இரண்டு வாரம் முன்பு சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற இந்திய அணி தான் ஆடிய எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. அதனால்தானோ என்னவோ மேற்கிந்திய தீவில் மேற்கிந்திய தீவு, இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் நடைபெற்ற இந்த முத்தரப்பு போட்டியில் இந்தியாவின் மீதான எதிர்பார்ப்பு மிக மிக அதிகமாக இருந்தது. தான் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் தோற்று சொதப்பிய இந்திய அணி புள்ளிப் பட்டியலில் கடைசியில் வெளியேறும் அபாயத்தில் இருந்தது, கடைசி இரண்டு போட்டிகளையும் வென்றே ஆகவேண்டிய கட்டாயம் வேறு.
மேற்கிந்திய தீவுடனான மூன்றாவது போட்டியில் வருங்கால கேப்டன் விராட் கோஹ்லியின் அட்டகாசமான சதம் மற்றும் ஷிகார் தவானின் அரை சதமும் கைகொடுக்க அருமையான வெற்றி பெற்றது. நான்காவது போட்டியில் இலங்கையை வெல்ல வேண்டிய கட்டாயம். வருண பகவான் மற்றும் யாருக்கும் இதுவரை விளங்காத டக்வர்த் லூயிஸ் முறை இரண்டும் கைகொடுக்க இலங்கைக்கு எதிராக மிகப் பெரிய வெற்றி பெற்றது. முதலிடத்தில் இருந்த மேற்கிந்திய தீவுகளை போட்டியில் இருந்து வெளியேற்றிவிட்டு இலங்கையும் இந்தியாவும் பைனல்ஸில் நுழைந்தது.
நேற்று வியாழனன்று நடந்த இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கையை பொறுமையாக வழிநடத்திச் சென்ற சங்ககாரா திரிமன்னே ஜோடி ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து கைவிட, கடைசி எட்டு விக்கெட்டுகளை இருபது ரன்களுக்குள்ளாகவே இழந்து இருநூற்றி ஒரு ரன்களைப் பதிவு செய்தது. ரவீந்திர ஜடேஜா நான்கு விக்கட்டுகள் எடுத்தார்.
பின்னர் ஆடவந்த இந்தியாவிற்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டு விக்கட்டுகளை சீக்கிரம் இழந்துவிட்ட போதும் ரோஹித் ஷர்மா பொறுமையாக நின்று அரைசதம் அடித்தார். ரங்கனா ஹீராத்தின் அற்புத சுழலில் விக்கட்டுகள் சரிய ஒரு கட்டத்தில் இந்தியா தத்தளிக்க ஆரம்பித்தது. ஒரு முனையில் தோனி அஹிம்சையை கடைபிடிக்க மறுமுனையில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்து வந்தது.. ஒன்பது விக்கட்டுகளை இழந்த இந்தியாவிற்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது..
மிகவும் கனமான பேட் ஒன்றை தேர்வு செய்த தோனி எரங்கா வீசிய முதல் பந்தை அடிக்க முயல அது பேட்டில் படாமல் வெளியே சென்றது. ஐந்து பந்துகளில் 15 ரன்கள் தேவைப்பட இரண்டாவது பந்தை பலம் கொண்ட மட்டும் மட்டையை சுழற்ற பந்து கூரையின் உச்சிக்கு சென்றது. 9 ரன்கள் தேவை. இப்போது தோனி ஆப் சைடில் போர் அடிக்க இலங்கை வீரர்கள் முகத்தில் கவலை ரேகைகள்.. மூன்று பந்துகளில் 5 ரன்கள் தேவை. தோனி தன் அகன்ற தோளை குலுக்கியபடி பந்தை சிக்சருக்கு அனுப்ப இந்தியா கோப்பையை கைப்பற்றியது. அதிர்ஷ்டம் மட்டுமே தோனியின் வெற்றிக்கு காரணம் என்று சொல்லும் மூடர்கள் இனியாவது திருந்துவார்களா?
சில்...! கூல்..! ஷோல்டரை இறக்குங்க பாஸ்! சொன்னா சொல்லிட்டுப் போறாங்க..! தல தல தான்!
ReplyDeleteதோனிக்கு பெரிய விசிலா போட்டுடுவோம்!
நீங்க சொல்றது கரெக்டுதாங்க.. தோனிக்கு பெரிய விசில்..
Deleteசெம அடி...646 (எதிரணிக்கும்)
ReplyDeleteஆமாங்க.. சூப்பர் மேட்ச்..
Deleteகூல் கேப்டன் தோனிக்கு ஒரு ஓஓஓஓ.
ReplyDeleteஓஓஓஒஓஓஓ..
Deleteவிடிய விடய மேச் பாத்து , பதிவும் போட்ட ஆவிக்கு சூடா ஒரு "ஆ""வின்" "பால்" பார்சேல்...!
ReplyDeleteஆவிக்கே ஆவினா? பார்சல் சொல்றது நல்லதா ஏதாவது சொல்லியிருக்கலாமே ஜீவன்..
Deleteஎன்னவோ தெரியல வர வர கிரிகெட் ,பிடிக்கவேமாட்டேங்குது
ReplyDeleteஎப்படி பிடிக்கும்.. துரை வேற ரூட்ல போற மாதிரி தெரியுதே..
Deleteமேட்ச் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்! தோனி பார்க்க வைப்பார் போலிருக்கிறது! தோனியின் தலைமைப்பண்பு சூப்பர்!
ReplyDeleteஇப்பல்லாம் விறுவிறுப்பா போகுதுங்க..
Deleteluck favors the brave.. Captain cooooool the man with nerves of steel does t tym n tym again fa India..
ReplyDeleteநம்ம தல தோனிக்கு ஓ போடு..
Delete