்வழிக்கு திருப்புகிறார் கௌதமின் காதலி துளசி. பொறுமையின் சிகரமாய் இருக்கும் அரவிந்த் சாமி கடைசியில் அர்ஜுனின் டார்ச்சர் தாங்காமல் கொதித்தெழுகிறார். ஆனால் கௌதம் அர்ஜுனை காப்பாற்றுவதோடு, அரவிந்த்சாமியையும் பாவம் செய்யாமல் காப்பாற்றுகிறார்.. அதோடு படம் முடிந்து விடுவதால் நாமும் காப்பாற்றப் படுகிறோம். ( அலெக்ஸ் பாண்டியனுக்கு போட்டியாக வர முடியாவிட்டாலும் கௌதமையும் முதல் படத்திலேயே ஆக்க்ஷன் ஹீரோ ஆக்கும் முயற்சி தெரிகிறது. )
கடலையும், கடல்ப்புறத்தையும் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இவ்வளவு அழகாக படம் பிடித்திருக்கும் ராஜீவ் மேனோன் காமிரா மூலம் கவிதை பாடியிருக்கிறார். இரண்டாவது படத்திற்கு உயிரோட்டமாய் இருப்பது வைரமுத்து மற்றும் மதன் கார்க்கியின் பாடல்கள், மூன்றாவது ரகுமானின் பின்னணி இசை. தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஹிட் கொடுத்து பின் தொலைந்து போயிருந்த அரவிந்த் சாமி, இவர்களே படத்தின் பலம். எது எப்படியோ டிரைலர் பார்த்துவிட்டு ஒரு குறிப்பிட்ட காட்சியை காணச் செல்லும் ரசிகப் பெருமக்களுக்கு ஏமாற்றமே!!
41 / 100
அ சாமிக்காக பார்க்க வேண்டும்...
ReplyDeleteஇரண்டு பாடல்கள் நன்றாக இருக்கிறதே...
மணிரத்னம் படம் என்பதால் கண்டிப்பாகப் பார்ப்பேன்...
ReplyDeleteஎனக்கு ஒவ்வொருத்தரும் தங்கள் தளத்துல எழுதற விமர்சனங்களே படம் பார்த்த ஃபீலிங் கிடைச்சுடுது. ‘இ.தொ.மு.முறையாக’ வரும்போது பாத்துக்கிட்ட்டாப் போச்சு. ஹி... ஹி...
ReplyDeleteபாடல்களும், பின்னணி இசையும் அருமை. இருந்தாலும கதையும் திரைக்கதையும் சொதப்பல்.
ReplyDeleteஸ்கூல் பையன்- ஒரு தடவ பாக்கலாங்க..
ReplyDeleteபாலகணேஷ்- சார்.. விஸ்வரூபம் அடுத்த வாரம் எப்படியும் தியேட்டர்ல வந்திடும்.. கண்டிப்பா பாருங்க.
ReplyDelete