Monday, July 1, 2013

சென்னையின் "மொட்டை" வெயிலில்.. 3 (பதிவர் சந்திப்பு)

                     
                         அதுவரை தமிழில் பேசிக் கொண்டிருந்த கவிஞர் மஞ்சுபாஷிணி தெலுங்கிலும் பேசி அசத்த.. சபை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது. வேறென்ன சாப்பாடு தான்.. எல்லோரும் பிரியாணியும் மட்டன் சுக்காவும்
கவிஞர் மஞ்சுபாஷினி, கவிஞர் தென்றல் சசிகலா மற்றும் கவிஞர் சேட்டைக்காரன் ஆகியோர் தயிர் சாதமும் சாப்பிட ( தயிரின் குளுமையோ என்னவோ, காலையில் இருந்த அனல் பறக்கும் பேச்சு பெண் கவிஞர்களிடம் பிற்பகுதியில் இல்லை)


                            சீக்கிரம் போக வேண்டும் என்று அடம் பிடித்த ஸ்கூல் பையன் மற்றும் சீனுவுக்காக உணவுக்கு பிறகு பதிவர்கள் எல்லோருமாய் ஓரிரு (?!!)  புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தோம். பின் பாலகணேஷ் சார் சேட்டைக்காரன் ஐயாவை வீட்டில் விட்டுவர, பின் மற்றொரு பதிவர் சாதிகா அவர்களை அவர் இல்லத்தில் சென்று  சந்தித்தோம். நேரமாகிவிட்ட காரணத்தால் தென்றல் காற்றில் பறந்தது.


                            உணவருந்திவிட்டு அப்போதுதான் வந்திருந்ததால் அவர் வீட்டில் அருமையாய் செய்திருந்த கேக்கை உண்ணுவதற்கு இடமில்லாமல் போயிற்று. "கேக்கு போச்சே" என்று வருத்தத்தோடு வெளிவந்த போது கவிஞர் மதுமதியும் அதே கருத்தை சொல்ல கொஞ்சம் ஆறுதல். இப்போது பதிவர்களின் எண்ணிக்கை மொத்தமாக குறைந்து விட்டது. இப்போது கவிஞர் மஞ்சுபாஷினியை அவர் வீட்டில் விட கவிஞர் கவியாழி, கவிஞர் மதுமதி, கவிஞர் மின்னல் மற்றும் நான், கவியாழி ஐயாவின் வண்டியில் சென்றோம்.                              கவிஞர் கவியாழி அவர்கள் வண்டியின் குறுக்கே வருபவர்கள் எல்லோரையும் அன்புடன்(?!!) நலம் விசாரித்த விதம் அருமை. மஞ்சுபாஷினி அவர்களின் இல்லம் சென்று அவர் இல்லத்தார் அனைவரையும் கண்டுவிட்டு திரும்பும்போது அவர் ஆளுக்கொரு லட்டு கொடுத்தனுப்பினார். தலையில் மொட்டையும் கையில் லட்டுமாய் வந்தபோது திருப்பதி சென்று வந்த பீல் கிடைத்தது. பல சந்தோசமான தருணங்களை கொடுத்த சென்னை-பதிவர் சந்திப்பு ஒரு நல்ல அனுபவம் கொடுத்தது.                                 இந்த  சந்திப்பை தன் இல்லத்தில் ஏற்பாடு செய்த புலவர் ஐயா, மதிய உணவளித்த கவிஞர் மஞ்சுபாஷினி,  தென்றல் என்ற பெயரில் சூறாவளியாய் சுழன்று எல்லா வேலைகளையும் செய்து கடைசியில் அறுசுவை தேனீர் கொடுத்த கவிஞர் சசிகலா, வாகனத்தில் எங்களை அலேக்காக கூட்டிச் சென்ற கவியாழி ஐயா, மற்றும் தம் பேச்சால் எல்லோரையும் மகிழ்வித்த கவிஞர் சேட்டைக்காரன், கவிஞர் மதுமதி, நண்பர் சீனு, நண்பர் ஸ்கூல் பையன், நண்பர் ரூபக் அனைவருக்கும் நன்றி. இந்தச் சந்திப்புக்கு அழைப்பு விடுத்து தன் மேலான உபசரிப்பை நல்கிய என் குருநாதர் பாலகணேஷ் சாருக்கு நன்றிகள் பல. மற்றுமொரு சந்தர்ப்பத்தில் இன்னொரு சந்திப்புக்காய் காத்திருக்கிறேன்.


-முடிஞ்சு போச்சு..

19 comments:

 1. // எல்லோருமாய் ஓரிரு (?!!) புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு//

  ஹா ஹா... ஒவ்வொருத்தர் கேமராவிலயும்...


  //கவிஞர் கவியாழி அவர்கள் வண்டியின் குறுக்கே வருபவர்கள் எல்லோரையும் அன்புடன்(?!!) நலம் விசாரித்த விதம் அருமை//

  அவர் ரொம்பவும் சாது.... அப்படியெல்லாம் பேசமாட்டார்..

  //தலையில் மொட்டையும் கையில் லட்டுமாய் வந்தபோது திருப்பதி சென்று வந்த பீல் கிடைத்தது.//

  சும்மா சொன்னா எப்படி? உண்டியல்ல காணிக்கை போடலையே....

  ReplyDelete
  Replies
  1. அன்பா பேசினார்னு தானே சொன்னேன்..


   காணிக்கை தானே.. போட்டுடலாம்

   Delete
 2. இனிமையான சுவையான (கேக்கு போச்சே) சந்திப்பு...

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க.. இப்பவும் பீல் பண்றேன் ;-)

   Delete
 3. தலையில் மொட்டையும் கையில் லட்டுமாய் வந்தபோது திருப்பதி சென்று வந்த பீல் கிடைத்தது

  வாழ்த்துகள்...

  ReplyDelete
 4. ம்ம்ம் பிர்யாணி, சுக்கா நினைவில் வச்சிருக்கேன். மறக்கக்கூடாது ஆண்டவா! சகோதரர்களை சந்திக்கும்போது வட்டியோடு வாங்கிடனும்:-)

  ReplyDelete
  Replies

  1. வட்டியோடன்னா எலும்பும் சேர்த்தா?? ஹஹஹா.. அடுத்த பதிவர் சந்திப்பில் பாத்துக்கலாங்க..

   Delete
 5. எங்க போனாலும் கவியாழி செய்த சாதனைகள் தான் ஒலி/ஒளி பரப்பப் படுகிறது, என்னொரு மகத்தான வெற்றி ஹா ஹா ஹா

  ReplyDelete
  Replies

  1. குறுகிய காலத்தில் அவர் செய்த சாதனைகள் அளப்பரியது.. அதனால் எல்லா இடத்திலும் அவர் பற்றிய பேச்சுக்கள் கேட்பது ஒன்றும் ஆச்சர்யமில்லை..

   அது சரி தம்பி, உன் கமெண்டுல ஒரு குறும்பு கொப்பளிக்குதே, ஆது என்ன?

   Delete
 6. பதிவர் சந்திப்பை...ஒளி பரப்பு செய்த ‘கோவை ஆவி’ டிவிக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. இயக்கத்தை உங்களிடம் தானே பயின்றேன்.. ஹிஹிஹி..

   Delete
 7. எதுவுமே செய்யவில்லையே நான் பின்பு ஏன் இப்படி... ? ஓ.. அடுத்த சந்திப்பில் இப்படி கவனிக்க வேண்டுமோ ?
  இதை இப்படியும் சொல்லிவிடலாம் போல.

  ReplyDelete
 8. ஸாதிகா வீட்டு கேக்கை ருசித்து ரசித்தவன் நானாகத்தான் இருப்பேன் என்பது இப்போது புரிகிறது. என்ன பண்ண... வயிறு ஃபுல்லா இருந்தாலும் தங்கை அன்போட தர்றதை மறுக்கறது நடக்கற விஷயமில்லையே... பயணத்தின், சந்திப்பின் இனிமையை சுவைபடப் பகிர்ந்திருக்கிறாய். கடைசியில் அதென்ன ஆதங்கம்? சந்திப்புகளும் நட்பும் என்றும் முடிவதில்லை. நிச்சயம் தொடரத்தான் போகின்றன! சியர் அப் ஆவி!

  ReplyDelete
 9. முடிஞ்சு போச்சு..இல்லை முடிவில்லா பயணம்! இனிமை நினைவுகள்!

  ReplyDelete
 10. சிக்கன் 65 விட்டுடிங்க ஆவி சார் ... ஹா ஹா ..
  மீண்டும் பதிவர் சந்திப்பில் தங்களை சந்திப்பேன் என்று எண்ணுகிறேன்...

  முடியுடனா ? இல்லை இதே தோற்றத்திலா?

  ReplyDelete
 11. சுவையான சந்திப்பு!!!

  ReplyDelete
 12. ஆஹா ஆனந்த் இவ்ளோ அட்டகாசம் பண்ணுவியா நீயி? :) நேர்ல பார்க்கும்போது குழந்தை மாதிரி அமைதியா உட்கார்ந்திருந்த புள்ள இப்படி எழுதி இருக்கே.... ம்ம்ம்ம் அடுத்த பதிவர் சந்திப்புக்கு இப்பவே ஆயத்தமாகுங்க கண்ணுகளா :) :) :)

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails