Thursday, August 15, 2013

விடியலில் பெற்றிருக்கலாமோ?



                                     சுதந்திரம் என்பது என்ன? சுதந்திரம் என்பது நினைத்த இடத்தில் எச்சில் துப்பவும், புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யவும், பச்சை விளக்கு ஒளிரும் முன்னரே வாகனத்தை முன்னெடுத்து செல்லவும், கதாநாயகிகளுக்கு கோவில் கட்டவும், கண்மூடித் தனமான விஷயங்களில் நம்பிக்கை கொள்வது மட்டும்தான் என்பது பலருடைய எண்ணம்.


\
                                       கருத்து சுதந்திரம் இல்லை என்று புலம்பிய வெள்ளையர் காலத்தில் கூட திரைப்படங்கள் தடை செய்யப்பட்ட சுவடுகளில்லை. ஆனால் இன்றோ ஏகப்பட்ட பொருட்செலவில் பல கலைஞர்களின் உழைப்பும் வீணாக ஒரு சில அதிகார வர்க்கத்தினரின் ஆணவப் போக்கினால் திரைப்படங்கள் வெளியாகாமல் தடை செய்யப்படுவது ஜனநாயக நாட்டில் நமக்கு தலை குனிய வைக்கும் செயல். இதுபோன்ற சூழலில் திருட்டு விசிடி போன்றவற்றை தவிர்த்து கலைஞர்களின் வாழ்வை காப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமையாகிறது.


                                  "நாட்டிற்கு நாம் என்ன செய்தோம்" என்பதையே முழுவதுமாய் மறந்துவிட்டு "நாடு நமக்கு என்ன செய்தது" என்பதை மட்டும் கேட்கிறோம். கட்ட வேண்டிய வரிக்கு, குறைவான வருமானம் மற்றும் போலிக் கணக்குகள் காட்டி வரி ஏய்ப்பு செய்வது நம்மில் பெரும்பாலோனோர் செய்கின்ற ஒன்று. ஒரு சில வெளிநாடுகளில் உள்ளது போல் கடுமையான சட்டங்கள்  இல்லாததும், தன்னுடைய கடமையை மறந்து விடுவதுமே காரணம். 



                                  அதுவும் இன்றைய தலைமுறைக்கு சுதந்திர தினமென்பது சல்யுட் அடித்துவிட்டு ஸ்வீட்  சாப்பிடுவது மட்டுமே கலாச்சாரமாகி விட்டது. என் சிறுவயதில் காந்தி, மருதுபாண்டியர் போன்ற படங்களாவது பார்க்க முடிந்தது. இப்போதெல்லாம் உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாய் வெளிவரும்  புதிய திரைப்படங்களை கண்டுகளிப்பது  வாடிக்கையாகிவிட்டது. சுதந்திரம் பெற்ற கதையை எடுத்துக் கூற இன்றைய தனிகுடித்தனம் விரும்பும் இளைய சமுதாயத்திற்கு பெரியோரின் துணை இல்லாததும் ஒரு காரணம்!


                                   

                           "நள்ளிரவில் ஒரு பெண் நகைகளை அணிந்து கொண்டு பயமில்லாமல் நடமாடும் சூழல் உருவாகும் நாள்தான் நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்ததாய் அர்த்தம்" என்று அன்றே சொன்னார் மகாத்மா. இன்று வரை அது போன்ற ஒரு சுதந்திரம் கிடைத்ததா எனில் இல்லை என்பதே வேதனையான உண்மை. நள்ளிரவில் அல்ல, பட்டப்பகலில் ஒரு பெண் சுதந்திரமாக நடக்க முடியாத அவல நிலை இன்னும் நம் நாட்டில் நிலவுகின்ற சூழ்நிலையில் சுதந்திர தினம் கொண்டாடுவது வெறும் சம்பிரதாயமாகவே படுகிறது.



10 comments:

  1. விரிவான கண்ணோட்டம் !. கல்விக்கு சர்வீஸ் கட்டணம் உடனே போட முடியும். மக்களுக்காக சர்வீஸ் செய்யும் கட்சிக்கு சர்வீஸ் கட்டணம்? கல்வி ஒரு பிஸினஸ் என்று அரசே கருதுகிறது சரி ஏன் இந்த நிலமை?. தகவல் அறியும் சட்டத்தில் கட்சி இயக்கங்களை சேர்க்கனுமா? எதுக்கு ? இன்னும் யோசிக்கிறாங்க! இலவசங்களை கொடுப்பது இலஞ்சம் என்று கேஸ் போடப்பட்டிருக்கு. குடியரசு என்பது மக்களின் ஆட்சி, மக்கள் குடும்பம் நடத்தி ஜனத்தொகையை அதிகமாக்குவதால் குடியரசிற்கு வேலை பளு அதிகமாகிறது அதனால ஒவ்வொரு குடும்பமும் அரசுக்கு சர்வீஸ் டாக்ஸ் கட்டுங்க... சட்டம் வரலாம். ஆனா ஒன்னே ஒன்ன மறுக்க முடியாது மக்கள் அரசை கேள்வி கேட்கும் உரிமை சுதந்திரதால் வந்தது.

    ReplyDelete
    Replies
    1. உங்க ஐடியா சூப்பர்.. அரசாங்கத்தையும் அரசியல்வாதிகளையும் குறை கூறி கொண்டிருந்தால் பிரயோஜனமில்லை. மக்கள் ஒவ்வொருவரும் தங்களிடமிருந்து ஆரம்பித்தால் தான் அது நடக்கும்..

      Delete
  2. நல்ல கேள்வி...!

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. அன்று வெள்ளையர்களால் ஆளப்பட்டது.. இன்றோ கொள்ளையர்களால் ஆளப்படுகிறது...!! காந்தி மீண்டும் பிறந்தால்தான், இவர்வளிடமிருந்து சுதந்திரம் கிடைக்கும் போல....!!!

    ReplyDelete
    Replies
    1. காந்தி வரணும்னு "ஐ யாம் வெயிட்டிங்" பண்ண வேண்டிய அவசியமில்லை. இன்றைய இளைய சமுதாயம் "ஜில்லா""தலைவர்"கள் பின்னால் போகாமல் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க "ஆரம்பம்" செய்தாலே போதும்.

      Delete
  4. சுதந்திரத்தை பற்றி ஆழமான அலசல். இனியாது முழு சுதந்திரம் பெறுவோம்!!

    ReplyDelete
    Replies
    1. ஆமா அக்கா.. இப்போல்லாம் சுதந்திரமா காதல் கூட பண்ண முடியல..(இது ஒரு +2 படிக்கிற பையன் சொன்னது)

      Delete
  5. உண்மை தான் சகோதரா அர்த்தமற்ற சுதந்திர தின வாழ்த்துக்களில்
    பயன் என்ன தான் இருக்கின்றது ?...உண்மையான சுதந்திரம் விரைவில் மலர வாழ்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. புரிதலுக்கு நன்றி சகோ..

      Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...