ஆவிக்கு எதுக்குடா அட்ரஸ்ஸுன்னு நீங்க கேக்கறது புரியுது. சரி நாமளும் எவ்வளவு நாள் தான் வாடகை வீட்டுலயே குடியிருக்கிறது.. சொந்தமா ஒரு முகவரி வேணாமான்னு யோசிச்சதனால வந்த விளைவு.. என்னடா இவன் புதுசா வீடு வாங்கிட்டானான்னு நினைக்க வேண்டாம்.. kovaiaavee.blogspot.com என்கிற தள முகவரியிலிருந்து www.kovaiaavee.com எனும் முகவரிக்கு மாறியிருக்கேன்.. எல்லாரும் திறப்பு விழாவுக்கு குடும்பத்தோட வந்திருந்து சிறப்பித்து தருமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
(குறிப்பு-அனானிகளுக்கு நிச்சயமாக அனுமதி இல்லை)
இன்னைக்கு காலையில தள மாற்றத்திற்காக "போஅப்பாவிடம்" (GoDaddy யின் தமிழாக்கமாம் ) ஒரு ஆபர் போட்டிருந்ததை பார்த்ததும் கண்கள் விரிய படிக்கத் தொடங்கினேன். வெறும் நூற்றயொன்பது ரூபாய்க்கு தள முகவரி தருவதாக அவர்கள் விளம்பரம் கண்ணைப் பறிக்க உடனே சென்று பதிவு செய்துவிட்டேன்.. (இந்த விளம்பரம் எனக்கு மின்னஞ்சலில் வந்தது.. அவர்கள் தளத்தில் நேரடியாக சென்றால் நானூற்றி நாற்பத்தி ஒன்பது செலுத்த வேண்டும்) உங்களில் யாருக்கேனும் வேண்டுமென்றால் கூறுங்கள் அந்த மின்னஞ்சலை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்..
இதில் ஒரே சிக்கல் என்னவென்றால் கூகிளின் வழி சென்று தள முகவரி வாங்கியவர்களுக்கு கூகிளே எல்லா செட்டப்பும் (தள முகவரிக்கு தேவையான செட்டப்ப சொன்னேன்) செய்து கொடுக்கிறார்கள். ஆனால் ஆபரில் வாங்கும் போது நாமே சில செட்டிங்குகள் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. தள முகவரி வாங்கிட்டு சந்தோஷமா உள்ளே வந்து ரீ-டைரக்ட் அப்புடீன்னு கோவைஆவி பேரை குடுத்தா, பய புள்ள கண்ணா பின்னான்னு திட்டுது.
சரி, யாராவது விவரம் தெரிஞ்சவங்க கிட்ட கேக்கலாமுன்னு யோசிச்சப்போ நினைவுக்கு வந்தது சீனுவும், எல்.கே வும்.. சீனுவுக்கு கால் போட்டதும் (போன் கால் தாங்க) வழக்கம் போல் ஏழெட்டு ரிஙகுக்குப் பின் எடுக்க.. நான் விஷயத்தை சொல்ல..பயபுள்ளையும் என்னை மாதிரியே தலைய சொறிஞ்சுகிட்டு நின்னது.. ஸ்க்ரீன்ஷாட் அனுப்புங்க பார்க்கிறேன்னாரு.. சரின்னு அனுப்பிட்டு, ப்ளாக்கை பார்க்க அங்கே என்னுடைய ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! ங்கிற தலைப்பு என்னைப் பார்த்து ஏளனமாக சிரிக்க, ஆங்கிலத்தில் அவர்கள் அதட்டலாக சொன்னதையெல்லாம் பொறுமையாக செய்து முடித்து "Save" பொத்தானை பெருமையுடன் அமுக்க இம்முறை தவறேதும் சொல்லாமல் ஏற்றுக் கொண்டது.
முதல் முறையாக www.kovaiaavee.com என்னும் முகவரியை அடிக்க ஆச்சர்யம்.. அங்கே நஸ்ரியா ஒரு புன்னகையுடன் என்னை வரவேற்றாள். (அட, Maad Dad பட விமர்சனம் போட்டிருந்தேங்க..) அப்படிக்கா, புது ஊட்டுக்கு வந்தாச்சு.. ஒரு ஐம்பது பேராவது தினம் வந்து ஆவியோட மானத்த காப்பாத்திடுங்க..
வாழ்த்துக்கள்...
ReplyDeleteவழக்கம் போல் முதல் வாழ்த்து சொன்ன DDக்கு நன்றிகள் பல..
Deleteம்.... கலக்குங்க...
ReplyDeleteவேணாங்க.. தனித்தனியாவே போட்டுடறேன்.. ;-)
Deleteஅட பாவி நான் தானே சத்து முன்னாடி சொந்த வீடு வாங்கினன் அதை சரி செய்வது எப்படி என்று தெரியாமல் முறைசுக் கொண்டு இருக்க ஆவி எல்லாம் சொந்த வீட்டுக்கே குடி போயிற்றுதே ! இனி
ReplyDeleteஎனக்கு என்ன மரியாதை www .ambaladiyal .com :))))) அவ்வ்வ்வ்வ்வ்வ்...சரி வந்தாச்சு வாழ்த்துவோம் .ஏலே காப்பி ரீ குடுக்க
மாட்டீகளா ?...
ஆக்கம் எழுதுவதில் அவ்வளவு வேகமா ! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சிறப்பான ஆக்கத்திற்க்குக் கருத்து மழை பொழியட்டும் ஆவி சகோதரா :)
சகோதரன் வீடு உங்க வீடு மாதிரி.. பொறாமையெல்லாம் படப்படாது..
Deleteஅதே மாதிரி உங்க வீட்டுல எப்படி டீ, காப்பி போட்டு குடிப்பீங்களோ, அதே மாதிரி குடிங்க.. அந்நியன் ஆக்கிடாதீங்கோ!!
வாழ்த்துகளுக்கு நன்றி சகோ..
எனக்கு இது குறித்த டீடெயில் வேணும் ஆ.வி....தானாகவே நம் பதிவுகளும், தொடர்பவர்களும் புதுத்தளத்தில் மாறிவிடுகிறார்களா?
ReplyDelete1. முதலில் GoDaddy கிட்டயிருந்து Domain Name வாங்கணும்.. (பின்வரும் சுட்டியை கிளிக்கினால் அந்த ஆபர் கிடைக்கும்.. http://snipurl.com/27gldtq )
Delete2. அந்த GoDaddy வலைதளத்தில் Domain Settings என்று ஒரு Tab இருக்கும். அதனுள் சென்றால் CNAME என்று ஒரு பெயரின் கீழ் சில தகவல்கள் இருக்கும்.. அதில் இரண்டு புதிய CNAME களை Create செய்ய வேண்டும். www மற்றும் ஒன்று (மேலே உள்ள படத்தில் விபரம் உள்ளது.)
3. பிறகு நம்ம பிளாக்கர் செட்டிங்ஸில்> Basic> Publishing Tab க்கு செல்லவும். அங்கே நம்முடைய புதிய URL ஐ (WWW.abc.com) டைப் செய்து SAVE கொடுத்தால் போதும்.. நம்முடைய புதிய முகவரியிலிருந்து இயங்கத் தொடங்கும்..
நீங்க மாற்றும் போது கூப்பிடுங்க.. நான் ஹெல்ப் பண்றேன்..
நம் பதிவுகள் மற்றும் தொடர்பவர்கள் மாறாது. இது கெஜட்டில் நம் பெயரை மாற்றுவது போல.. பெயர் மாறும்.. குணம் மாறாது.. ;-)
புது வீடு பெயர்ச்சிக்கு வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி நண்பா..
Deleteஆவி புடிக்க நா ரெடி ...! அப்டிக்கா நமக்கும் ஈ மெயில தட்டி விடுங்க ஞானும் புது வீட்டுக்கு போயிக்கிறேன் ...!
ReplyDeleteநூற்றயொன்பது -109 ?
புடிங்க.. கீழே இருக்கும் லிங்க் ஐ COPY PASTE செய்யவும்.. ஏதேனும் சந்தேகம் இருந்தால் விழிக்கவும்.. சாரி விளிக்கவும்.. :-)
Deletehttp://snipurl.com/27gldtq
வாழ்த்துக்கள்...எப்போ ட்ரீட் மச்சி.///?
ReplyDeleteட்ரீட் தானே.. சந்தோஷ் பேக்கரிக்கு வா மாப்ளே.. டீயும் தேங்காய் பன்னும் வாங்கித்தர்றேன்.. ;-)
Deleteவாழ்த்துக்கள் கோவை ஆனந்த ராஜா விஜயராகவன்.
ReplyDeleteரொம்ப நன்றிங்க ஸாதிகா.. ஆவின்னே கூப்பிடுங்க.. இப்ப எல்லாரும் அப்படித்தான் கூப்பிடறாங்க.. (எங்க உறவினர்களும் கூட ;-) )
Delete:) ஒரு நல்ல காரியத்தை ஆரம்பித்து இருக்கீங்க.இப்ப போய் ஆவி பூதம்ன்னு கூப்பிட்டுக்கொண்டு அதான்..ஹி..ஹி..
Deleteஸாதிகா, அப்ப நீங்க இந்த பைரவி சீரியல் எல்லாம் பார்க்கறது இல்லேன்னு நினைக்கிறேன்.. ஆவிகள்ளையும் நல்ல ஆவிகள் இருக்கறது.. ஹிஹி..
Deleteஎம்புட்டு சம்பிரதாயம், சடங்குலாம் முடிச்சு புது வீட்டுக்கு வந்திருக்கீக..., ஒரு பார்ட்டி வைக்கப்படாதா?!
ReplyDeleteஉங்களுக்கு இல்லாத பார்ட்டியா அக்கா.. வச்சிட்டா போச்சு.. நீங்க கோவை நேரம் ஜீவா மாதிரி எதாவது விவகாரமாவா கேட்டுடப் போறீங்க?? ;-)
Deleteஇத தா நான் எதிர் பார்த்த.. வாழ்த்துக்கள்..!
ReplyDeleteஓ.. அப்படி.. வாழ்த்துகளுக்கு நன்றி..
Deleteஆவி புகுந்த (புது) வீடு !!! :-)
ReplyDeleteவாழ்த்துகள்...வாழ்த்துகள் !!!
கொஞ்சம் டெர்ரரா வாழ்த்து சொல்றீங்க.. வாழ்த்துகளுக்கு நன்றிங்க..
Deleteபுது வீடு... புது .... புது .... கலக்கரே ஆவி ...
ReplyDeleteமாப்ளே.. பார்த்து.. எல்லாத்தையும் சொல்லிடப் போறே.. புது வீடு மட்டும் தான் மக்களுக்கு தெரியும்.. ;-)
Deleteஎன்னங்க.. இது ?
ReplyDeleteஒரு நாலு மணி நேரமா வந்து நானும் கால் கடுக்க ( சீ, சீ. எனக்குத்
தான் கால் இல்லயே , ) காத்திட்டு இருக்கேன்.
யாருமே என்னை கவனித்து ஒரு காபி ஆவி பறக்க கொடுத்து,
குடிடா கிழவா அப்படின்னு சொல்ல காணேனே ??
எங்கே இருக்கிறேனா >>>
உங்க கண்ணுக்கு தெரியலையா நான்...
நாந்தாங்க..ஆவி. உருவத்திலே
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
www.subbuthatha.blogspot.com
ஐ.. ஐயாம் வெரி ஹேப்பி..
Deleteஎல்லோரும் விஷ் பண்ணினாங்க.. சந்தோஷம்.. ஆனா சுப்பு தாத்தா வீட்டுக்கு வந்ததுல ரொம்ப ரொம்ப சந்தோசம். இணையத் தெருவுல உங்க பின்னூட்டத்தை பார்க்கும் போதே தாத்தா நம்ம வீட்டுக்கு எப்ப வருவார்னு பார்த்திருந்தேன்..
வீட்டுக்கு வந்தவங்களை எல்லாம் வழியனுப்பி வச்சுட்டு வர லேட் ஆயிடுச்சு தாத்தா.. காப்பி மட்டும் கொடுத்து அனுப்பிடுவேனா.. மொத மொத வந்துருக்கீங்க.. ரெண்டு நாள் இருந்து சாப்பிட்டுட்டு தான் போகணும் ;-)
ஆவிக்கே தெரியலைனா ஒரு சாதாரண மனுஷன் எனக்கு எப்படி தெரியும்... ஆவிக்கு கொஞ்சமாது பொது அறிவு வேணாமா...?
ReplyDeleteஏன்யா யோவ் பத்து மணின்றது எனக்கு அதிகாலை, அப்போ கூப்டா ஏழாவது ரின்க்லையாது எடுத்தநேன்னு சந்தோசப்படனும் :-)
புது வீட்டுக்குலா குடி போயிருக்கீங்க, நமக்கு ஸ்பெஷலா எதுவும் கிடயாத ஆவி பாஸ்...
ஹஹஹா. என்னடா பயபுள்ள இன்னும் ரியாக்க்ஷனே இல்லாம இருக்கேன்னு பார்த்தேன்..
Deleteகுடுத்துட்டா போச்சு.. நோக்கு இல்லாமலா சீனு..!