Tuesday, February 26, 2013

நம்ம தல தோனிக்கு விசில் போடு..


                இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான  முதல் டெஸ்டில் வெற்றி பெற உதவியது பலராலும் பலவாறாக (சச்சினுக்கு பிறகு ) விமர்சிக்கப்பட்ட நம்ம தல தோனி தாங்க.. என்ன அடி.. வந்த மொத பால்ல இருந்து விளாசினான் பாருங்க..! கண்கொள்ளாக் காட்சி..



                ஆரம்பத்துல இவன் ஏன் இப்படி அடிச்சு விளையாடறான்னு சொன்ன கமேன்ட்டேடர்களும் அப்புறம் ரசிக்க ஆரம்பிச்சுடாங்க. பாவம் மைக்கேல் கிளார்க், அவனும் ரொம்ப தைரியத்தோட ஒரே ஒரு ஸ்பின்னரோட  வந்துட்டு, கைப்புள்ள கணக்கா "விட்டுடு, அழுதுடுவேன்" ன்னு சொல்ற மாதிரியே பார்த்துட்டு இருந்தான்.. இன்னொரு பக்கம் ஒத்த கருவேப்பில்லை நாதன் லயன், வந்தப்பல்லாம் சிக்சும் போரும் அடிச்சு அவனையும் உண்டு இல்லேன்னு பண்ணீட்டான் நம்ம தல..



               மொத  நாள் ஆட்டத்துக்கப்புறம்  நம்ம ராமனோட தம்பி,  தோனிய பத்தி தாறுமாறா சொல்லிவைக்க நம்ம ஆளுக்கு வந்துச்சே கோபம், இந்தா வாங்கிக்கடான்னு சொல்லி ஒன்னுக்கு ரெண்டு சதமா  அடிச்சு பட்டைய  கிளப்பீட்டான்.. சென்னை இப்போ சொந்த ஊர் மாதிரி ஆயிட்டதுனால, செம்ம காஷுவலா விளையாடினான்.. நூறு, இருநூறு அடிச்சப்பவும் ஹெல்மட் கூட கழட்டாம அமைதியா பேட்ட தூக்கி காண்பிச்சான்.. மிஸ்டர் கூல்னு நிருபிச்சுட்டான்..


              இதே மேட்சுல 12 விக்கெட் எடுத்த அஷ்வின், நூறு அடிச்ச கோஹ்லி , சிறப்பா ஆடின சச்சின், கிளார்க், வியக்கும் வேகத்துடன் பந்து வீசின பேட்டின்சன், இப்படி எல்லாரையும் ஓரம்கட்டிட்டு இந்த வெற்றிக்கு வித்திட்ட நம்ம தோனிதான் இந்தியாவை கரைசேர்த்த தோணி!!


8 comments:

  1. ஒத்தமீசை ராமசாமி மாதிரி ஒத்தமேட்ச் தோனியா ஆகாம..அடுத்த மேட்ச்களிலும் தூள் கிளப்பி..பிராட்மென்,இந்தியாவுக்கு எதிரா ஒரு சீரிஸ்ல அடிச்ச ரன்னை விட அதிகமா..எடுக்கணும் ! (ரொம்ப ஓவராத்தான் ..போகுதோ)

    ReplyDelete
  2. கேப்டன் கூல் பேட்டால பதில் சொல்லி இருக்கார்! வெற்றி நடை தொடரட்டும்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. ஆனந்து... நீர் என்ன கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்துக்கு உறவா? அவன் இவன்னு எல்லாரையும் எழுதியிருக்கீரே... ‘ஆல் த வே ஃபார் 4’ங்கற தூர்தர்ஷன் கிரிக்கெட் தொடர்ல பேசின ஸ்ரீகாந்த் நட்பு நெருக்கத்துல கவாஸ்கர் அடிச்சான், அசார் அடிச்சான்னுல்லாம் பேசி எல்லார் கிட்டயும் செமயா திட்டு வாங்கினப்புறம் ஸ்டைலை மாத்திட்டு அவர் இவர்னு பேச ஆரம்பிச்சாரு. கறை மட்டுமில்ல... மரியாதையும் நல்லது!

    தன் மேலான விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வெச்சு இந்தியாவை கரை சேர்த்த தோனி(ணி)க்கு உம்மோட சேர்ந்து நானும் விசிலடிக்கிறேன்!

    ReplyDelete
  4. ரமேஷ் உங்க வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்..

    ReplyDelete
  5. கருத்துக்கு நன்றி சுரேஷ்

    ReplyDelete
  6. பாலகணேஷ் சார்.. நான் பொதுவா யாரையும் அப்படி குறிப்பிட்டு அழைக்கவோ எழுதவோ மாட்டேன், நெருக்கமானவர்களை தவிர.. தோனி இப்போ கிட்டத்தட்ட நம்ம ஊர் பையன் ஆயிட்டதாலும், எனக்கும் அவர்க்கும் சம வயது என்பதாலும், ஒரு உணர்ச்சிப் பெருக்கில் எழுதிட்டேன்.. இனி வரும் பதிவுகளில் திருத்திக்கறேன்.. குட்டுக்கு நன்றி..

    ReplyDelete
  7. நன்றி எல்.கே..

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...