Friday, February 21, 2014

ஆவி டாக்கீஸ் - பிரம்மன்


இன்ட்ரோ  
                          இயக்குனராய் தன் பணியை செவ்வனே செய்துகொண்டிருந்த சசிகுமாரை மனதார நேசித்தவன் நான். அவர் நடித்த குட்டிப்புலி மற்றும் இந்தப் படம் அவர் மீது வைத்திருந்த மானாவாரியான மரியாதையை குழி தோண்டி புதைக்கும்படி செய்துவிட்டது. முதல் பத்து நிமிடத்திலேயே படம் மொக்கை போடத் துவங்க படத்திற்கு எப்பவும் போல லேட்டாக வந்த ஒருவன் என் அருகில் அமர்ந்து கதை என்ன சார் என்ற போது ஒட்டுமொத்த கடுப்பையும் சேர்த்து அவரிடம் "அதுக்காக தான் சார் வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன்" என்றேன்.
       


கதை         
                               சந்தானம் மட்டும் இருந்தால் போதும் என்ற முடிவோடு ஒரு மொக்கை கதையை தயாரிப்பாளரிடம் சொல்லி ஒக்கே செய்த ஒரு எழுத்தாளன் நண்பன் என்ற ஒரே காரணத்திற்காக அந்த மொக்கை கதையை படமாக எடுக்க ஒரு இயக்குனரிடம் கொடுக்க அவர் "தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத" அந்த கதையை படமாய் எடுத்து வெற்றி பெறுகிறார். இது திரையில், ஆனால் நிஜத்தில் தமிழ் ரசிகர்கள் கொஞ்சம் உஷாரானவர்கள் என்பதை இயக்குனர் சாக்ரடீஸ் உணரவில்லை போலும்.
                                                                                                                                            ஆக்க்ஷன் 
                            நாயகன் சசிகுமார் "நண்பன்னா" என்று ஆரம்பித்து பேசும் பஞ்ச் டயலாக்குகள் ஆகட்டும் , ரோமென்ஸ் என்ற பெயரில் ரசிகர்களை கும்பிபாகம் செய்வதாகட்டும் குட்டிப்புலி படத்தில் விட்டதை தொடர்கிறார். மனிதர் நடனத்தில் "மிர்ச்சி" சிவாவுக்கும், 'தல' அஜித்துக்கும் ஹெவி காம்பிடேஷன் கொடுக்கிறார்.  கீழே விழத் தயாராய் இருக்கும் பஸ்ஸில் ஒரு கண்டக்டர் வந்து பிங்கோ யமிட்டோஸ் கொடுப்பாரே, அந்த வேடம் தான் சந்தானத்துக்கு. நாம் மொக்கை காட்சிகளால் தளர்வடையும் நேரத்தில் எல்லாம் ஒன் லைன் காமெடி எனும் தயிர்வடை கொடுத்து செல்கிறார்.

                            படத்தின் ஒரே ஆறுதல் ஹீரோயின் லாவண்யா. கன்னத்தில் குழி விழ சிரிக்கும் அழகு முகம், கோபம், ரோமென்ஸ், பீலிங்க்ஸ் என
எல்லாவற்றிலும் நன்றாக செய்கிறார். வேறு ஏதாவது படத்தில் அறிமுகமாகி இருந்தால் இவர் சோபித்திருப்பாரோ? இரண்டாம் பாதியில் கோடம்பாக்க அசிஸ்டன்ட் டைரக்டரை கண் முன் நிறுத்துகிறார் சூரி. அளவான நடிப்பு. நண்பனாய் வரும் நவீன் ஒரு ரவுண்ட் வருவதற்கான அறிகுறி தெரிகிறது. ஜெயப்ரகாஷ் நிறைவான நடிப்பு. தமிழ் மற்றும் மலையாளத்தில் சில நல்ல படங்களில் நடித்த பத்மப்பிரியா இதுபோன்ற ஒற்றை கமர்ஷியல் பாடலுக்கு ஆடுவது ரசிக்கும்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்ள மனம் ஒப்பவில்லை.


இசை-இயக்கம்
                                 DSP இசை சுமார்.. ஒன்றிரண்டு பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. அறிமுக இயக்குனர் சாக்ரடீஸ் அடுத்த படத்தில் தொய்வின்றி கதை சொல்லும் உத்தியை கடைப்பிடித்தால் மட்டுமே கோலிவுட்டில் தேற முடியும்.

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                 கொஞ்சம் கிளிஷே நிறைந்த காட்சி என்றாலும் அந்த கிளைமாக்ஸ் காட்சி நன்றாக இருந்தது. சந்தானத்தின் குபீர் சிரிப்பு வெடிகள் அசத்தல். படத்தின் ஆரம்பத்தில் வரும் "ஓடு ஓடு" என்னும் குறியீடு நிறைந்த பாடலை படம் முடியும் போது மீண்டும் கேட்டு புரிந்து கொண்டு ரசிகர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக  அரங்கை விட்டு தெறித்து ஓடிய காட்சி.

                  Aavee's Comments - Cud've been a "Fun"tastic muvee.

22 comments:

 1. விமர்சனங்கள் பரவாயில்லை என்று வருகிறதே...

  ReplyDelete
  Replies
  1. யாரோ தப்பா சொல்லியிருக்காங்க பாஸு..

   Delete
 2. பிரம்பால பிரம்மன் விளாசி, அனுபவிச்சதை... எழுதீட்டீங்க!

  ReplyDelete
  Replies
  1. அழுதுகிட்டே எழுதிட்டேன் சார்!!

   Delete
 3. Replies
  1. வருகைக்கு நன்றி சார்..

   Delete
 4. சொல்றதைப் பார்த்தால் விரைவில் இந்தியத் தொலைக்காட்சியில் வந்து விடும் போலிருக்கே...!

  ReplyDelete
 5. பாத்துட்டீங்களா....
  படுத்திட்டாங்களோ...!

  //என் அருகில் அமர்ந்து கதை என்ன சார் என்ற போது ஒட்டுமொத்த கடுப்பையும் சேர்த்து அவரிடம் "அதுக்காக தான் சார் வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன்" என்றேன். //

  இது செம குத்து! :)))))))

  ReplyDelete
 6. //என் அருகில் அமர்ந்து கதை என்ன சார் என்ற போது ஒட்டுமொத்த கடுப்பையும் சேர்த்து அவரிடம் "அதுக்காக தான் சார் வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன்" என்றேன். //

  சூப்பர் ஆவி.

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க பாஸ்.. உங்க விமர்சனம் பார்த்துதான் படம் பார்க்க போனேன்.. கொஞ்சம் நல்லாயிருந்தா போதும்ங்கிற மைன்ட்செட்டோட போயே இந்த நிலைமை.. :(

   Delete
 7. நீங்கள் பார்த்து நொந்த பின் நானும் பார்க்கணுமா என்று ஜோசிக்கின்றேன்.

  ReplyDelete
  Replies
  1. ஸ்கிப் பண்ணிடுங்க பாஸு.. அடுத்த வாரம் ஒரு நல்ல படம் வருது..

   Delete
 8. So மொக்கை! ஆனா இந்தப் படம் எல்லாம் எங்க ஊருக்கு வருமானு சந்தேகம்தான்...அதனால தப்பிச்சோம்.....

  ReplyDelete
 9. விமர்சனத்துக்கு நன்றி,ஆ.விஜயராகவன்!///நமக்குன்னு நூத்துக் கணக்கில கட்சிங்க இருக்குது.அப்புடியான நாட்டில நாம வாழுறோம்!நாமெல்லாம் யாரு?(ஆமா,யாரு?)

  ReplyDelete
  Replies
  1. இதுக்குத்தான் ஊருக்குள்ள ஒரு யோகராசா வேணும்கிறது.. :)

   Delete
 10. தான் கெட்டாலும் பர்வால்ல... மக்கள உசார் பண்ணிக்கனும்னு நென்ச்ச பாத்தியா... அங்கன நிக்கிற வாத்யாரே...!

  அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

  ReplyDelete
  Replies
  1. இன்னா 'வாத்தியாரே', ரொம்ப லேட்டு இந்த முறை?

   Delete
 11. விமர்சனத்திற்கு நன்றி.......

  பார்க்கவும் முடியாது இங்கே!

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails