மீண்டும் 'மீள முடியாத' ஒரு கட்டத்தில் இந்த 'மீள் கவிதை'யை மீட்பதில் சந்தோசம் கொள்கிறேன்..!
தொட்டால் பேசும் ஐ-போன்களும்,
பசி தீர்க்காத 'ஆப்பிள்' லேப்டாப்பும்,
அசத்தும் அர்மானியும் ஆடம்பரமாய் தெரிவதில்லை..
பளபளக்கும் பட்டு சேலைகளும்,
மனம் பறிக்கும் தங்க நகைகளும்,
பனானா ரிபப்ளிக்கும் பகட்டாய் தோன்றவில்லை..
பீட்சா குடிசைகளும், சப்வேக்களும்,
பைவ் ஸ்டார் ஹோட்டல்களும்,
உல்லாசப் பயணங்களும் உயர்குடிக்கு மட்டுமில்லை..
நைக்கியின் விலை காலை கடிக்கவில்லை,
கேமிராக்களின் முன் கற்றை நோட்டுகள் தெரியவில்லை,
ரே-பான்கள் கண்களை உறுத்தவுமில்லை..
பின்வாசலுக்கு பீ.எம்.டபுள்யுவும்,
கோவிலுக்கு செல்ல ஹோண்டாவும்,
அடுத்த வீட்டுக்கு செல்ல அக்யுராவும் அந்நியமாய் தெரியவில்லை..
ஸ்ப்ளிட் ஏசி சூட்டை கிளப்பவில்லை,
குளிருக்கு ஹில்ஸ்டேஷன் போக வேண்டியதில்லை,
சொந்த வீடு வாங்க வாழ்நாள் முழுவதையும் செலவு செய்ய தேவையில்லை..
சொடுக்கிடும் நேரத்தில் சொர்க்கமும் அருகிலே!
சொகுசுக்கு பஞ்சமில்லை.. சந்தோசமும் குறையவில்லை..
இதயத்தை மட்டும் இந்தியாவில் கழற்றி வைத்துவிட்டோம் என்பதை தவிர...
இந்தியாவையும் கழட்டி வைத்துவிட்டோம் இலங்கையையிலும் கழட்டி வைத்துவிட்டோம் ஏன் தமிழையும் விற்று விட்டோம் ..
ReplyDeleteஅருமையான கவிதை ..வாழ்த்துக்கள் :)
யதார்த்தம்
ReplyDelete//பசி தீர்க்காத 'ஆப்பிள்' லேப்டாப்பும்//
ReplyDeleteஅசத்தல்..:)
//பனானா ரிபப்ளிக்கும் பகட்டாய் தோன்றவில்லை//
ஹா ஹா...:)
//நைக்கியின் விலை காலை கடிக்கவில்லை//
செம...:)
//அடுத்த வீட்டுக்கு செல்ல அக்யுராவும் அந்நியமாய் தெரியவில்லை//
இது அநியாயம் ஐ சே...ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்....:)
//சொந்த வீடு வாங்க வாழ்நாள் முழுவதையும் செலவு செய்ய தேவையில்லை//
Can't agree more..:)
//இதயத்தை மட்டும் இந்தியாவில் கழற்றி வைத்துவிட்டோம் என்பதை தவிர//
முந்தின வரி படிக்கற வரை ஒரு கேலியும் சிரிப்பும் இருந்தது மனதில் இந்த வரி வந்தப்ப அது மறைஞ்சு போச்சு. நிதர்சனம் முகத்தில் அறைந்ததனால்... ரெம்ப நல்லா எழுதி இருக்கீங்க ஆனந்த்...வாழ்த்துக்கள்...
ஒவ்வொரு வரியும் ரசிக்க வைத்தது, மீண்டும் மீண்டும் படித்தேன்...இறுதி வரி கொஞ்சம் கலங்க வைத்துவிட்டது.
ReplyDeleteஅசத்தல் + அட்டகாசம். உங்க
உள்ள உணர்வு என்று நினைக்கிறேன்.
superb!!!!!!ஊருக்கு போய் மூன்று வாரங்கள் இதயத்தோடு இருந்துவிட்டு திரும்பி வந்து விடுகிறோம்:(
ReplyDeleteஆனந்த், கவிதை அருமை. சொர்க்கம் எங்குள்ளது என்று தெரிவித்தால் நானும் பார்த்துவிட்டு வந்தர்றேன்.
ReplyDelete// சொந்த வீடு வாங்க வாழ்நாள் முழுவதையும் செலவு செய்ய தேவையில்லை.. //
ReplyDeleteஇதை படிக்கும்போது கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது... ஆனால் நம்பும்படி இல்லை... உண்மைதானா...
உண்மைதான் சுதர்சன்.. வருகைக்கு நன்றி..
ReplyDeleteநன்றி எல்.கே.!!
ReplyDeleteநன்றி புவனா!!
ReplyDeleteவருகைக்கு நன்றி கௌசல்யா.. ஆமாங்க, கொஞ்சம் பீலிங்க்ஸ் பீறிட்டு வந்திடுச்சு..
ReplyDeleteநன்றி ஜானு..
ReplyDeleteநன்றி செந்தில்.. "சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா" கொஞ்ச நாள் ஊர்பக்கம் போயிட்டு வாங்க..
ReplyDelete//இதை படிக்கும்போது கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது... ஆனால் நம்பும்படி இல்லை... உண்மைதானா...
ReplyDelete//
உண்மைதாங்க பிரபா ..
asaththal!!
ReplyDeleteஉங்கள் கவிதை மிகவும் அருமை அண்ணா . பசி தீர்காத லப்டப்ப் போல இன்னும் பல இடங்கள் மிக மிக அருமை . உங்கள் கவிதையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை . ஒரு சிறு சந்தேகம்
ReplyDeleteஉங்கள் சிறு மூளைக்குள் இன்னும் எத்தனை ஏவுகனைகளை பதுக்கி வெச்சிறுக்கீங்க .
Sentimentalla ippidi pottu namma makkal basic sense kooda illaama vaazhraanga. Enna pannradhu
ReplyDelete//சொகுசுக்கு பஞ்சமில்லை.. சந்தோசமும் குறையவில்லை..
ReplyDeleteஇதயத்தை மட்டும் இந்தியாவில் கழற்றி வைத்துவிட்டோம் என்பதை தவிர...
//அருமை ,
அருமையாக கவிதையை செதுக்கி உள்ளீர்கள் சகோ.கடைசிவரிகளில் நெகிழவைத்து விட்டீர்கள்.அயல் நாடு அயல் நாடு என்று தாகமெடுத்து திரிபவர்களுக்கு மத்தியில் உங்கள் தேசப்பற்றும்,பிறந்த மண்ணை நேசித்தலும் பிரமிக்க வைக்கிறது.வாழ்த்துக்கள் சகோ!
ReplyDeleteநன்றி அக்கா..
Deleteஅன்பின் ஆவி - அயலகம் - சில வருத்தங்கள் இருக்கத்தான் செய்யும் - தாயகத்தில் இதயத்தினைக் கழட்டி வைத்து விட்டாலும் அடிக்கடி தாயகம் சென்று வந்தால் சரியாகி விடும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteநன்றி ஐயா.. நான் அங்கே இருந்த போது சில சூழ்நிலைகளின் காரணம் இந்தியாவிற்கு நான்கு வருடங்கள் தொடர்ந்து வர முடியாமல் போனது. அதுபோன்ற சமயங்கள் வேதனையானது..
Deleteரசிக்க வைத்த எதார்த்தம்.
ReplyDeleteநன்றி ஜி
Deleteகடைசி வரியில் இருக்கு உண்மை!
ReplyDeleteஉண்மைதான் சார்.. மேற்சொன்ன எதுவுமே இல்லாவிட்டாலும், நம் மனதுக்குப் பிடித்தவர்களுடன் இந்தியாவில் இருப்பதைப் போல் சந்தோசம் எதுவுமில்லை.
Deleteமிகச்சரி ஆவி
Deleteஇதயம் , நினைவு எல்லாம் அங்குதான்
அருமையாக கொண்டு சென்று கடைசியில் நச் என்று முடித்தது மிக மிக அருமை...
ReplyDeleteஆனால் இந்தியாவில் இதயத்தை யாரிடம் கொடுத்து வைத்தீர்கள் என்பதை சொல்ல மறந்துவிட்டீர்களாஅல்லது மறைத்து விட்டீர்களா?
ஹஹஹா,, அப்புறமா உங்ககிட்ட மட்டும் சொல்றேன் பாஸ்.. :)
Delete
ReplyDeleteசெம்ம!!!!!
ஆவி சார்.!
Thanks Kannan
Deleteஐயோ ஆவி! ரொம்ப அழகியல் கவிதை. ரொம்பவே ரசிச்சோம் வாசித்து வாசித்து. ஜஸ்ட் நௌ....கீதா பல முறை வாசித்தாள். துளசிக்கு ஒரு முறைதான்...ஆனால் மீண்டும் வாசிக்கணும் என்று...
ReplyDeleteஅந்த கடைசி வரிகள் அருமை...
கீதா: அந்தக் கடைசி வரிகள் அருமை..ஆனால் கூடவே, இருக்க வேண்டியவர்கள் இருந்துவிட்டால் இதயமும் கூடவே இருந்து விடுமோ...
அட்டகாசமான கவிதை. அதிலும்"பசி தீர்க்காத 'ஆப்பிள்' லேப்டாப்பும்"" செம!!! வாழ்த்துக்கள் ஆவி!
ReplyDeleteஅருமை..
ReplyDeleteஇதயத்தை மட்டும் இந்தியாவில் கழற்றி வைத்துவிட்டோம் என்பதை தவிர...#வேறு எந்த வரிகளும் இதயம் தொடவில்லை...அருமை
ReplyDeleteநன்றி... :)
Deleteகடைசி வரியில் யதார்த்தம்.... நல்ல கவிதை ஆவி. பாராட்டுகள்.
ReplyDelete