Tuesday, November 24, 2015

பிரேதம் பார்த்த ஞாபகம்!! (4)

 பகுதி 1    பகுதி 2   பகுதி 3

                   நான் கண்விழித்த போது எனக்கு மேலே மின்விசிறி சுற்றிக் கொண்டிருந்தது. அந்தக் கட்டிலில் இருந்து எழுந்து சோம்பல் முறித்து, அவசர அவசரமாய் குளித்து திரைப்பட விழாவிற்குச் செல்ல ஆயத்தமானேன். மணி எட்டை தாண்டிவிட்டபடியால் காலை உணவைப் புறக்கணித்துவிட்டு நேராக திரைப்படங்கள் திரையிடும் ஐநாக்ஸ் திரையரங்கிற்கு ஓட்டமும் நடையுமாக வந்து சேர்ந்தேன். நான் பார்க்க வேண்டிய திரைப்படத்தின் அரங்கை சரிபார்த்துக் கொண்டு அந்த வரிசையில் வந்து நின்றேன். படம் துவங்க இன்னும் பத்து நிமிடங்கள் இருந்ததால் கையில் வைத்திருந்த ரவி சுப்ரமணியத்தின் "Bankerupt" புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். "ஹெல்லோ " என்ற ஒரு பெண் குரல் கேட்டு புத்தகத்தை கீழ் இறக்கினேன்.

                       என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. அங்கே சங்கமித்ரா நின்று கொண்டிருந்தாள். என்னை நோக்கி கூட்டத்தை விலக்கிக் கொண்டே உள்ளே வந்தாள். இந்த மக்கள் இருக்கிறார்களே, ஒரு பெண் வரிசையில் இல்லாமல் திடீரென்று உள்ளே நுழைந்தால் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். ஆனால் அதே ஒரு ஆண் செய்துவிட்டால் கொலைக் குற்றத்திற்கு ஈடாக சண்டைக்கு வருவார்கள். என்னருகே வந்தவள் என் கண்களை உற்று நோக்கியபடி "குட் மார்னிங்" என்றாள். நான் அவளிடமிருந்து "தேங்க்ஸ்" என்ற சொல்லைத் தான்  எதிர்பார்த்திருந்தேன். "டூ யூ ரியலி வான்ட் டூ வாட்ச் திஸ் ஒன்?" என்றாள். திரைப்படத்தை விடுவதற்கு மனமில்லை என்ற போதும் ஒரு அழகான பெண் இப்படி ஒரு கேள்வி கேட்கும் போது "இல்லை" என்று சொல்வதே ஆணுக்கு அழகு.. நானும் ஆண் வர்க்கத்தின் பெயரைக் காப்பாற்ற வரிசையிலிருந்து விலகி அவளுடன் நடக்க ஆரம்பித்தேன்.

                         அவள் நின்றது ஒரு பீர் ஸ்டாலின் முன்பு. "விச் ஒன் டூ யூ லைக் டு ஹாவ்?  ஸ்ட்ராங் ஆர் லைட்? " என்றவளிடம் வேகமாக தலையசைத்து "சாரி, ஐ டோன்ட் டிரிங்க் பியர்." என்றேன். அவளோ ஒரு கேவலமான பார்வையை வீசி சப்தம் வராமல் "வாட்" என்றாள் தோள்களை குலுக்கி. "ம்ம்ம்.. சின்ன வயசுலயே அம்மா சொல்லியிருக்காங்க, பியர் எல்லாம் குடிக்கக் கூடாதுன்னு, நானும் சத்தியம் செய்திருக்கிறேன்" என்றேன். "வாவ்" என்றபடி அவளுக்கான கிங் பிஷரை தேர்ந்தெடுத்து வாங்கி வந்தாள். பேசிக்கொண்டே அந்த வளாகத்தில் கார் பார்க்கிங்கிற்கு அருகே இருந்த ஒரு அகன்ற மரத்தின் நிழலில் அமர்ந்தோம். இப்போதாவது நேற்று அவளை கொண்டு சேர்த்ததற்கு நன்றி உரைப்பாள் என்று எதிர்பார்த்தேன். "ம்ம்ம் வாட்ஸ் யுவர் நேம்" என்றாள். "ஐயம் கார்த்திக். அண்ட் ஐ நோ யுவர் நேம்"  "ம்ம்ம், உங்க விஷஸ் பார்த்தேன்"
என்ற சொல்லோடு நிறுத்திக் கொண்டாள், ஒருவேளை இவளுடைய ஆங்கில வாத்தியார் இவளுக்கு தேங்க்ஸ் என்ற வார்த்தையை சொல்லித் தர மறந்திருப்பாரோ?

                             "நீங்க மீடியால ஒர்க் பண்றீங்களா?" "வாவ்,  ஹவ் டூ யூ நோ தட்" என்று ஆச்சர்யத்தில் என் விழிகள் விரிந்தது. "ஐ நோ பேஸ் ரீடிங்"   என்று கூறிவிட்டு கலகலவென சிரித்தாள். பின் அந்த ரகசியத்தை அவளே உடைத்தாள் "மீடியா பீப்பிள் க்கு தான் எல்லோ டேக். என்னை மாதிரி ஆட்களுக்கு ப்ளூ, சிம்பிள் "  என்று என் சட்டைக்குள் ஒளிந்திருந்த டேக்கை தொட்டு காண்பித்தாள். பிறகு சில நிமிட மௌனம். ஏதாவது பேச எண்ணி "நேத்து நைட் யூ வேர் அவுட் ஆப் கண்ட்ரோல், நான் தான் ஹோட்டலில் டிராப் பண்ணினேன்" "ஐ நோ" என்று சாதாரணமாக கூறி முடித்துக் கொண்டாள். "ஹேவ் யூ சீன் கோடார்ட் மூவிஸ்" அந்த இயக்குனரின்  பெயரையே அப்போதுதான் கேள்விப் படுகிறேன். இல்லை என்று சொல்ல கூச்சப்பட்டு தலையை இப்படியும் அப்படியும் அசைக்க அவள் புரிந்து கொண்டு "மேன் சச் எ பிரில்லியன்ட் டைரக்டர். ஸ்க்ரீன்ப்ளே இப்படித்தான் இருக்கணும்கிற ரூல்ஸ் எல்லாத்தையும் ஒடச்சவர். டுடே ஆப்டர்நூன் அவரோட ஒரு 3D மூவி கலா அகடமில போடறாங்க. ஆர் யூ கமிங். அனிச்சையாய் ஆமாம் என்று என் தலை பதிலுரைத்தது.

                         "கம் லெட்ஸ் ஹேவ் சம்திங். காலையில ஒண்ணுமே சாப்பிடல" என்றவாறு அருகே இருந்த ஒரு உயர்ரக ரெஸ்டாரெண்டுக்கு அழைத்துச் சென்றாள். கீ தோசா ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்திருந்தோம். அப்போதுதான் அவளை நன்றாக கவனித்தேன். நேற்றைய அணிகலன்கள் முற்றிலுமாய் மாறியிருந்தது. இன்றைய குர்தா டைப் டாப்சுக்கு ஏற்றவாறு கம்மலும் கைகளில் பாசியால் செய்யப்பட்ட பிரெஸ்லெட்டும் அணிந்திருந்தாள். அவளாகவே  பல விஷயங்களை கேட்டாள், கூறினாள். நான் பேசியதை விட அதிகமாக அவள் தான் பேசினாள். உணவை உண்டு முடிப்பதற்குள் பல நாள் பழகிய நட்பு போல் பேச ஆரம்பித்திருந்தாள். எனக்கு மரியாதை தராமல் பேசியது கொஞ்சம் உறுத்தலாய் தோன்றிய போதும் அவள் குரலின் வசீகரம் அதை ஏற்றுக் கொள்ள வைத்தது,

                       அந்த கோடார்ட் மூவி உண்மையிலேயே சிறப்பான 3D படம். 3D  தொழில்நுட்பத்தை இப்படிக் கூட உபயோகப்படுத்த முடியுமா என்று யோசிக்கும் அளவுக்கு சிறப்பாக இருந்தது. அந்தப் படம் என் வாழ்வில் மறக்க முடியாத படமாக மாறிவிட்டிருந்தது. அது நல்ல படம் என்பதால் மட்டுமல்ல அந்த படத்தின் போது அவள் கைகள் என் கைகளோடு எதோ பேசிக் கொண்டே இருந்தது. அவள் தோள்கள் என் தோள்களோடு இணைந்திருந்தன. இவையெல்லாம் வெறும் இணக்கவர்ச்சியாய் தோன்றிய போதும் மனதில் ஒரு இனம் தெரியாத உற்சாகம், ஆனந்தம். படம் முடிந்து வெளியே வருகையில் தான் அது நடந்தது. சாலையை கடக்க முயல்கையில் ஒரு கார் வேகமாக வந்தது. அவளை உரசுவது போல் அருகே வந்தது, நான் வேகமாக செயல்பட்டு அவளை பின்னுக்கு இழுத்துவிட்டேன். என் கைகளில் அந்த கார் லேசாக உரசிச் சென்றதில் நான் தடுமாறி ரோட்டில் விழுந்தேன். சிராய்ப்புகள் ஏற்பட்ட கரத்தை தடவிக் கொண்டே அவளிடம் "ஆர் யூ ஒகே " என்றேன். 'எஸ்.. யூ சேவ்ட் மை லைஃப்" என்றாள். "ஏதோ தெரியாம நடந்த ஆக்சிடென்ட்" என்றேன். "நோ, தட் வாஸ் நாட் ஏன் ஆக்சிடென்ட். அவங்க என்னை கொலை செய்ய தான் வந்தாங்க"


-தொடரும்..

10 comments:

 1. கீ தோசை...? தோசையில எப்டிரா கீ யெல்லாம் போட்டுத் தருவாங்க..? (அவ பேசறதுல ஆங்கிலம் தேவை. நீ எழுதறதுதான.. இதுல தவிர்த்திருக்கலாமே) ஒருவேளை இவளுடைய ஆங்கில வாத்தியார் இவளுக்கு தேங்க்ஸ் என்ற வார்த்தையை சொல்லித் தர மறந்திருப்பாரோ? /// அழகு.

  ReplyDelete
  Replies
  1. மன்னிச்சூ வாத்தியாரே, இதெல்லாம் திருத்திக்கறேன்!

   Delete
 2. இம்முறை லென்த் ஓகே, நடையும் உறுத்தாமல் சரளமாய் கதைய்க் கொண்டு செல்கிறது. இதையே தொடரவும்.

  ReplyDelete
 3. ஆவி! முந்தையதை விட இது ரொம்ப நல்லா இருக்குது ஆவி! நிறைய இடங்களில் ரசிக்க வைத்தன உரையாடல்கள்..வசனம்னு சொல்லணுமோ...ஹ்ஹ்ஹ..இயல்பான வசனங்கள். ஃப்ளேஷ் பேக்கிற்குள் இன்னொரு ஃளாஷ் பேக் இருக்கும் போல....

  ReplyDelete
  Replies
  1. தேங்க்ஸ் சேச்சி.

   Delete
 4. தெரியாத பொண்ணு கூப்டா உடனே படம் பாக்காம போயுடரதா?
  ஹாஹா just kidding
  நல்லா போகுது கதை

  ReplyDelete
  Replies
  1. பொண்ணு மட்டும் இல்ல. யார் கூப்பிட்டாலும் படம் பார்க்க சென்று விடுவான். அதுதான் அந்த கார்த்திக் கதாபாத்திரம்.

   Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails