Wednesday, April 17, 2013

பாட்ஷா - திரை விமர்சனம்

                               


                                பாட்ஷான்ற பேர் கேட்ட உடனே நமக்கு தாடியோட ரஜினியும், அவருக்கு பின்னாடி பாடிகார்டா நாலு பெரும் வர்ற காட்சி நம்ம கண்ணுக்கு முன்னாடி வர்றத தவிர்க்கவே முடியாது. இது நான் ஹிந்தி பாட்ஷா வந்த போதும் சரி, இப்போ தெலுங்கு பாட்ஷா வந்த போதும் அதே விஷுவல் தான். இயக்குனர் ஸ்ரீனு வைட்டாலாவின் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வெளிவந்திருக்கும் படம் இந்த பாட்ஷா..


   
                                  இதே இயக்குனர் இயக்கி மகேஷ் பாபு  நடித்து வெளிவந்த டூக்குடு படமும் இதே கதையை ஒத்திருப்பதாக நம்ம பிலாசபி பிரபாகரன் அவர்கள் எழுதியிருந்தார்.. இந்த படம் மட்டுமல்ல தெலுங்கில் வெளியாகும் ஐந்தில் நான்கு படங்கள் இதே பார்முலாவில் தானே வெளிவருகிறது. சரி அத விடுங்க, கதைக்கு வருவோம்.. என்.டி. ஆரின் தந்தை மாபியா கும்பல் தலைவன் கெல்லி டோர்ஜியிடம்  வேலை பார்ப்பது பிடிக்காமல் அவரிடமிருந்து விலகி இரு மகன்களுடன் (என்.டி .ஆர் மற்றும் சித்தார்த் ) தனியே வாழ்கிறார் சுஹாசினி. ஒரு வெடிகுண்டு விபத்தில் சித்தார்த் உயிரழக்க, அந்த விபத்துக்கு காரணமான கெல்லி டோர்ஜியையும், அவருக்கு பக்க பலமாக இருக்கும் பொடி வில்லன்கள் ஆஷிஷ் வித்யார்த்தி, பிரதீப் ராவத் ஆகியோரை வதம் செய்கிறார். வெடி மருந்துகளை இந்தியாவிற்கு கடத்தும் கெல்லியின் முயற்சியை காஜலை காதலித்து கொண்டே எப்படி தடுக்கிறார் என்பது தான் கதை..



                                 முதல் பாதியில் காஜலை  கவர என் .டி .ஆர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அரதப் பழசானாலும் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக காஜலை  தவிர வேறெந்த பெண்ணும் உண்மையாய் இருப்பதில்லை என்று அவர் பேசும் நீள வசனம் தியேட்டரில் கைதட்டல் பெறுகிறது. பின் பாதியில் பிரம்மானந்ததின் அதிரடி காமெடிகள் நம் வயிற்றை  புண்ணாக்குகிறது. அதிலும் அவர் "When a fire fires a fire" என்று ஆரம்பித்து மூச்சு விடாமல் பேசும் இடத்தில் அசத்துகிறார். கதாநாயகி காஜல், கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார். என்.டி. ஆரின் அசுர நடனத்துக்கு முன் சுமார் தான் என்றாலும் ரசிக்க வைக்கிறார். சாயாஜி ஷிண்டே நல்ல போலிஸ். நவ்தீப் கெட்ட  போலிஸ், ரிவெஞ் நாகேஸ்வர ராவ் (எம்.எஸ்.நாராயணன்) என்ற டைரக்டர் வாயிலாக இயக்குனர் சொல்வது அனைத்து மசாலா டைரக்டர்களுக்கும் பொருந்தும்.

                               
                                  தமனின் இசையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. டைமண்ட் கேர்ள் (நம்ம சிம்பு பாடியது) மற்றும் கனகம் பாடலும் அருமையான இசைக் கோர்வை. தலேர் மேஹெந்தியின் குரலில் ஒரு பாடல் இனிமை. இத்தாலியின் அழகுகளை கண் முன் நிறுத்துகிறார் ஏழு தொடர் வெற்றிப் படங்களை கொடுத்த ஸ்ரீனு வைட்டாலா.. என்.டி. ஆரின் ரசிகர்கள் மட்டுமல்லாது எல்லா தரப்பு மக்களும் ரசித்து மகிழும் வண்ணம் இருக்கிறது இந்த தெலுங்கு பாட்ஷா.



65 / 100






6 comments:

  1. 65 என்றால் பார்க்கலாம்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ஒரு முறை பார்க்கலாம் தனபாலன்..

      Delete
  2. எனக்கு்ம் பாட்ஷான்ன உடனே சூ.ஸ்டார்தான் நினைவுக்கு வந்தார். ஆந்திர பாட்ஷாவின் அமர்க்களத்தை ரசிக்கற அளவுக்கு எனக்குப் பொறுமையில்லப்பா... ஆனா விமர்சனத்தை ரொம்பவே ரசிச்சேன்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்.. சில தெலுங்கு படங்கள் உண்மையிலேயே நல்லா இருக்கு..

      Delete
  3. 65?????? அப்ப பார்த்தே ஆகனும்..!

    ReplyDelete
    Replies
    1. ஒருமுறை பார்க்கலாம் தம்பி..

      Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...