Friday, July 5, 2013

சிங்கம் II - திரை விமர்சனம்


                          "நான் உன்னை ரொம்ப காக்க வச்சுட்டேன்.." "பரவாயில்லே, நீங்க அவ்வளவு பெரிய வேலைய விட்டுட்டு வந்து இங்க வேலை பார்க்கறீங்க.. அதுக்கு நிச்சயம் ஏதாவது காரணம் இருக்கும். அது என்னன்னு என்கிட்டே சொல்லனும்னு அவசியமில்லை. உங்களுக்காக நான் காத்துக்கிட்டு இருப்பேன்".  ஒவ்வொரு பெண்ணும் தன் கணவன்/ காதலனிடம் இந்த புரிதலோடு  இருந்தால் நாட்டில் பிரச்சனைகளின் அளவு குறைவாக இருக்கும். சரி கதைக்கு வருவோம்..


                               சென்ற பாகத்தில் ஆள்கடத்தல், லேண்ட் மாபியா என சில விஷயங்களை துப்பி அறிந்த சாரி துப்பறிந்த துரைசிங்கம் இந்த முறை தூத்துக்குடியில் துறைமுகத்தில் போதை மருந்து கடத்தலை கண்டறிந்து வேர் அறுக்கிறார்..இடையிடையே ஹன்சிகாவையும் அனுஷ்காவையும் மாறி மாறி காதலிக்கிறார். ( ஹன்சிகாவின் காதலுக்கு புதிதாய் ஏதாவது ஐடியா யோசித்திருக்கலாம். போன படத்து ஐடியாவை அப்படியே கட் காப்பி பேஸ்ட் , ஒய்  ஹரி சார்) சந்தானமும், விவேக்கும் கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள்.


                               டி.எஸ்.பி யின் புண்ணியத்தில் எல்லாப் பாடலும் காதுக்குள் இம்சையை ஏற்படுத்திய காரணத்தால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் சென்றேன். ஆனால் ஹரியின் அற்புதமான திரைக்கதையும் பாடல் படமாக்கிய விதமும் எல்லாப் பாடல்களையும் ரசிக்க வைத்தது. குறிப்பாக முதல் பாடலை கண்ணிமைக்காமல் பார்த்தேன்.(அதற்கான காரணம் படம் பார்த்தவர்களுக்கு தெரியும்). ஹீரோ இன்ட்ரோவிற்குஅய்யனார் கோவில் திருட்டு, போலிஸ் ஜீப், சூர்யா பாய்ந்து வர,  தெரியாம மறுபடியும் சிங்கத்துக்கே வந்துட்டமா என்று எண்ணுகையில் இது முதல் பாகத்தின் ரீ-கேப் ( RECAP) என்று சொல்லி நம்மை ஆசுவாசப் படுத்துகிறார்கள்.


                            சென்ற பாகத்தில் தூத்துக்குடி, சென்னை என்று லோக்கல் ரவுடிகளை விரட்டி அடித்த துரைசிங்கத்திற்கு இந்த படத்தில் "சிம்ம" சொப்பனமாக இருப்பது இன்டர்நேஷனல் போதை கடத்தல் மன்னன் டேனி (இந்தியப் பெருங்கடலுக்கே ராஜான்னு அப்பப்போ சொல்லிக்கிறார்). ஹரி ஸ்கிரிப்ட் எழுதும் போது கிரிக்கட் பார்த்துக் கொண்டே எழுதியிருப்பார் போல. வெஸ்ட் இண்டியன் போல இருக்கும் டேனி முதலில் ஒரு ஆஸ்திரேலியன் போலீசுடன் சண்டை போடுகிறான்.. பின்னர் சூர்யாவை அடிக்க ஸ்ரீலங்காவிலிருந்து ஒரு ஆளை வரவழைக்கிறார் வில்லர். கடைசியில் இந்தியன் துரைசிங்கம் பைனலை முடிப்பது சவுத் ஆப்ரிக்காவில் உள்ள டர்பனில்..ஷப்பா..


                            சூர்யாவின் நடிப்பில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. மூன்றேகால் மணிநேரம் ஓடும் படத்தில் அவரை துரைசிங்கமாகவே பார்க்க வைக்கிறார். வசன உச்சரிப்பில் சில இடங்களில் கமலை நினைவு படுத்துகிறார். கீப் இட் அப் சூர்யா.. இதுவரை கவர்ச்சி பொம்மையாக (Glam Doll ) வந்து போன ஹன்சிகா  கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார். அனுஷ்கா இரண்டு பாடலுக்காகவும், சென்ற பாகத்தின் கண்டினியுடிக்காக மட்டுமே பயன்படுகிறார். முதல் பாதியில் நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் "காமெடி சூப்பர் ஸ்டார்" சந்தானம் இரண்டாம் பாதியில் மொக்கை போடுகிறார். விவேக் இந்த படத்துல இருக்கீங்களா? துரைசிங்கம் கேட்பதை எல்லாம் கொடுக்கும் பணியில் விஜயகுமார். சூர்யா மற்றும் ஹரிக்காக இந்தப் படம் பார்க்கலாம். அனுஷ்காவுக்கும் சூர்யாவுக்கும் இந்த பாகத்திலும் திருமணம் ஆகவில்லை.. ஆகவே மக்கள்ஸ் கெட் ரெடி பார் சிங்கம் 3...



76 / 100






21 comments:

  1. தியேட்டர்லயே வுமர்சனத்தை டைப் பண்ணிட்டயா? என்னா வேகம். அவசியம் பாத்துடறேன்.

    ReplyDelete
    Replies
    1. மக்கள் சேவையில் ஆவி எப்பவுமே முன்னாடி தானே பாஸ்! (தரமான படங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டாமா?)

      Delete
    2. யோவ் இதெல்லாம் அநியாயம்யா... இருந்தாலும் உமது மக்கள் சேவையைக் கண்டு யாம் வியகோம்

      Delete
  2. படம் விரைவில் பார்க்கணும்...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா பாருங்க.. நல்லா இருக்கு..

      Delete
  3. நல்லவேளை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் போனதால், படம் பிடித்தது..

    ReplyDelete
    Replies
    1. விஜய் ரசிகனுக்கே படம் பிடிச்சிருக்குன்னா படம் ஹிட்டு தான்..

      Delete
  4. Replies
    1. ஆமா மச்சி.. செம்ம மாஸ்..

      Delete
  5. இந்த ஞாயிறு செல்லலாம் என்றுள்ளேன்...

    ReplyDelete
    Replies
    1. பார்த்துட்டு சொல்லுங்க..

      Delete
  6. படத்தினைப் பார்க்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. பாருங்க.. மிஸ் பண்ணிடாதீங்க..

      Delete
  7. பாக்கோணும்... கூடிய சீக்கிரம் பாக்கோணும், ஹரி படம் மொக்கையாவே இருந்தாலும் லாஜிக் சொதப்பல் இல்லாத திரைகதை (சண்டைக் காட்சிகள் தவிர்த்து ) நல்ல இருக்கும்... மொக்கப் பட வேங்கை திரைகதை கூட எனக்கு பிடிக்கும்

    ReplyDelete
    Replies
    1. வேங்கை பிடிக்குமா? எனக்கும் தான்.. நிறைய பேருக்கு பிடிக்காத கோவில் எனக்கு ரொம்ப பிடிச்சது..

      Delete
  8. சுவையான விமர்சனம்! ஒரு முறை பார்த்துடுவோம்! சிங்கத்த!

    ReplyDelete
  9. பாருங்க சுரேஷ்.. நல்லா இருக்கு..

    ReplyDelete
  10. ஹரியின் படத்தில் வசனம் நல்லா இருக்கும், குறிப்பாக ஐயா, தாமிரபரணி. இந்த படத்திலும் சில வசனம் நச் என்று உள்ளது

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க கரெக்டுதான்.. அடுத்த முறை பேரைப் போட்டு கமெண்ட் போடுங்க..

      Delete
  11. ஹே அட ஆமாம்பா அருமையா விமர்சனம் எழுதி இருக்கீங்க... கண்டிப்பா படம் பார்த்துட வேண்டியது தான்பா... இப்டி தான் இருக்கணும் நல்லப்பிள்ளை....

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி மஞ்சுபாஷினி அவர்களே.. உங்க பின்னூட்டம் ஊக்கமளிப்பதாய் உள்ளது.. (நல்ல பிள்ளைன்னு சொல்லிட்டாங்கப்பா)

      Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...