'வந்தேமாதிரம்' கொடுத்த விளம்பரப் பட இயக்குனர் பரத்பாலா முதன்முதலாய் எடுத்திருக்கும் திரைப்படம். ஹிந்தியில் ராஞ்சனா எனும் படத்தில் நடித்து வடக்கிலும் கால் பதித்துள்ள தனுஷுக்கு பெரும் எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் படம் இது. பூ, சென்னையில் ஒரு நாள் என்று வித்தியாசமான கேரக்டர்களில் நடித்த பார்வதி மேனன் கதாநாயகி. தேசிய விருது பெற்ற மூன்று பேரை படத்தில் நடிக்க வைத்து ஆஸ்கர் நாயகனை இசையமைக்க வைத்து ஆஸ்கர் ரவிச்சந்திரனை தயாரிப்பாளராக்கிய பரத்பாலாவிற்கு ஒரு ஷொட்டு.
சரி கதைக்கு வருவோம். வறுமைக்கு பெயர் போன ஆப்பிரிக்காவின் சூடான் நாட்டில் அந்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்காமல் வெளிநாடுகளிலிருந்து பணியாளர்களை வரவழைத்து (Cheap Labor) பணிக்கு அமர்த்துவதால் கோபம் அடையும் ஒரு பிரிவினர் தீவிரவாதிகளாக உருவெடுத்து அந்த கம்பெனியின் பணியாளர்களை கடத்தி மிரட்டுகின்றனர். இப்படி மாட்டிக் கொள்ளும் ஒரு பணியாளாக தனுஷ்.. பிளாஷ்பேக்கில் பார்வதியுடனான அவர் காதல். இவர்களுக்கு உதவி செய்யும் அப்புக்குட்டி, பார்வதியின் காதலுக்காக அவர் பெற்ற கடன் தீர்க்க வேண்டி சூடான் செல்கிறார் தனுஷ். அங்கே தீவிரவாதிகளிடமிருந்து மரியான், பிழைத்தானா மரித்தானா என்பதே கிளைமாக்ஸ்.
கடல், சர்ச், ஹீரோ ஹீரோயின் என்று மீண்டும் கடல் படத்தை ஞாபகப் படுத்த, உடன் ரகுமானின் இன்னும் கொஞ்ச நேரம் நெஞ்சுக்குள்ளே பாடலை நினைவுபடுத்த நாம் கொஞ்சம் மிரளத்தான் செய்கிறோம். பரத்பாலா சார், முதல் படம் என்பதால் பொறுத்துக் கொள்கிறோம். அப்பப்பா தனுஷ் டிரவுசரில் இருப்பதை விட நிறைய ஓட்டைகள் படத்தில். தீவிரவாதி தலைவன் தனக்கு பெண்களே பிடிக்காது என்று சொல்லும் ஒரு காட்சி உண்டு. அடுத்த காட்சியிலேயே ஒரு பெண்ணுடன் நடனமாடுகிறார். பிணைக்கைதியிடம் ஐ.எஸ்.டி வசதியுள்ள போனைக் கொடுப்பது. அதே போல் கொள்கைக்காக கடத்திவிட்டு கேளிக்கைகளில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் கொஞ்சமும் ஒட்டவில்லை. அதிலும் தனுஷை சித்ரவதை செய்ய அவரை பாட சொல்லும் போது அவர் சித்ரவதை செய்வது தனுஷை அல்ல, நம்மைத்தான்.
தனுஷிடமிருந்து நிறைவான நடிப்பு. பார்வதி "கிளாமர் குத்துவிளக்கு". சிறிய வேடமென்றாலும் உமாரியாஸ், ஜெகன், சலீம் ஆகியோர் நடிப்பு பிரமாதம். இசைப்புயலின் மெல்லிய இசையில் காதல் காட்சிகள் மனதை அள்ளுகிறது.பின்னணி இசையில் படத்தை தரதரவென்று இழுத்து செல்கிறார். பொருத்தமான இடத்தில் நெஞ்சே எழு பாடல் படத்தின் தொய்வை குறைக்கிறது. ஒளிப்பதிவு கடலையும், பாலைவனத்தையும், மேக்கப் போடாத பனிமலரையும் அழகாக காட்டுகிறது.
கதையின் பலத்தை ஈடுகொடுக்க முடியாத பலவீனமான திரைக்கதையால் ஆங்காங்கே கொட்டாவி வருவதை தவிர்க்க முடியவில்லை. இந்தப் படத்தில் வரும் அப்புக்குட்டியின் காமெடிகளுக்கு என் அருகில் அமர்ந்திருந்த இரண்டு பிகர்கள் விழுந்து விழுந்து சிரித்த கொடுமையும் அரங்கேறியது.. மொத்தத்தில் சிங்கத்தின் எதிரே நிற்கக்கூடிய துணிவோ ஆயுளோ மரியானுக்கு இருப்பதாய் தெரியவில்லை.
55 / 100
// ஒளிப்பதிவு கடலையும், பாலைவனத்தையும், மேக்கப் போடாத பனிமலரையும் அழகாக காட்டுகிறது.// சூப்பர்
ReplyDeleteமரியான் திரைகதையை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாம்
கடைசி காட்சியில் கடல் ராசா தண்ணீரில் நீந்தியே இந்தியா வந்துவிடுவாரோ என அச்சப்பட்டுக் கொண்டே இருந்தேன்.. நல்லவேளை, அப்படி எதுவும் நடக்கவில்லை..
Deleteம்ம் ரைட்டு. டிவில கிளிப்பிங்க்ஸ் போடும்போது முடிஞ்சா பார்த்துக்குறேன்
ReplyDeleteஆமா அக்கா.. உங்களுக்கு படம் புடிக்கும்னு தோணலே..
Deleteசிங்கத்திற்கு இதற்கும் சம்பந்தமே இல்லையே...!
ReplyDeleteஇல்ல DD. சிங்கத்தின் வசூலை இந்தப் படம் பாதிக்கும்னு ஒரு பேச்சு இருந்தது.. அதைத்தான் அப்படி சொன்னேன்..
Deleteபுண்ணியமா போகும்.....தியேட்டருக்கு போய் கடி வாங்காம காப்பாத்தி விட்டீரே.....நன்றி!
ReplyDeleteகொ.கே: அந்த ரெண்டு ஃபிகர்களும், தெரிஞ்சவங்களா?
ஹாஹா.. இல்லங்க.. அவங்க யாரோ.. நான் யாரோ..
Deleteஆவி ஸ்கீரின்ல மரியான் விமர்சனம் முந்தி வந்துருச்சே...! கடல் படத்தை ஞாபகப்படுத்துதுன்னு நீங்க சொன்னதுமே இங்க வயத்தக் கலக்கிருச்சு! தங்கச்சி சொன்ன மாதிரி டி.வி. கிளிப்பிங்ஸ்லயே பாத்துக்கலாம்டான்னு தோணிருச்சு!
ReplyDeleteஸார், இருந்தாலும் நீங்க பனிமலருக்காக, ஸாரி பார்வதிக்காக ஒருமுறை பார்க்கலாம்.. படம் பார்க்கிறதுக்கு முன்னாடி தம்பி ரூபக் நஸ்ரியாவுக்கு போட்டியா இந்தப் புள்ள வந்துடுச்சுன்னு ஒரு பீதிய கிளப்ப, அலறியடிச்சுட்டு போனா அப்படி எதுவும் இருக்கிறதா எனக்கு படல..
Deleteஇருந்தாலும் பச்ச மண்ணு சார்.. ஒருமுறை பார்த்துட்டு வந்துடுங்க.. காதல் காட்சிகளில் ரசம் அதிகம்..( சாம்பார் இல்லையான்னு கேக்கப்படாது)
படத்த ஒரு டைம் பார்க்கலாமா வேணாமா...
ReplyDeleteகண்டிப்பா பார்க்க வேண்டிய படம் கிடையாது.. அடுத்த வாரம் அகில உலக சூப்பர் ஸ்டார் படம் வருது..
Deleteபடத்த ஒரு டைம் பார்க்கலாமா வேணாமா...
ReplyDeleteசிங்கத்த எதுக்குங்க சீண்டி பார்கிறீங்க :- )
ReplyDelete//என் அருகில் அமர்ந்திருந்த இரண்டு பிகர்கள் விழுந்து விழுந்து சிரித்த // ம்.ம்..அப்ப படத்தை வாட்ச் பண்ணல ?
//பலவீனமான திரைக்கதையால் ஆங்காங்கே கொட்டாவி வருவதை தவிர்க்க முடியவில்லை// ஆவி க்கே கொட்டாவின்னா... சொல்லவேண்டியதில்லை..!
//அப்பப்பா தனுஷ் டிரவுசரில் இருப்பதை விட நிறைய ஓட்டைகள் படத்தில்.// இதுக்கே மார்க் 55 ஆ ?
சிங்கத்த எதுக்குங்க சீண்டி பார்கிறீங்க :- )
ReplyDelete//என் அருகில் அமர்ந்திருந்த இரண்டு பிகர்கள் விழுந்து விழுந்து சிரித்த // ம்.ம்..அப்ப படத்தை வாட்ச் பண்ணல ?
//பலவீனமான திரைக்கதையால் ஆங்காங்கே கொட்டாவி வருவதை தவிர்க்க முடியவில்லை// ஆவி க்கே கொட்டாவின்னா... சொல்லவேண்டியதில்லை..!
//அப்பப்பா தனுஷ் டிரவுசரில் இருப்பதை விட நிறைய ஓட்டைகள் படத்தில்.// இதுக்கே மார்க் 55 ஆ ?
அதிலும் தனுஷை சித்ரவதை செய்ய அவரை பாட சொல்லும் போது அவர் சித்ரவதை செய்வது தனுஷை அல்ல, நம்மைத்தான்.
ReplyDeleteமொத்ததில இந்தப் படம் பார்க்கத் தேவையே இல்லை
அப்படித் தானே ?....:)
நண்பரே, விரைவில் நன்கு குணமடைந்து மீண்டு வாருங்கள், உங்களது பதிவுக்கு காத்திருக்கிறோம் !
ReplyDeleteGood review
ReplyDelete