Thursday, July 11, 2013

ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! (காதல் சொல்ல வந்தேன்)-8


முந்தைய பதிவுகளுக்கு...



                   அவளின்  அண்மை சந்தோஷத்தின் கதவுகளை திறந்துவிட்ட  போதிலும் அவளிடம் என் காதல் சொல்ல எத்தனிக்கும் ஒவ்வொரு பொழுதிலும் தொண்டைக் குழியில் சிக்கிக் கொண்ட முள்ளாய் வார்த்தைகள் வெளிவர மறுத்தது. அதுவரை மெதுவாக ஓடிக்கொண்டிருந்த என் கைக்கடிகாரம் வேகமாக சுழன்றது. நாட்காட்டி தேதிகளை திருடிக் கொள்ள சில மாதங்கள் உருண்டோடியது. தேர்வுக்கு சில நாட்களே இருக்கையில் குருவின் பார்வை உச்சத்தில் இருந்த ஒரு நன்னாளில் எப்போதும் போல் கல்லூரிக்கு  சென்ற எனக்கு சங்கீதா பெஞ்சுக்கு மிக அருகில் வைத்திருந்த ஒரு கிப்ட் பேக் செய்த பெட்டி கண்ணை உறுத்தியது.. "சங்கீதா.. என்ன கிப்ட் எல்லாம்.. யாருக்கு பர்த்டே" என்றேன். "க்ளோஸ் ப்ரெண்ட் நீ, உனக்கு தெரியாதா.. நம்ம ரமாவுக்கு தான் இன்னைக்கு பர்த்டே.." என்றாள்.

                         அன்று அவள் பிறந்த நாள் என்றதும் ஓர் இனம்புரியா சந்தோசம். அவளிடம் காதல் சொல்ல  இன்று தான் சிறந்த நாள் என மனதிற்குள் அமர்ந்திருந்த  மாயக் கண்ணன் கூற, அவளுக்கு நல்ல ஒரு பரிசுடன் என் காதலையும் சேர்த்துக் கொடுக்க எண்ணினேன். மாதக் கடைசியாதலால் (?!!) கையில் சொற்ப பணமே இருக்க என் கண்கள் ஆபத்பாந்தவனைத் தேடியது. வேற யாரு, நம்ம பாஸ்கர் தான். லேப்பில் பிப்பெட்டை உடைத்து விட்டதாய்க் கூறி அவனிடமிருந்து ஒரு இருநூறு ரூபாய் வாங்கிக் கொண்டு நாமக்கல் நோக்கி பஸ் ஏறினேன். என்ன பரிசு வாங்குவது என்று மனசுக்குள் ஒரு பட்டிமன்றமே நடக்க கடைசியில் மாயக் கண்ணன் சாலமன் பாப்பையாவாகி அவளுக்கு ஒரு சுடிதார் வாங்கித் தர பணித்தார். 

                          நாமக்கல் பஸ்ஸ்டாண்டின் எதிரே இருந்த  ஒரு சிறிய துணிக்கடைக்கு சென்றேன். சுடிதார் வாங்கலாம்னு முடிவு பண்ணியாச்சு என்ன அளவு சொல்லி வாங்கனும்னு ஒரே குழப்பம். அங்கு வேலை செய்த பெண்ணிடம் வெளியே பொம்மைக்கு போட்டிருந்த சுடிதார் போல் வேண்டுமெனக் கேட்டேன். அந்தப் பெண்ணும் சில சுடிதார்களை எடுத்துப் போட நான் அவரிடம் "என் உயரம் இருப்பாங்க. கொஞ்சம் பூசினா மாதிரி இருப்பாங்க.. இந்த சைஸ் கரெக்டா இருக்குமா?" என்றேன். அந்தப் பெண் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு " இது ப்ரீ சைஸ் தாங்க.. கரெக்டா இருக்கும்." என்றாள்.  அவள் பதில் எனக்கு முழு திருப்தி அளிக்கவில்லை. அதெப்படி ஒரே சைஸ் எல்லோருக்கும் பொருந்தும் என்ற குழப்பம். 

                          அவள் எடுத்துப் போட்ட சுடிதாரில் பலவற்றை நிராகரித்து ஒரு பத்து நிமிட போராட்டத்துக்குப் பின் (கிட்டத்தட்ட அந்தக் கடையில் இருந்த எல்லா சுடிதாரையும் எடுத்துக் காண்பித்தார் அந்தப் பெண்மணி) இரண்டு சுடிதார்களை தேர்வு செய்தேன். எனக்குப் பிடித்த நீல நிறத்தில் ஒன்று. அவளுக்குப் பிடித்த பச்சை நிறத்தில் ஒன்று. சுடிதாரின் விலையை அப்போதுதான் கேட்டேன். நூற்றி எழுபத்தி ஐந்து என்றாள் அவள். என்னிடம் இருந்ததோ பாஸ்கரின் இருநூறும், மேலும் ஒரு ஐம்பதும்..  நீண்ட யோசனைக்கு பிறகு நீல நிற சுடிதாரை தேர்வு செய்து பணத்தைக் கொடுத்தேன் . இந்த ஒரு சுடிதாருக்கு தான் இவ்வளவு ஆர்ப்பட்டமா என்பது போல் ஒரு கேவலமான பார்வை பார்த்தார் அந்தப் பெண். சுடிதாரை கைகளில் வாங்கும் முன் அவரிடம் " சைஸ் கரெக்டா இல்லேனா, மாத்தி குடுப்பீங்களா" என்றேன். சற்றே கோபத்துடன் அந்தப் பெண் " அதெல்லாம் மாத்த மாட்டோங்க ." என்றபடி வேறு வேலை பார்க்க சென்றார்.

                           அந்த சுடிதாரை எடுத்துக் கொண்டு கல்லூரி நோக்கி பயணமானேன். பயண நேரம் முழுவதும் இந்த நீல நிற சுடிதாரில் அவள் எப்படி இருப்பாள் என்று மனம் கற்பனை செய்து பார்த்தது. மேலும் அவளிடம் எப்படி காதல் சொல்லலாம் என ஒத்திகை வேறு. வண்டிகேட்டில் இறங்கி கல்லூரிக்குள் ஓட்டமும் நடையுமாய் நுழைந்தேன். என் கணக்குப் படி இடைவேளை முடிந்து மூன்றாவது பாடவேளை அப்போதுதான் ஆரம்பித்திருக்க வேண்டும். சுடிதாரோடு வகுப்பில் நுழைய சங்கடப்பட்டு அதை சன்னலின் வழி ஆசிரியருக்கு தெரியாமல்  பாஸ்கரின் மேசை மேல் 
வைத்துவிட்டு ஆசிரியரின் அனுமதி பெற்று உள்ளே நுழைந்தேன். 

                              நான் வருவதற்குள் அந்த சுடிதாரைப் பார்த்துவிட்ட பாஸ்கர் அனல் தெறிக்கும் பார்வை ஒன்றை வீசினான்.. அதை கண்டுகொள்ளாமல் அவன் அருகில் அமர, "இதுதான் பிப்பெட்டா" என்றான் ஆவேசமாய்.. "சாரி டா.. உன்கிட்ட ஒரு பொய் சொல்லிட்டேன்" என்றேன். "எக்கேடோ கேட்டுப் போ" என்றான் கோபத்தில். அவனைப் பிறகு சமாதானப் படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டே பார்வையை பக்கத்து டெஸ்குக்கு திருப்பினேன். என் தேவதை அன்று வெள்ளை நிற சுடிதாரும், சிவப்பு நிறத்தில் ஒரு ஷாலும்  அணிந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் எங்கே சென்றாய் என்பது போல் கண்களால் கேட்டாள் . நான் அதைக் கண்டு கொள்ளாதது போல் தலையை திருப்பி ஆசிரியரை கவனிப்பது போல் அமர்ந்தேன். அவள் சிறிது நேரம் காத்திருந்துவிட்டு பின் கோபத்துடன் திரும்பிக் கொண்டாள். நான் மனதிற்குள் சிரித்துக் கொண்டே இன்னும் ஒரு பாட வேளை  முடியட்டும் என்று காத்திருந்தேன். 

                           மதிய உணவு இடைவேளையும் வந்தது. சாப்பிட அழைத்த  பாஸ்கரிடம் "நீ முன்னாடி போடா.. நான் வர்றேன்" என்றேன்.. அவனோ "நீ திருந்த மாட்டே" என்றபடி அவ்விடத்தை விட்டு அகன்றான். ஒவ்வொருவராக வகுப்பறையை விட்டு வெளியேற இப்போது நான், ரமா சங்கீதா மூவர் மட்டுமே  இருந்தோம். சங்கீதாவும் ரமாவும் கேண்டீனுக்கு செல்ல எத்தனிக்க "ரமா" என்றழைத்தேன். அவளும் திரும்பி "அப்பாடா, என்னையெல்லாம் ஞாபகம் இருக்கா சாருக்கு." என்றாள் பொய்க்கோபத்துடன்." "ம்ம்.. ரமா, உன்கூட கொஞ்சம் தனியா பேசணும்" என்றேன். நான் கேட்டது ரமா, சங்கீதா இருவருக்கும் பிடிக்கவில்லை என்பது அவர்கள் முகபாவத்திலிருந்து தெரிந்தது. "நீ பேசிட்டு வா ரமா" என்றபடி சங்கீதா அகல, ஒரு கேள்விக் குறியுடன் என்னைப் பார்த்தாள் ரமா.. 

                            சங்கீதா வகுப்பறையை விட்டு வெளியேறியதை உறுதி செய்து கொண்டு "ரமா, பர்ஸ்ட் ஆப் ஆல் மெனி மோர் ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆப் தி டே" என்றவாறு என் வாழ்த்து சொல்ல என் கைகளை நீட்டினேன். "தேங்க்ஸ் என்றவாறு கைகுலுக்கி விட்டு எனக்காய் வைத்திருந்த டெய்ரி மில்க்கை கொடுத்தாள். "எனக்கு கிப்ட் ஏதும் இல்லையா" என்றாள் கண்களைச் சிமிட்டியவாறே. அப்போதுதான் என் டெஸ்க்கின் உள்ளிருந்து அந்த சுடிதாரை எடுத்து கொடுத்தேன்.  "இது என்ன சுடிதாரா? எதுக்கு சுடியெல்லாம் வாங்கனீங்க?" என்றாள். அதே சமயம் மனதிற்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு "உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்" என்றேன். புதிர்ப் போட்டியில் விடை தெரியாத சிறுமி போல் முகத்தை வைத்துக் கொண்டு "என்ன" என்றாள். ஆண்டவா தைரியத்த கொடு என்று வேண்டிக் கொண்டே" ரமா, உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. ஐ திங்க் ஐயம் இன் லவ் வித் யூ.." என்றேன்.



தொடரும்..






23 comments:

  1. இப்படி சஸ்பென்சோட முடிச்சா எப்படி? நாளைக்கே அடுத்த பாகம் வரணும்....

    ReplyDelete
    Replies
    1. காத்திருத்தல் தானே காதலில் அழகு, நண்பா?

      Delete
  2. அட...துரை அப்பவே...ஐ லவ் சொல்லியிருக்கு....

    ReplyDelete
    Replies
    1. ஏதோ நமக்கு தெரிஞ்ச மூணு வார்த்தை.. ஹிஹிஹி

      Delete
  3. அப்பா அடுத்த பார்ட்ல ஸ்டன்ட் இருக்கு அப்டித்தான.. அடி பலமா இல்லையான்றதையும் இதே மாதி சுவாரசியமா சொல்லிருங்க... எஸ்.டி.டி முக்கியம அமைச்சரே

    ReplyDelete
    Replies
    1. அடி சரியா விழலேன்னா மறுபடியும் அடிக்க சொல்வீங்க போலிருக்கே.. நீங்க எல்லாம் நல்லா வருவீங்க தம்பி..

      Delete
  4. காதல் பதில் தந்ததா அறை தந்ததா (கன்னத்தில்) என அறிய ஆவலுடன் வெய்ட்டிங். எனக்குல்லாம் படிக்கற நாள்ல காதல் வரலையேன்னு ஆவி மேல கொஞ்சம் பொறாமை. (என்ன பண்ண... நம்ம மூஞ்சிலட்சணம் அப்படி)

    ReplyDelete
    Replies
    1. "மந்திரம் சொல்வேன் வந்துவிடு" ங்கறதெல்லாம் சினிமால தான் சார்.. நிஜத்துல சாமர்சால்டே(Somersault) அடிக்க வேண்டியிருக்கும்.. தப்பிச்சுட்டீங்களேன்னு எனக்கு தான் உங்க மேல பொறாமையா இருக்கு..

      Delete
  5. காதல் சொல்லிட்டாரு... பதில எப்போ சொல்லுவாங்க...! இப்படி சசபென்சோட முடிச்சிட்டீங்களே!

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரம் சொல்ல சொல்றேங்க..! ;-)

      Delete
  6. நீங்க காத்திருந்தீங்கன்னா அதுல அவசியம் இருந்தது...எங்களையும் காக்க வெச்சுட்டீங்களே ஆ.வி

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரம் போட்டுடறேன் மேடம்..

      ரேஷன் கடையில காத்து நிக்கறோம், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்லே காத்து நிக்கறோம், ஏன் ஹோட்டலுக்கு போனா கூட காத்து நிக்கறோம்.. ஆவியின் கதைக்காக ஓரிரு நாட்கள் காத்திருக்க மாட்டீங்களா என்ன? :-)

      Delete
    2. சிங்கம் சூரியா போல நீண்ட வசனம் பேசி கலக்கரிங்க....

      Delete
  7. நல்ல சஸ்பென்ஸோட எங்களை காக்க வெச்சிட்டீங்க! காத்திருக்கிறோம்! நன்றி!

    ReplyDelete
  8. அடுத்த பகிர்வு எப்போது...?

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரம் போட்டுடறேன் தனபாலன்!

      Delete

  9. என்னைக் கவர்ந்தது உங்கள் நடை, ஆவலுடன் தொடர்கிறேன் உங்கள் தொடரை....

    என் தொடருக்கு நேரம் கிடைக்கும் போது விசிட் அடிங்க .... ஹி ஹி...
    http://rubakram.blogspot.in/2013/03/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபக்..

      Delete
    2. ரமாவின் பதிலுக்காக காத்திருக்கிறேன்

      Delete
  10. அட சொல்லியாச்சா.. அடுத்த பதிவு எப்பங்க.

    ReplyDelete
    Replies
    1. உங்ககிட்ட வேற மாதிரியா சொல்லப் போறேன்.. சீக்கிரம் போட்டுடறேங்க..

      Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...