Sunday, January 19, 2014

பீமனும் சோனி எரிக்சனும்!

                           எனக்கும், மொபைல் போன்களுக்கும் இடையேயான காதல் பற்றி எனக்கு நெருக்கமானவர்கள் அனைவரும் அறிந்திருப்பார்கள். சோனி எரிக்ஸன் W810i மியுசிக் பிளேயர் மொபைல் ஒன்றை வாங்கி இரண்டு மாதங்கள் விடாது ஹெட்போனும் காதுமாக அலைந்து கொண்டிருந்த காலம் அது. ஸ்டீவின் அரிய கண்டுபிடிப்பான ஆப்பிளை ருசிக்க சரியான நேரம் பார்த்துக் காத்திருந்தேன்.அமெரிக்காவை பொறுத்தவரை வருடத்திற்கு ஒரு முறை செல்போன் கம்பெனியின் போஸ்ட் பெய்டு காண்ட்ராக்டை நீட்டிக்கும் சமயம் புதிய மொபைல்களை இலவசமாக அல்லது மலிவு விலைக்கு பெறலாம். இன்னும் இரண்டு மாதத்தில் பழைய காண்ட்ராக்ட் காலாவதி ஆவதை உணர்ந்த போதும் கைக்கு அடக்கமான இந்த சோனி மிகவும் பிடித்துப் போனதால் ஆப்பிள் போனை வாங்கும் முடிவை தள்ளிப் போட்டிருந்தேன்.




                            ஒரு வியாழக் கிழமை மாலை வழக்கம் போல் அந்த வாரம் வெளியாகியிருந்த "பீமா" படத்தின் ப்ரிவ்யு ஷோ பார்க்க கிளம்பினேன். வழக்கமாக நாங்கள் பார்க்கும் பிக் சினிமாஸ் திரையரங்கு அல்லாமல் சிகாகோவில் உள்ள வேறொரு புதிய அரங்கில் திரையிட்டிருந்தார்கள். அதன் அட்ரஸை மட்டும் குறித்துக் கொண்டு என்னுடைய கார்மின் நேவிகேட்டரில் (வழிகாட்டி) உள்ளீடு செய்யுமாறு நண்பனிடம் கொடுத்துவிட்டு டிக்கட்டின் பிரிண்ட் அவுட்டையும் வீட்டு சாவியையும் எடுத்துக் கொண்டு கதவை இழுத்து சாத்தினேன்.. ஒருமுறை சரியாக பூட்டியிருக்கிறதா என பரிசோதித்துவிட்டு காருக்கு வந்தோம். எப்போதும் காரில் ஏறுவதற்கு முன்பு ஒரு முறை எல்லாம் பர்ஸ், போன் மற்றும் கார் சாவி இருக்கிறதா  என்று உறுதி செய்து கொண்டு ஏறுவது வழக்கம்.அன்றும் தொட்டுப் பார்த்து விட்டு கார் சாவியை மட்டும் கையில் எடுத்து வண்டியை ஸ்டார்ட் செய்தேன்..

                            ஷோ ஆரம்பிக்க குறைவான நேரமே இருந்ததால் கொஞ்சம் வண்டியை அடித்து ஓட்டினேன். பாடல்கள் எல்லாம் சூப்பர்ஹிட் என்பதாலும், என்னுடைய அப்போதைய பேவரைட் த்ரிஷா நடித்திருந்த காரணத்தாலும் முதல் காட்சியிலிருந்து பார்க்க வேண்டும் என்கிற பரபரப்பு வேறு. ஜனவரி மாத பனிப் படலத்தில் சறுக்கியபடியே தியேட்டரை வந்தடைந்தோம்.. படம் துவங்க ஐந்து நிமிடமே இருந்த காரணத்தால் அவசர அவசரமாக உள்ளே நுழைந்தோம்.. டிக்கட்டின் பிரிண்ட் அவுட்டை பர்ஸ் வைத்திருந்த பாக்கெட்டில் வைத்திருந்த காரணத்தால் பர்ஸை முதலில் எடுத்து கவுண்ட்டரின் மேல் வைத்துவிட்டு பின் பிரிண்ட் அவுட்டை எடுத்து கொடுத்து டிக்கட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்று அமர்ந்தோம்.. நல்லவேளை அப்போதுதான் படத்தின் சர்டிபிகேட் காண்பித்துக் கொண்டிருந்தார்கள்.



                            படம் துவங்கி "ரகசிய கனவுகள் ஜல் ஜல்" என்றதும் மெய்மறந்து அவ்வளவு நேரம் இருந்த பரபரப்பும் அடங்கி அமைதியாக பார்த்தேன். இடைவேளையின் போது வெளியே வந்து இருவருக்கும் கூல்ட்ரிங்க்ஸ் ஆர்டர் செய்துவிட்டு படத்தை பற்றி நண்பர்களுக்கு சொல்லலாம் என்று போனை தேடிய போது கிடைக்கவில்லை. சட்டை பேன்ட் பாக்கெட்டுகளில் தேடிப் பார்த்து கிடைக்கததால் குளிர்பானத்தை வாங்கிக் கொண்டு உள்ளே வந்து நாங்கள் அமர்ந்திருந்த சீட்டின் பின்புறம், இடுக்குகளில் தேடிப்பார்த்து கிடைக்காமல் போகவே, "காரில் விட்டிருப்பேனா" என்று நண்பனிடம் கேட்க, "இல்லடா, நீ டிக்கட் வாங்கும் போது பர்ஸ், போன் எடுத்து எப்பவும் போல கவுண்ட்டர் மேல வச்சியே ஞாபகம் இருக்கா? போனை எடுக்க மறந்திருப்பே!" என்றான்.. அவன் சொன்னதும் தான் எனக்கு நினைவுக்கு வந்தது.. உடனே ஓடிப்போய் கவுண்ட்டரில் பார்த்தேன்.. அதே ஆள் நின்று குளிர்பானம் விநியோகம் செய்து கொண்டிருந்தான்.

                           என் கண்கள் அவன் மேசையை துழாவ அங்கே என் சோனியை பார்த்துவிட்டேன். ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டு கூட்டம் கலைய காத்திருந்தேன்.  சற்று நேரத்தில் படம் தொடங்க எல்லோரும் உள்ளே சென்றனர். கடைசி ஆளும் சென்று விட நான் கவுண்டரை நெருங்கி அந்த நபரைப் பார்த்து "அது, சோனி எரிக்ஸன்.." என்று இழுத்தேன். அவன் அந்த மொபைலை எடுத்து "ஆமாங்க, மியுசிக் ப்ளேயரோட வந்திருக்கும் புது மாடல்" என்று கூற, "ஆமாங்க, வாங்கி ரெண்டு மாசம் தான் ஆச்சு, ப்ரீ-ஆர்டர்  பண்ணி வாங்கினேன். " என்றதும் அவன் என்னை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு "நானும் ப்ரீ-ஆர்டர் பண்ணிதான் வாங்கினேங்க" என்றான். எனக்கோ பகீரென்றது, "அது உங்க போனா, என் சோனி எரிக்ஸன் போனை இந்த கவுண்டர் மேல வச்சிட்டு போயிட்டேன்" என்றேன். "சாரி, நான் அதை பாக்கலே, என்று அவன் போனை என் கைகளில் தராமல் எனக்கு டிஸ்ப்ளே தெரியுமாறு காண்பித்தான். அதில் அவன் அப்போது நின்று கொண்டிருந்த இடத்தின் பின்புலத்தோடு அவன் புகைப்படம் இருந்தது.

                         நான் வருத்ததோடு உள்ளே சென்று நண்பனிடம் கூற, உடனே என்னையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தான். இப்போது கவுண்ட்டரில் அவன் இல்லை. அங்கிருந்த வேறொருவரிடம் "சார் இப்ப இங்க இருந்தவரு எங்கே?" என்றேன். "அவருக்கு உடம்பு சரியில்லைன்னு வீட்டுக்கு கிளம்பிட்டாரு" என்றார். நண்பன் உடனே "மச்சி, அவந்தாண்டா போனை எடுத்திருக்கான்.. நீ போனை வாங்கி கால் பண்ணி பாத்திருக்கணும்." என்றான். நான் என்னை நானே நொந்து கொள்ள "சரி விடுடா, ஏமாத்தணும்னு நினைச்சவன் கண்டிப்பா உன் சிம் கார்டையும் மாத்தி இருப்பான், விடுடா பீல் பண்ணாதே. எனிவே நீ ரெண்டு மாசத்துல ஐ-போன் வாங்கணும்னு சொல்லிட்டு இருந்த தானே.. விடுடா" என்று கூறி என்னை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான்..

                        அதற்கு பிறகு படத்தில் மனம் லயிக்கவில்லை. த்ரிஷாவும் வெறுப்பாக தோன்றினாள். அந்த சோனி எரிக்ஸன் மேல் எனக்கு உண்டான காதல் எனை படம் பார்க்க விடாமல் இம்சித்தது. படம் முடிந்ததும் டின்னர் செல்வதாக போட்டிருந்த பிளானை கேன்சல் செய்துவிட்டு நண்பனை அவன் வீட்டில் விட்டுவிட்டு என் வீட்டை அடைந்தேன். வழியெங்கும் சோனி எரிக்ஸன் கண்ணுக்குள் மின்னி மறைந்தது.. இவ்வளவு எளிதாக ஒருவனிடம் ஏமாந்து விட்டோமே என்ற வருத்தம் வேறு. கைக்கு எட்டிய போனை வாங்கிப் பார்க்காமல் விட்டுவிட்டோமே என்ற ஆதங்கமும் மனதை பிசைய வருத்தத்துடன் கதவைத் திறக்க டேபிளின் மேல் ஒய்யாரமாய் அமர்ந்திருந்தது அந்த "மெல்லிசை மன்னன்"!!!


                                                  *****************

32 comments:

  1. வணக்கம்

    (((மச்சி, அவந்தாண்டா போனை எடுத்திருக்கான்.. )))
    பொருளை இழந்தவனுக்கு பல சிந்தனை பொருளை எடுத்தவனுக்கு ஒரு சிந்தனை..
    என்ன செய்வது ....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன்.. முதல் வருகைக்கும், கருத்துக்கும்..

      Delete
  2. அதானே பார்த்தேன்... கவுண்டர் ஆளுடன் "பீமா" ஆகவில்லை...

    அப்பாடா...! முடிவில் சுபம்...!

    ReplyDelete
    Replies
    1. அச்சோ, என் உருவத்த பார்த்து தப்பு கணக்கு போட்டுட்டீங்க.. நாமெல்லாம் டம்மி பீஸு.. :)

      Delete
  3. டேபிளின் மேல் ஒய்யாரமாய் அமர்ந்திருந்தது அந்த "மெல்லிசை மன்னன்"!!! ரொம்ப சந்தோஷம் கொடுத்திருப்பார்....!

    ReplyDelete
    Replies
    1. ஆமா அம்மா.. ரொம்ப சந்தோஷப்பட்டேன்.. :)

      Delete
  4. அடடே அற்புதமான மனதை நெகிழ்ச்சி அடையச் செய்யும் சிறுகதை

    நீதி : தன் மேல் தவறை வைத்து விட்டு பிறரை சந்தேகப் படாதே...

    ( இதெல்லாம் இப்ப்போ நடந்திருந்தா சங்கம் கூடி கும்மி அடித்திருக்கும் என்பதை மிகவும் தாழ்மையுடனும் வட போச்சே என்பதால் வருத்ததுடனும் தெரிவித்துக் கொள்கிறேன் :-)

    ReplyDelete
    Replies
    1. நெகிழ்ச்சி யா.. சில விஷயங்கள் அந்த சமயத்தில் அளவு கடந்த மன வருத்தத்தை தரும்.. கொஞ்ச நாள் போனா அத நினைச்சு சிரிப்பு தான் வரும்.. இதுவும் அது மாதிரி தான்..

      (இப்ப இப்படி ஏதாவது நடந்தா சங்கத்தக்கு சொல்லி அனுப்புவமா என்ன?)

      Delete
    2. யோவ் நான் சிரிச்சிகிட்டே காமெடியா ஒரு கமெண்ட் போட்டா.. அது ன்னா சிரிக்காம சீரியஸா கமெண்ட் போடுறது :-)

      Delete
    3. ஹஹஹா.. உடனே கலாய்க்க எதுவும் கிடைக்கல.. அதான்!! அவ்வ்வ்வ்..

      Delete
  5. சோனியில் வாக்மேன் சீரிஸ் என்று வரிசையாக பல மாடல்கள் வந்திருந்தன... அனைத்தும் பாடல்கள் கேட்பதற்கு அருமையாக இருக்கும்... செம அனுபவம்...

    ReplyDelete
    Replies
    1. இதுதான் அதற்கெல்லாம் முன்னோடி..

      Delete
  6. நல்ல
    வேளை !!

    உன்னைப் பார்த்தேன்.
    என் செல்லை மறந்தேன்.

    என்று த்ரிஷா வீட்டு வாசலில்
    நீங்கள்

    அந்த டான்ஸ் ஆடியவில்லை.

    சுப்பு தாத்தா.

    அது சரி. புத்தகம் வெளியிடுவது என்று?
    த்ரிஷா அன்னிக்கு வராங்களா?
    இல்லை நஸ்ரியாவா ?

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. தாத்தா..நான் அப்படியெல்லாம் பண்ணலை..

      புத்தக வெளியீடு பிப் 10 மாலை 6 மணிக்கு.. இடம் விரைவில் சொல்கிறேன்.. ஒரு சின்ன உதவி.. உங்க நம்பரை முகநூல் உள்டப்பியில் சொல்லவும்..

      Delete
    2. உங்க நம்பரை அப்படின்னா ?
      எந்த நம்பர் ?

      எங்க வீட்டுலே நான் இரண்டாம் நம்பர்.
      திருச்சிலே எங்க ஊடு 103 நம்பர்.
      காலேஜிலே என் நம்பர் 803
      தஞ்சாவூர் லே 73 வூட்டு நம்பர்.
      அலுவலகதுலெ என் நம்பர் 777
      பென்சனர் நம்பர் 924

      ஒ என் செல் நம்பரை கேட்கிறீகளா ?



      Idli Hot Dosa oothappam dull
      Fry Anand fully food Grand

      subbu thatha..

      Delete
    3. ஹஹஹா.. தாத்தா விழுந்து விழுந்து சிரித்தேன்.. கடைசில கொடுத்தது நம்பருக்கான க்ளு என்று நினைத்து ரொம்ப நேரம் மண்டையை பிய்த்துக் கொண்டிருந்தேன்.. :)

      Delete
    4. it is the clue. Take the first letter of each word. Get its number in the alphabet. u get it.

      Delete
  7. எனக்கும் இந்த மாறி நடந்துருக்குபா... பெரும்பாலும் சுபமாத்தான் முடிவு இருக்கும்...

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்.. நல்லவங்களுக்கு நல்லது தாம்பா நடக்கும்!! கரீட்டா?

      Delete
  8. மத்தவங்க என்மேல சந்தேகப்பட்டு ஸாரி கேட்ட அனுபவம்தான் எனக்குண்டு. (நம்ம சிரிப்பு முகம் அப்புடி). நான் இப்படி சந்தேகப்பட்டு பல்ப் வாங்கினதில்ல. செல்போனை பகல் நேரத்துல என் பாக்கெட்லருந்து ஒருத்தன் உருவிட்டு, ஓடற பஸ்லருந்து குதிச்சு தலைமறைவாகி அல்வா கொடுத்த அனுபவமும் உண்டு. (நல்லவேளை... அத தலையில கொம்பு முளைச்ச பழைய சாம்சங் சீப் ரேட் போன்தான்). இப்படி பல நினைவலைகளை எழுப்பிட்டுது இந்த (சீனு சொன்னாப்பல...) சிறுகதை!

    ReplyDelete
    Replies
    1. சிறுகதையா? குறுங்கதையா? ஹஹஹா..

      Delete
  9. ஹ!ஹ!!ஹா!!!எப்புடியோ கமலா காமேஷை ('த்ரிஷா')வ நிம்மதியா பாக்க முடியாமப் போச்சு!ஹை......ஜாலி,ஜாலி!!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க.. நீங்க எல்லாம் ஆண்ட்டி த்ரிஷா குருப்பா? (anti, aunty எப்படி வேணும்னாலும் வச்சுக்கோங்க..)

      Delete
    2. அச்சச்சோ..............நமக்கு வேணாங்க!///நமக்கு ஒரு பத்மினி/ராகினி போதுங்க!

      Delete
  10. அது.....(கமலா காமேஷ் ன்னு )பேரு வச்சது,நம்ம 'செங்கொவி'!

    ReplyDelete
    Replies
    1. நான் அப்பவே நினைச்சேன்.. இது "அவர்" வேலையா தான் இருக்கும்னு.. அவருக்கு ஹன்சிகா தவிர எல்லோருமே கமலா காமேஷா தான் தெரியறாங்க.. ;)

      Delete
  11. பீமாவைப்பார்க்கவில்லையா கமலாகாமேஸ் ஆவிப்பா !ஹீ

    ReplyDelete
    Replies
    1. அதுக்கப்புறம் பார்த்து டென்ஷன் ஆனது தனிக்கதை.. "அந்தக்கால" பேவரைட் ன்னு தானே சொன்னேன்.. :)

      Delete
  12. என் செல்லையும் எடுக்க எவனோ ஒருவன் பேண்ட் பாக்கெட்டில் பிளேடு போட்டு இருந்தான் ,செல் சட்டைப் பையில் இருந்ததால் தப்பித்தது ,அப்புறமென்ன செய்றது ..பேண்ட் பாக்கெட்டில் கிடந்த பிளேடை கஷ்டப் பட்டு வெளியே எறிஞ்சேன் !
    த.ம 5

    ReplyDelete
  13. இந்த செல்லோட ஒரே தொல்லை தான்.... :)

    இப்போது நினைத்தால் சிரிப்பாக இருந்தாலும் அந்த நேரத்தில் இருந்திருக்கும் டென்ஷன் புரிகிறது!

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...