ஆண்டு தோறும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் திரைப்படங்களுக்கான மிக உயரிய விருது என அமெரிக்கர்கள் கருதும் ஆஸ்கர் விருதுகள் இந்த 2013-ம் வருடம் இன்று பிப்ரவரி 25 ஆம் தேதி வழங்கப்பட்டது. சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகையர், சிறந்த இயக்குனர் என 24 பிரிவுகளில் வழங்கப்படும் இந்த விருதுகள் வழங்கப்படுவது இது
85 வது முறையாகும்..இந்த வருடத்தின் ஆஸ்கர் விருது வென்ற சிறந்த திரைப்படம் மற்றும் திரைப்பட கலைஞர்களை காண்போம்.சிறந்த நடிகை- ஜெனிபர் லாரன்ஸ் - ஹாலிவுட்டின் புதிய கனவுக்கன்னி ஜெனிபர் லாரன்ஸ் சில்வர் லைனிங்க்ஸ் படத்தில் நடித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டது.
சிறந்த இயக்குனர் - ஏங் லீ - இந்திய கலாசாரத்தை மையமாக கொண்டு வெளிவந்த லைப் ஆப் பை திரைப்படத்தை இயக்கியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.
லே மிஸ்ரபில் - சென்ற வருடம் என் மனம் கவர்ந்த இந்த திரைப்படத்திற்கு சிறந்த துணை நடிகை விருதை அன்னே ஹேத்தவே பெற்றார். மேலும் சிறந்த ஒப்பனைக்கான விருதையும் இந்த படம் பெற்றது.
இன்னும் ஓரிரு வருடங்களில் உலக நாயகனின் பெயரும் இங்கே வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் வரும் என்பதில் ஐயமில்லை..
///இன்னும் ஓரிரு வருடங்களில் உலக நாயகனின் பெயரும் இங்கே வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் வரும் என்பதில் ஐயமில்லை..///
ReplyDeleteகனவு மெய்ப்படும்.
தகவல் பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteபகிர்வு அருமை...
ReplyDeleteஆஸ்கர் விருது யார் யாருக்குக் கிடைச்சிருக்குங்கற தகவல் இதுவரைக்கும் நான் தெரிஞ்சுக்காதது. இங்க தெரிஞ்சுக்க முடிஞ்சதுல ரொம்ப மகிழ்ச்சி. நன்றி ஆனந்த்!
ReplyDeleteகலகநாயகனுக்கு... ஸாரி, உலக நாயகனுக்கு இந்த விருது கிடைத்தால் அவரின் நீண்டகால ரசிகன் என்ற வகையில் எனக்கு மகிழ்ச்சி, நம் நாட்டுக்குப் பெருமை. உங்கள் ஆசை நிறைவேற பேராசையுடன் நானும் வாழ்த்துகிறேன்.