Tuesday, July 23, 2013

ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! ( இருதயத்தில் ஒரு வலி )-9

முந்தைய பதிவுகளுக்கு...


                          கவுண்டர் காம்ப்ளெக்ஸ் முழுவதும் அமைதி நிலவிய அந்த மதிய வேளையில் ஒர்கஷாப்  லேப்பை முடித்துவிட்டு அவசர அவசரமாக மதிய உணவு சாப்பிட வந்தான் அன்பு.  தட்டை கழுவ வந்த அன்பு எதேச்சையாய் என் அறையை பார்க்க, அது உள்பக்கமாக தாளிட்டிருப்பதை பார்த்து கதவைத் தட்டினான். பலமுறை தட்டிய பின் கதவைத் திறந்த நான் ஒன்றும் பேசாமல் உள்ளே பாயில் சென்று அமர்ந்தேன். என் முகவாட்டத்தை பார்த்த அன்பு "ஆனந்த், என்னாச்சுடா" என்றான். அப்போதும் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருக்கவே அவன் என்னருகில் வந்தமர்ந்து "ஆனந்த், என்னடா.. ஏன் இப்படி உட்கார்ந்திருக்கே.. உடம்புக்கு எதுவும் சரியில்லையா.. டாக்டர் கிட்ட போகலாமா" என்றான். நான் வேண்டாம் என்பது போல் தலையசைக்க "சாப்பிட்டயா " என்றான்.




                                 நான் இல்லை என்று தலையாட்ட தன் அறைக்கு சென்று இரண்டு தட்டுகளில் சாப்பாடு போட்டு வந்தான். நான் உண்ணாமல் அமர்ந்திருக்கவே அவன் என் தட்டிலிருந்து ஒரு கவளம் சோறு எடுத்து ஊட்டி விட்டான். அவன் செயல் என்னையும் அறியாமல் என் கண்களில் இருந்து நீரை வார்க்க " இன்னைக்கு ரமாகிட்டே சொல்லிட்டேண்டா"  என்றேன்.. அவன் உண்பதை நிறுத்திவிட்டு "வ்வாட்.. நிஜமாவா சொல்றே" என்று சந்தோஷமாக 
ஆரம்பித்தவன் வாடியிருந்த என் முகத்தைப் பார்த்து " அவ என்ன சொன்னாடா" "சரின்னு சொன்னாளா?  முடியாதுன்னுட்டாளா?" என்று அவள் கூறியதை தெரிந்து கொள்ளும் ஆவலில் படபடவென கேள்விகளை அடுக்கினான்.

                                  நான் பதிலொன்றும் சொல்லாமல் இருக்கவே.. "விடுடா, அவ இல்லாட்டி பரவா இல்ல. கருப்பா, குள்ளமா உனக்கு கொஞ்சம் கூட மேட்சே இல்லே." என்று சரமாரியாக அடுக்கிக் கொண்டே போக "இல்லடா, அவ வேணாம்னு எல்லாம் சொல்லலே" என்றேன். சற்றே குழப்பத்துடன் "அப்ப சரின்னு சொன்னதுக்கு நீ எதுக்கு பீல் பண்றே?" என்றான். "ம்ம்.. அவ சரின்னும் சொல்லலே" என்றதும் "எனக்கு ஒண்ணுமே புரியல.. அவ சரின்னும் சொல்லலே, வேண்டானும் சொல்லலையா.. என்னடா சொல்றே.. புரியற மாதிரி சொல்லு.."  "நான் அவளைப் பிடிச்சிருக்குன்னு சொன்னேன். லவ் பண்றேன்னும்  சொன்னேன். அதைக் கேட்டதும் எதுவும் பேசாமலே அங்கிருந்து போய்ட்டாடா." என்றேன்.



                                  "அவ இல்லாத  ஒரு லைப்ப என்னால நினைச்சு கூட பார்க்க முடியல. அவ வேண்டாம்னு  சொல்லிட்டா அத ஏத்துக்கற தைரியம் இல்லடா. அதான் மதியம் கிளாசுக்கு கூட போகலே." என்ற என்னைப் பார்த்து  " டே ஸ்டுப்பிட், இதுக்குத்தான் இவ்வளவு பீல் பண்ணினாயா. பொண்ணுங்க எப்பவும் அப்படித்தான். இந்த மாதிரி விஷயத்தை நேருக்கு நேர் சொல்ல மாட்டாங்க. அவளுக்கு உன்னை கட்டாயம் பிடிக்கும்டா.. தைரியமா இரு. இப்படி பயந்துகிட்டு இருக்கிற ஆனந்த்தை அவளுக்கு நிச்சயம் பிடிக்காது. எப்பவும் போல கலகலன்னு பேசி சிரிக்கிற ஆனந்தைத்தான் அவளுக்கு பிடிக்கும். வா.. சாப்பிட்டு கிளாசுக்கு கிளம்பு" என்றான். அவன் வார்த்தைகள் மனதிற்கு தைரியம் அளிப்பதாய்  இருந்தன.

                                      தட்டில் இருந்த உணவை உண்டுவிட்டு முகத்தை அலம்பிவிட்டு கல்லூரியை நோக்கி அன்புவுடன் சென்றேன். போகும் வழியில் எனக்கு உற்சாகமூட்டும் வார்த்தைகளைக் கூறி என்னை ஊக்கப்படுத்தினான். கல்லூரியை அடைந்ததும் ஹிருதயம் இருமடங்காய்த் துடிக்க ஆரம்பித்தது. வகுப்பறைக்குள் நுழையும் போது ஆசிரியர் ஏற்கனவே வந்திருந்தார். அவரிடம் ஒரு பொய்யைக் கூறிவிட்டு என் இருக்கைக்கு சென்றேன். அவளைப் பார்க்க விரும்பிய போதும் எதோ ஒன்று அவளைப் பார்க்கவிடாமல் தடுத்தது. அருகிலிருந்த பாஸ்கர் டெஸ்க்கின் உள்ளிருந்து ஒரு கவரை எடுத்து "அவ உன்கிட்ட கொடுக்க சொன்னாடா" என்றபடி என்னிடம் கொடுத்தான். அது நான் ரமாவுக்கு வாங்கிக்கொடுத்த சுடிதார் போட்டிருந்த அதே கவர்..


தொடரும்..




11 comments:

  1. நேருக்கு நேர் சொல்ல மாட்டாங்க... சரி தான்... பகிர்வு இருக்கட்டும்... உடல் நலம் எவ்வாறு உள்ளது...? முழுவதும் குணமாகி விட்டதா...?

    ReplyDelete
  2. அட...மீண்டும் சஸ்பென்ஸ்... டைப் அடிக்க முடிகிறதா ஆனந்த்?

    ReplyDelete
  3. அழகான எழுத்து நடை...தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  4. சஸ்பெண்ஸ் தாளலை! சீக்கிரமா சொல்லுங்க! இங்க என் ஆவி துடிக்குது!

    ReplyDelete
  5. சுவாரசியத்துடன் முடித்துள்ளீர்.

    இருப்பினும் எனக்கு ஒரே ஒரு கேள்வி தான், இது முன் கூட்டியே எழுதிய பதிவா இல்லை ஆள் வைத்து எழுதியதா ?

    ReplyDelete
  6. அந்த கவர்...கவருக்குள்ள லட்டர்...இதுதானே...
    எவ்ளோ படம் பார்த்திருக்கோம்....ஹிஹிஹி

    ReplyDelete
  7. அந்தரத்துல பல்டி அடிச்சு, கையை தூளி கட்டி வெச்சிருக்கும் நிலையிலயும் பதிவா?! என்னே உங்க கடமை உணர்ச்சி!?

    ReplyDelete
  8. இத நாவலாவே வெளியிடலாமே ஆச்சரியக்குறி

    ReplyDelete
  9. நண்பர் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும். தைரியமான ஆண்களைத்தான் பெண்களுக்கு பிடிக்கும் என்று சொன்னாரே.. சிறப்பு. ஆமா இந்த பதிவை டைப் செய்தது யாரு ?

    ReplyDelete
  10. தொடர்பதிவு :

    http://nigalkalam.blogspot.in/2013/07/blog-post_29.html

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. Visit : http://blogintamil.blogspot.in/2014/04/blog-post_23.html

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...