Sunday, November 8, 2015

பிரேதம் பார்த்த ஞாபகம்!! (2)

பகுதி 1

                      டிரைவர் சடன் பிரேக் அடித்ததில் என் கைகளில் இருந்த ஐ-போன் முன்னே சென்று விழுந்தது. ஓரிரு நிமிடங்களில் பஸ்ஸில் இருந்த அனைவரும் வெளியே இறங்கி நின்றனர். பெரிய ஆபத்து இல்லை என்றாலும் பஸ்ஸின் முகப்புக் கண்ணாடி சுக்கு-ஆயிரமாய் உடைந்திருந்தது. டிரைவர் வண்டியின் முன்புறம் சென்று கண்ணாடிச் சில்லுகளை அகற்றிக் கொண்டிருந்தான்.  அவனிடம் ஒவ்வொருவராகச் சென்று நடந்தது என்னவென்று வினவிக் கொண்டிருந்தனர். நானும் கீழிறங்கி அவன் அருகே சென்றேன். அவன் சிறிது கலக்கத்துடன் காணப்பட்டான். வண்டியின் ஓனருக்கு பதில் சொல்லியாக வேண்டுமே. "யாரோ ரெண்டு பேர், பைக்கிலே கிராஸ் பண்ணி போனானுவ. அதுல பின்னாடி உட்கார்ந்திருந்தவன் நம்ம நம்பர் பிளேட்டையே பார்த்துட்டு போனான். அவனுக தான் பண்ணியிருக்கணும், பயபுள்ளைக. " என்ற டிரைவரின் ஆதங்கத்திற்கு ஆதரவாய் சில குரல்கள் "ஆமா இவனுகள நமக்கு தண்ணி குடுக்கச் சொல்லி கவர்மென்ட் போட்ட ஆர்டர்னால தமிழர்கள் யார் வந்தாலும் அடிக்கிறானுவ"

                         இந்த சலசலப்புக்கிடையே டிரைவர் தன் முதலாளியை  செல்பேசி மூலம் துயில் எழுப்ப முயற்சித்துக் கொண்டிருந்தான். நான் மெதுவாக பஸ்ஸின் பின்புறம் வந்தேன். கேரள நாட்டின் ரம்மியமான காற்று இதமாக வீசியது. அது எந்த இடம் என்று ஊகிக்க முடியவில்லை. அப்போது எங்கிருந்து வந்தென்று தெரியாமல் ஒரு பொம்மரேனியன் நாய்க்குட்டி புசுபுசுவென்ற முடியுடன் வெள்ளை நிறத்தில் என்னையே உற்று நோக்கியபடி நின்றிருந்தது. நானும் நீண்ட நேரம் அதன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். சங்குவிற்கு நாய்கள் என்றால் அவ்வளவு பிரியம். எவ்வளவு என்றால் 'நாம புள்ளைகுட்டி பெத்துக்கலைன்னாலும் பரவாயில்ல, நாலு நாய்க்குட்டி வளர்க்கணும்' என்று சொல்லுமளவிற்கு. அட, இன்று என்ன எதைப் பார்த்தாலும் அவள் நினைவாகவே இருக்கிறது என என்னை நானே கடிந்து கொண்டேன். அந்த நாய்க்குட்டி இப்போது எதிர்திசையில் ஓட ஆரம்பித்தது.

                           அதனை பின்தொடர நினைத்து பின் அந்த எண்ணத்தைக் கைவிட்டு மீண்டும் பஸ்ஸில் ஏறினேன். முன் சீட்டில் இப்போது வேறு யாரோ அமர்ந்திருந்ததால் நான் உள்ளே காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தேன். அப்போது என்னைக் கடந்து சென்ற ஒரு பெரியவர் அவருடைய திப்புசுல்தான் காலத்து காலணியால் என் கால்களை மிதித்துவிட்டு கண்டுகொள்ளாமல் சென்றார். நான் உரக்கக் குரலெடுத்து கத்தியது கூட அவருக்கோ அருகிலிருந்த யாருக்குமே கேட்டதாய் தெரியவில்லை.  அசதி அதிகமாக இருந்ததாலும், மதுரை சென்றதும் கண்ணாடியை மாற்றிக் கொள்ளச் சொல்லி ஓனரின் உத்தரவு கிடைத்ததும் பஸ்ஸை டிரைவர் எடுத்ததும் திறந்திருந்த ஒரு சன்னலின் வழி வந்த சுகந்தமான காற்றில் கண்கள் தானாக மூடியது. கண்களை மூடிய மறுவினாடி என் கண்களின் ரெட்டினா முழுவதுமாய் ஆக்கிரமித்தாள் சங்கமித்ரா. அவளை நான் சந்தித்த அந்த தினம் ஃசெபியா டோனில் விழித்திரையில் ஓட ஆரம்பித்தது.

                             பனாஜி நகரமே ஒளிவிளக்கால் அலங்கரிக்கப்பட்டு ஒட்டு மொத்த மக்களும் திருவிழா கொண்டாடுவது போல் சாலையோரம் முழுக்க ஆக்கிரமித்திருந்த கடைகளில் உணவருந்துவதும், வயதிற்கு ஏற்றவாறு கைகளில் ப்ரீஸர்களும், கிங் பிஷர்களோடும் அலைந்து கொண்டிருந்தனர். ஆங்காங்கே நடந்து கொண்டிருந்த இசை நிகழ்ச்சிகளும், கண்கவர் ஒளி வித்தைகளும் வயது வித்தியாசம் இல்லாமல் அதில் கலந்து கொண்டு ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர்.  கோவா மக்கள் மட்டுமல்லாமல் திரும்பிய திசையெங்கும் அமெரிக்கர்களும், ஸ்பெயின், ஆப்பிரிக்கா என பல்வேறுபட்ட நாட்டவர்களும் ஜோடியாக உலவிக் கொண்டிருந்தனர். அங்கே ஆண்கள் செய்யும் செலவுகளும், பெண்களின் அணிந்திருந்த உடைகளும் தாராளமயமாக்கல் கொள்கையைத் தாரக மந்திரமாகக் கொண்டிருந்தது.

                          இத்தனை பரபரப்புக்கும் அங்கே நடந்து கொண்டிருந்த திரைப்பட விழா தான் முக்கிய காரணம். இந்தியாவின் மிக முக்கியமான திரைப்பட விழாவாக அங்கீகாரம் பெற்ற அந்த நிகழ்வுக்கு கலையை ஆத்மார்த்தமாக நேசிக்கும் ஒவ்வொருவரும் வருடம் தவறாது வருவது வழக்கம். கலைஞானியைக்  கண்டு வளர்ந்த ஏகலைவனான நானும் வருடத்தில் பத்து நாட்கள் செலவிடுவது பனாஜியில் தான் என்பது அவ்வளவு ஆச்சர்யமான விஷயம் ஒன்றுமில்லை என்றாலும் அன்று அந்த விழாவிற்கு மக்கள் குழந்தை குட்டிகளோடு வந்திருந்தது ஆச்சர்யத்தை அளித்தது. அங்கே குழுமியிருந்த எல்லா மக்களின் முகத்திலும் சந்தோஷம் வழிந்தோடியது. நான் அமர்ந்திருந்த 'கிங் பிஷர் வில்லேஜ்' கூடாரத்தில் எனக்கு இரண்டு மேசை தள்ளி அமர்ந்திருந்த அந்தப் பெண்ணைத் தவிர.

                          நீல நிற ஜீன்ஸும், சாம்பல் நிறத்தில் கையில்லாத 'ராம்ராஜ்' முண்டா பனியன் போன்ற எதையோ மேலேயும் அணிந்திருந்தாள். அதில் துள்ளித் தெரிந்த அவள் அழகுகளை மற்றவர்கள் பார்த்து ரசிக்கும் காட்சிப் பொருளாய் விட்டிருந்தாள். சம்பிரதாயத்திற்காக கொண்டு வரப்பட்ட ஒரு மேல் சட்ட அவளுடைய இருக்கையின் மேல் வைக்கப் பட்டிருந்தது. அவளுடைய கைப்பை குஃ ச்சியா?  ஃஜாராவா? என்று தெரியவில்லை. நிச்சயம் வெளிநாட்டு இறக்குமதி போல் தெரிந்தது. அதுவும் அவள் மேலாடையைப் போலவே பாதி மூடியும், மூடாமலும் கிடந்தது. அவள் கைகளில் இருந்த கிளாஸில் கிங் பிஷர் பகுதி நிரம்பியிருந்தது. தடாகத்தில் தலை சாய்ந்திருக்கும் தாமரை போல் மேசை மீது அவள் தலை கவிழ்ந்திருந்தது. அவள் கண்களில் அளவுக்கு அதிகமாக அப்பியிருந்த மஸ்காரா மூக்கின் மீது படர்ந்திருந்தது, நிச்சயம் அழுதிருக்கிறாள். அவள் அணிந்திருந்த ஊதா லிப்ஸ்டிக் எல்லை தாண்டி உதட்டின் மேல் விளிம்பில் வழிந்தோடியது அவள் சற்றும் நிதானத்தில் இல்லை என்பதைக் காட்டியது. கண்கள் அரை மயக்க நிலையில்.. வெயிட் வெயிட் என்னைத்தான் பார்த்துக் கொண்டிருந்தது,



                            நான் சற்றும் எதிர்பார்க்காத அந்த வினாடியில் அவள் தடுமாறி எழுந்து நேராக என்னை நோக்கி வந்தாள். நான் அவளை கவனிக்காதது போல் முகத்தை வேறு பக்கம் திருப்பினேன். அவள் எனக்கு அருகே இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தாள். அவள் கால்கள் கிட்டத்தட்ட என் கால்களுக்கு இடையில் இருந்தது. விலக நினைத்து பின்னால் நகர்ந்த என்னைப் பார்த்து ஏளனமாய் சிரித்தாள். பின் அவளும் நெருங்கி வர முயற்சித்தாள். தடுமாறி கீழே விழப் போனவளின் கைகளைப் பிடித்து நிறுத்தினேன். அவளை இருக்கையில் சரியாக அமர்ந்திவிட்டு நானும் அமர்ந்தேன். அவள் விழும்போது என்னையும் அறியாமல் 'பார்த்து' என்று கூறினேன்.

                            "ஓ.. தமிழா? என்று கூறியவாறு முன்னால் விழுந்திருந்த தலைமுடியை பின்னுக்குத் தள்ளினாள். சோம்பல் முறிப்பது போல் பாவனை செய்தாள். ஏற்கனவே தன் இருப்பை உலகிற்குப் பறைசாற்றிக் கொண்டிருந்த அவள் அழகுகள் இன்னமும் கொஞ்சம் வெளிப்பட நான் அவஸ்தையாய் நெளிந்தேன். 'எக்ஸ்க்யுஸ் மீ.. கேன்  யூ ஹெல்ப் மீ? கேன் யூ டிராப் மீ அட் மை ஹோட்டேல்? " என்று குழறியபடி கேட்டாள்.  நான் பதில் கூற எத்தனிக்கையில் அவள் தன் கைப்பையை அங்குமிங்கும் தேடிக் கொண்டிருந்தாள். 'இருங்க' என்றவாறு இரண்டு மேசை தள்ளியிருந்த அவள் கைப்பையையும் அந்த 'உதவாக்கரை' மேல்சட்டையையும் எடுத்து வந்தேன். 'தேங்க்ஸ்' என்றவள், அதனுள்ளே கைவிட்டு இரண்டு சாவிகளை எடுத்து மேசை மீது வைத்தாள். எறிந்தாள் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும்.

                                  ஒன்று ஹோட்டல் ஸ்வைப் கீ போல் இருந்தது. '201' என்று மேலும்  'Marriot' என்று கீழும் எழுதியிருந்தது. அவள் தங்கியிருந்த ஹோட்டலாக இருக்கலாம். மற்றொரு சாவி ஒரு BMW காரின் ரிமோட் கண்ட்ரோல். மீண்டும் அவள் கண்கள் சொருக ஆரம்பிக்க பரந்த மனதுடைய நான் (அவள் அளவிற்கு இல்லாவிட்டாலும்) என் தேசத்திலிருந்து வந்த ஒரு பெண்ணுக்கு உதவி செய்யத் தீர்மானித்தேன்.  இரண்டு சாவிகளையும் எடுத்துக் கொண்டு அவளை என் கைகளால் தூக்கி என் தோளில் சாய்த்தபடி பார்க்கிங்கை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அவள் அங்கங்கள் அங்கங்கே உரசிக் கொண்டிருந்தது ஒரு இனிமையான உணர்வைக் கொடுத்தது, என் வாழ்வில் ஒன்றிரண்டு பெண்களைக் காதலித்திருக்கிறேன் என்ற போதும் அதெல்லாம் ஒரிரு முத்தத்தோடே முடிந்து போயிருக்கின்றன. ஒரு பெண்ணை, அதுவும் இவ்வளவு நெருக்கத்தில், இதுவரை ம்ஹும்..

                                    ரிமோட்டின் அலாரத்தை அழுத்தி அவள் காரின் இருப்பிடத்தைக் கண்டறிந்தேன். அவ்வப்போது அவள் தன்னிலை இழந்து கீழே சரிகையில் அவள் பெண்மையின் மென்மைகள் என்னை இம்சித்துக் கொண்டே வந்தது. காரின் கதவைத் திறந்து முன் சீட்டில் அவளை இருத்தினேன். அவள் கைப்பையையும் மேல்சட்டையையும் பின் இருக்கையில் வைத்துவிட்டு டிரைவர் சீட்டில் அமர்ந்தேன். இதற்கு முன் சில முறை BMW ஒட்டியிருக்கிறேன் என்ற போதும் சர்வ ஜாக்கிரதையுடன் ஒட்ட ஆரம்பித்தேன். அதில் அமர்ந்து செல்கையில் சாலை அவள் கன்னங்கள் போல் மிருதுவாகத் தோன்றியது. முன்பொரு முறை மிராமர் பீச்சுக்கு வந்த போது இந்த ஹோட்டலைத் தொலைவில் பார்த்திருக்கிறேன். ஹோட்டலின் உள்ளே வந்ததும் "Valet" பார்க்கிங் செய்ய ஒரு சிப்பந்தி ஓடிவந்து காரின் அருகே நின்று கொண்டான், நான் இறங்கி சாவியை அவனிடம் கொடுத்து விட்டு அவளையும் அவள் கைப்பையையும் இரு கைகளில் சுமந்தபடி உள்ளே நடந்தேன்.

                                       அங்கே இருந்த பல ஜோடிக் கண்களும் எங்களையே கண்டு கொண்டிருந்ததை நான் கண்டு கொள்ளாமல் சென்றேன். லிப்டில் ஏறி இரண்டாம் தளத்தை தேர்வு செய்து பின் அறை எண்  201 ஐ சிரமப்படாமல் கண்டறிந்து அவளோடு உள்ளே நுழைந்தேன். ஒரு பெரிய குடும்பமே தங்கும் அளவிற்கு பெரிய "ஸ்வீட்"(Suite) ரூம் அது. ஏசியின் குளுமை எல்லா அறைகளிலும் எதிரொலித்தது. ஹாலின் நடுவே தொங்கிய பிரம்மாண்ட விளக்கும், மிகுந்த வேலைப்பாடு மிக்க மேசைகளும், டீப்பாய்களும் நிச்சயம் அந்த ஹோட்டலில் தங்கியிருப்பவர்களின் தரத்தை நொடியில் கூறிவிடும். ஹாலின் பால்கனியில் இருந்து பார்த்தால் மிராமர் கடற்கரையும், கடற்கரைக் காதலர்களையும் காணலாம். ஹாலைக் கடந்ததும் இரண்டு சிறிய படுக்கையறைகளும், ஒரு பெரிய மாஸ்டர் பெட்ரூமும் இருந்தன. அந்த பெரிய படுக்கையில் அவளைக் கிடத்திவிட்டு அவள் பொருட்களை அருகிலிருந்த மேசை மீது வைத்தேன்.

                                         பின் அவள் அருகே சென்று அவளை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு அங்கிருந்து புறப்படத் தயாரானேன். அப்போது தெளியாத உறக்கத்தினூடே சற்று உணர்ந்த அவள் என் கரங்களைப் பற்றி இழுத்தாள். நான் தடுமாறி அவள் மேலே சரிந்தேன். அவளின் அருகாமை என்னை என்னவோ செய்தது. அந்த மெத்தையின் இதமும், அவள் ஸ்பரிசமும் எனக்குள் உறங்கிக் கொண்டிருந்த டெஸ்டெஸ்ட்ரான்களை எழுப்பி விட்டது. தவறெது சரியெது என்று யோசிக்க விடாதபடி  புன்னகையோடு வசீகரித்துக் கொண்டிருந்த அவள் இதழ்கள் என் இளமைக்கு அழைப்பு விடுத்தன. அந்த நேரம் பார்த்து வாசலில் 'காலிங் பெல்' அடிக்கும் ஓசை கேட்டது.


-தொடரும்..


31 comments:

  1. Suite என்றால் ஸ்யூட் என்று தான் வரும். ஸ்வீட் அல்ல... உன் தமிங்கிலத்தைக் கொளுத்த...

    ReplyDelete
    Replies
    1. இல்லை வாத்தியாரே.. ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் இலக்கண வரம்பில் வராமல் உச்சரிப்பார்கள். அதில் ஒன்று தான் இது.. படித்தால் ஸ்யூட் என்று தான் உச்சரிக்கத் தோன்றும்.. பட், அதை ஸ்வீட் (வீ - கொஞ்சம் வீக்காக) என்றுதான் உச்சரிக்க வேண்டும். ஆனாலும் நம்ம இந்திய ஹோட்டல்களில் ஸ்யூட் என்றே பிரயோகிக்கிறார்கள்.. :)

      Delete
  2. முதல் பகுதியில் ஆரம்பித்த முதல் கியர் இப்போ கொஞ்சம் வேகமடுத்திருக்கு. அடுத்து டாப் கியருக்குச் சென்றுவிடும் போலத் தெரிகிறது- ரை ரைய்ட்...

    ReplyDelete
    Replies
    1. ஓ.. வாத்தியாரே சொல்லிட்டாரு.. அப்ப ரை.. ரை...

      Delete
  3. ஆஹா நல்லநடை...

    ReplyDelete
  4. தலைவரே கதையின் நகர்வு யூகிக்க முடியவில்லை (சில விசயங்களை தவிர்த்து) அதற்கு வாழ்த்துக்கள் ... மற்ற படி முதல் பகுதி அளவிற்கு இரண்டாம் பகுதியில் சுவாரசியம் குறைவு தான்.. உண்மையை கூற வேண்டுமெனில் சுஜாதா கதையை படிக்கிற உணர்வு நான்காவது பத்தியிலேயே துவங்கி விட்டது ... அவரின் பாதிப்பு நிறைய தெரிகிறது ... இன்னும் கொஞ்சம் கவனம் தேவை என்பது என்னோட தனிப்பட்ட கருத்து ... தொடருங்கள் முடிவுக்காக காத்திருக்கிறேன் ...

    ReplyDelete
    Replies
    1. தலைவர் சுஜாதாவின் ஸ்டைல் வருவது பெருமை தானே.. ஆனாலும் தனித்துவத்துடன் எழுதச் சொல்கிறீர்கள் என்று புரிகிறது.. முயற்சிக்கிறேன்..

      Delete
    2. அதில் என்ன பெருமை?

      Delete
  5. திடீரென்று எங்கேயோ வந்திருக்கிறது. தொடர்கிறேன். பஸ்ஸிலிருந்து இறங்கியதுமே சங்குவை எதிர்பார்த்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. சங்கு வந்ததை நீங்க கவனிக்க மறந்துட்டீங்கன்னு நினைக்கிறேன்.. ஹஹஹா

      Delete
  6. //அந்த நேரம் பார்த்து வாசலில் 'காலிங் பெல்' அடிக்கும் ஓசை கேட்டது.//

    ஹையா...
    ஐயா நல்லா மாட்டிக்கிட்டா(டீ)ரா?

    ReplyDelete
    Replies
    1. தெரியலையே சார்!! பார்ப்போம்..

      Delete
  7. டெஸ்டெஸ்ட்ரான்களை//

    அது டெரஸ்ற்றான் . டெஸ் டெஸ்ட் ரான் இல்லை.

    இருக்கட்டும்.

    ஹி ....ஹி ......

    காலிங் பெல் சத்தத்திலே எழுந்தது என்ன ஆச்சு ???



    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. தீபாவளி வாழ்த்துக்கள்.

      subbu thatha
      www.vazhvuneri.blogspot.com
      www.subbuthathacomments.blogspot.com

      Delete
    2. testestrone -, திருத்திக் கொள்கிறேன் தாத்தா..

      Delete
    3. உங்களுக்கும் பாட்டிக்கும் என் தீபாவளி வாழ்த்துகள்!

      Delete
  8. Replies
    1. Venkat? எனிவே நன்றிகள்..

      Delete
  9. ஆவி! நல்லாருக்கு...நீங்க பஸ்ஸவிட்டு இறங்கியதுமே சங்குவை எதிர்பார்த்தேன். அந்த பொமரேனியன் வரும்போது சங்கு வோ வந்து உங்கள இழுக்குதோனு..அதுவும் அது எதிர்ப்புறம் ஓடியதும் நீங்களும் ஒருவேளை சங்குவை நினைச்சுப் பின் தொடர்வீர்களோனு நினைச்சுக் கொஞ்சம் த்ரில் எதிர்ப்பார்த்தேன் என்னடானா நீங்க அப்படியே ஃப்ளாஷ் பேக்கில் இழுக்கப்பட்டுட்டீங்க..

    சுஜாதா உங்கள் உள்ளிருந்து எட்டிப்பார்க்கறாமாதிரி இருக்கு...சில டெக்னிக்கல் வேர்ட்ஸ் + வர்ணனைகள், விவரிப்புகள்....

    த்ரில்னு ஆரம்பிச்சு, இப்ப வேற மேட்டர்ல வந்து நிக்குது...எங்க போகப் போகுதுனு தெரியல..ஸோ எப்படிப் பயணிக்கப் போறீங்கனு ...காலிங்க் பெல் வேற க்ரெக்டான சமயம்...யாரு டோர் பக்கம்??? ஆவல்..வெயிட்டிங்க் ஃபார் யுவர் நெக்ஸ்ட் ப்ளாக்...

    ReplyDelete
    Replies
    1. சுஜாதா உங்கள் உள்ளிருந்து எட்டிப்பார்க்கறாமாதிரி இருக்கு...சில டெக்னிக்கல் வேர்ட்ஸ் + வர்ணனைகள், விவரிப்புகள்....
      // நன்றி ஹை

      Delete
  10. பஸ்ஸில் இருந்து ஹோட்டலுக்கு வந்துவிட்டது கதை! அடுத்து,,, ஆவலுடன் தொடர்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. தொடருங்கள்.. தொடருங்கள்

      Delete
  11. இன்னாய்யா பண்ணிக்கிட்டு இருக்கிறே..
    காலிங் பெல் அடிச்சு எம்புட்டு நேரமாச்சு...

    சுப்பு தாத்தா தான்.

    எங்கே தாத்தா இவ்வளவு தூரம் ? என்றேன்.

    ரொம்ப தர்ம சங்கடமான சூழ்நிலைதான். ஒத்துக்கறேன். இருந்தாலும்,
    பேரப்புள்ளைக்கு சொல்லிட்டு போலாம்னு வந்தேன்.

    என்ன சார் ? என்றேன். அவள் லேசா நெளிந்தாள்.

    தீபாவளி வாழ்த்துக்கள் என்றார் சுப்பு தாத்தா

    சொல்லிவிட்டு , தாப்பா போட்டுக்க, எல்லாத்துக்கும் என்று சொல்லிவிட்டு
    சென்றார்.

    கதவை போல்ட் போட்டுவிட்டு திரும்பினேன்.

    அவள் அங்கு இல்லை.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. தாத்தா நன்றி.. தீபாவளி வாழ்த்துகள் மீண்டும்!!

      Delete
  12. பரபரப்புடன் தொடர்கிறேன்.....

    உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. முதல் பகுதியில் இருந்த த்ரில் இல்லையே..பொமரேனியன் எதிர்திசையில் ஓடியதும் நீங்களும் எதிர்திசையில் ஓடிவிட்டீர்களா? :)
    பாத்து, துப்பாக்கியோட யாரோ நிக்கப் போறாங்க ... :)

    ReplyDelete
    Replies
    1. //முதல் பகுதியில் இருந்த த்ரில் இல்லையே../// அப்படியா? ஸ்க்ரீன் ப்ளே வீக் ஆயிடுச்சோ?

      Delete
  14. தொடர்கின்றேன்.

    ReplyDelete
  15. வர்ணனைகள் ரசிக்க வைக்கின்றன. முதல் பகுதியின் த்ரில் இதுல கம்மியா இருக்கு அதையும் கவனித்து கொள்ளுங்கள்

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...