உலகில் உள்ள ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் மனநிலை சரியில்லாதவர்களாகவே இருக்கின்றனர். அது வெளிப்படும் அளவுகளை பொறுத்து அவர்கள் "மனநிலை சரியில்லாதவர்கள்" என்று முத்திரை குத்தப்பட்டு ஓரங்கட்டப்படுவதும், சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப் படுவதும் நடக்கிறது. அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு மனிதனுக்கு, அவனுடைய மகள் எப்படி ஆதரவாய் நின்று வழிநடத்துகிறாள் என்பதே இப்படத்தின் கதை.
சிறு வயதிலேயே தந்தையையும் தாயையும் இழந்துவிட்ட ஒருவனுக்கு ஆதரவாய் ஒரு காதலி வருகிறாள். அவன் சோகங்களை எல்லாம் சுகங்களாய் மாற்றும் அவள் அவன் வாழ்வில் வசந்தத்தை கொண்டு வருகிறாள். ஆனால் அதுவும் அதிக நாள் நிலைத்திருக்கவில்லை. திருமணம் செய்து கொண்ட இருவரும் பிரசவம் முடித்து திரும்பி வரும் வழியில் ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகின்றனர். விபத்தில் மனைவியை இழக்கும் அவன் மனது அதை ஏற்க மறுத்து அவள் அவனுடன் உயிருடன் வாழ்வதாகவே எண்ணி காலம் கழிக்கிறான். அவனுடைய கலப்புக் காதல் திருமணத்தை இரு வீட்டாரும் எதிர்த்த போதும் அவன் நம்பிக்கைகளுக்கு துணையாய் நிற்கும் அவன் நண்பன்.
அவனுடைய மகள் பெரியவளாகி வெளிநாடு சென்று படித்து வந்த போதும் தன் தந்தையின் கற்பனை மனைவியை சிதைந்து விடாமல் பார்த்துக் கொள்கிறாள். இவளுடைய காதலனின் குடும்பத்தின் மூலம் பிரச்சனைகள் வீட்டிற்குள் வருகிறது. ஒரு கட்டத்தில் காதலன் வீட்டார், இவள் தந்தைக்கு மனநிலை சரியில்லை என்றும், அவள் தாயார் இறந்து இருபது வருடங்கள் ஆகிவிட்டது என்றும் உண்மையை அவள் தந்தை முன் கூற, அவன் உணர்ச்சிவயப்பட்டு கோமா நிலைக்கு தள்ளப்படுகிறான். அவன் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பினானா, மகளின் காதல் என்னவாயிற்று என்பதே படத்தின் முடிவு.
படத்தின் கதாநாயகனாக மோகன்லால் நடிக்கவிருந்த இப்படம் சில காரணங்களால் லாலின் நடிப்பில் வெளிவந்திருக்கிறது. இவர் மகளாக நஸ்ரியா நசீம். டெப்யு (DEBUT) மேட்சிலேயே செஞ்சுரி போட்டது போல் அறிமுகமான முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தென்னிந்தியாவுக்கு ஒரு சிறந்த நடிகை அறிமுகமாகி உள்ளதை தெரிவிக்கிறார். தந்தையின் மூளையிலிருந்து தாயின் நினைவுகளை சிகிச்சை மூலம் அகற்ற முயலும் மருத்துவரிடம் பொரிந்து விழுவதாகட்டும், தந்தையிடம் குறும்பு செய்யும் சின்னப் பெண்ணாய் சுற்றி வரும் போதாகட்டும் படு கேஷுவலாக செய்திருக்கிறார். ( நஸ்ரியா எனக்கு பிடிக்கும் என்பதற்காக இவ்வாறு சொல்வதாய் யாரும் நினைக்க வேண்டாம்.)
வழக்கமான மலையாளப் படங்களைப் போல் மெதுவாக செல்லும் திரைக்கதை, மற்றும் எளிதில் ஊகித்து விடக்கூடிய திருப்பங்கள் மைனஸ் என்றாலும், லால், நஸ்ரியா, மேக்னா ராஜ், லாலு அலெக்ஸ் மற்றும் பத்மப் பிரியாவின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது. படம் முழுக்க எல்லா பிரேமிலும் பச்சை நிறத்தை காண முடிகிறது. கண்களுக்கு குளிர்ச்சியை தரும் இந்த யுக்திக்கு இயக்குனர் ரேவதி வர்மா மற்றும் ஓளி ஓவியர் பிரதீப்புக்கும் ஒரு சொட்டு. சென்டிமென்ட் பட விரும்பிகளுக்கு இது ஒரு நல்ல படமாக இருக்கும்.
55 / 100
நீங்கள் சொல்லா விட்டாலும் அப்படித்தான் நினைப்போம்... ஹிஹி... பசுமையான விமர்சனத்திற்கு நன்றி...
ReplyDeleteஹிஹிஹி.. நன்றிங்க
Delete\\\ நஸ்ரியா எனக்கு பிடிக்கும் என்பதற்காக இவ்வாறு சொல்வதாய் யாரும் நினைக்க வேண்டாம்.\\\
ReplyDeleteஅப்படித்தான் நினைப்போம்.
எங்களுக்கு நஸ்ரியாவையும் தெரியும்...
எங்க நண்பர் ஆ.வியையும் தெரியும்ல..
சரி.. சொன்னா நம்ப மாட்டீங்க.. என்ன பண்ணலாம் இவிங்கள நம்ப வைக்க?
Deleteபடிக்கும் போதே படத்தை பார்க்க வேண்டும் போல் உள்ளது...
ReplyDeleteநல்ல படங்க..பாருங்க..
Deleteபிடிச்சத பிடிக்கும்னு பிடிச்சவங்க கிட்ட சொல்றது ஒரு குத்தமாய்யா...? அதனாலயே படத்தைப் பிடிச்சாலும் என்ன தப்புங்கறேன்? (ரஜினி நடிச்ச எத்தனையோ குப்பைகள் ஓடலையா என்ன?) ஹி... ஹி...! மலையாளத் திரைப்படங்களின் இயல்புக்கேற்ற மென்கதையா மனசை வருடும்னு உங்க விமர்சனம் சொல்லுது. அதுக்காகவே அவசியம் பாத்துரணும்...! (நஸ்ரியாவுக்காகப் பாக்க மாட்டியாலேய்? டூப்பா விடுதன்னு சிரிக்குது மனஸ்!)
ReplyDeleteகண்டிப்பா பாருங்க சார். "குஷ்பூ" இட்லி மாதிரி குண்டா இருந்த ஒரு நடிகைக்காகவே(நடிகையின் பெயர் வேண்டாம்) பாண்டியன் படத்த பதினாறு தடவை பார்த்தேனாக்கும் நான்!
Deleteஅருமையான விமர்சனம் ! இன்றிலிருந்து தொடர்கிறேன் !
ReplyDeleteவிமர்சனம் படத்தை பார்க்க தூண்டும் விதத்தில் இருக்கிறது வாழ்த்துக்கள் ஆவி ........மலையாள படங்கள் மனதை வருடும் படங்கள் தான் என்பதில் சந்தேகம் இல்லை
ReplyDelete